மூச்சு திணறும் காஸாவில் இருந்து அன்பால் நிரம்பிய இதயத்துடன் பேசுகிறேன்!

Posted by S Peer Mohamed (peer) on 11/15/2023 7:00:30 AM

இவர் ரமழான் மஹ்மூத். வயது 9. 2014ல் காஸாவில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அவர் பிறந்தார். அன்றைய தினம் அவரது வீடு சியோனிச பயங்கரவாதிகளின் குண்டுவீச்சில் அழிக்கப்பட்டது. தந்தை பலத்த காயம் அடைந்தார். அவரது சித்தப்பா (தந்தையின் சகோதரர்) வீர மரணம் அடைந்தார். ஹாஃபிழும்(தூய திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்) ஹிஃப்ழ் ஆசிரியருமான சித்தப்பாவின் பெயர் தான் அவருக்கு சூட்டப்பட்டது.

கடினமான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த ரமழான் அசாதாரணமான திறமைகளை வெளிப்படுத்தினார். தடைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியில் அவரது திறமைகளை பெற்றோர் வளர்த்தெடுத்தனர். இரண்டரை வயதில் ரமழானின் 27ஆம் நாள் இரவு தனது முதல் சொற்பொழிவை சொந்த ஊரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் ரமழான் மஹ்மூத் நிகழ்த்தினார். அவர் நான்கு வயதில் எடுத்த ஒரு அற்புதமான வீடியோ உள்ளது.

ஷெய்க் ராதிப் அந்நாபுல்ஸியின் “லா தஃக்லக்.. அல்லாஹு மௌஜூத்” (கவலைப்படாதே, அல்லாஹ் இருக்கிறான்) என்ற தலைப்பிலான உரையை தனக்கே உரிய பாணியில் நிகழ்த்தினார். பின்னர், அவர் நிறைய அறிவுறுத்தல் மாதிரி உரை கிளிப்புகளை உருவாக்கினார். அதற்கு தேவையான அறிவும் அவருக்கு உண்டு. குர்ஆனில் உள்ள பத்து ஜூஸ்களை மனப்பாடம் செய்துள்ளார். இமாம் நவவியின் நாற்பது ஹதீஸ்கள். வரலாறு, கதைகள், கவிதைத் தொகுப்புகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்துள்ளார். நபிமார்களின் வரலாறு மற்றும் பண்புகளை விவரிக்கும் புத்தகங்களுடன் அவரது கல்வி தொடங்கியது.சிறு வயதில் இருந்தே தூய திருக்குர்ஆனை கேட்டுக் கொண்டே தூங்குவது அவரது வழக்கமாகிவிட்டது. அன்றாடம் அவரது குடும்பத்தினர் குர்ஆனை படிப்பார்கள். விவாதிப்பார்கள்.

இதையெல்லாம் ஏன் இங்கு கூற வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். சில தினங்களுக்கு முன்பு ரமழான் மஹ்மூத் ஒரு விருதை பெற்றுக் கொள்ள குவைத் நாட்டிற்கு செல்வதாக இருந்தது. குவைத்தில் இயங்கும் தஃவா (இஸ்லாமிய அழைப்பியல்) மையம் ஒன்று அவருக்கு ஸுஃபராவுல் ஹுப்பு (அன்பின் தூதர்கள்) என்ற விருதை வழங்க முடிவுச் செய்திருந்தது. போர் காரணமாக பயணம் தடைப்பட்டதால் சியோனிச பயங்கரவாதிகளின் குண்டுவீச்சில் சிதறடிக்கப்பட்ட அவரது வீட்டின் சிதிலங்களின் முன்னால் நின்று கொண்டு அவர் ஆற்றிய உரையின் வீடியோ பதிவை விருது வழங்கும் நிகழ்ச்சியில் அந்த தஃவா அமைப்பு திரையிட்டது. (வீடியோ பதிவு கமென்டில் உள்ளது). கட்டாயம் பாருங்கள். இதுவரை அவரை குறித்து கூறிய அறிமுக தகவல்கள் அந்த வீடியோவில் அவர் கூறியதுதான். பொருள் தெரியாதவர்களுக்காக அந்த வீடியோ பதிவில் உள்ள உரையின் சுருக்கமான மொழியாக்கம் கீழே 👇👇👇👇👇👇👇


நமது ஹபீப்(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய மண்ணில் இருந்து நான் பேசுகிறேன். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,"உங்களுக்கு மிகவும் சிறந்த போர்க்களம் அஸ்கலான்"(வரலாற்று ரீதியாக காஸாவின் ஒரு பகுதிதான் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அஸ்கலான். சியோனிஸ்டுகள் அஷ்கலான் என்று அழைக்கின்றனர்). அந்த அபிமானத்திற்குரிய காஸாவில் இருந்து நான் பேசுகிறேன்! சியோனிச வாரிசுகளின் தலைகளை தரையில் அமிழ்த்திய ஜீரோ பாயிண்டில் நேருக்கு நேராக நின்று சியோனிஸ்டுகளை கொன்ற போராளிகளின் காஸா. இடையுறாமல் இரத்தம் சிந்தும் போதும் ஓயாமல் எதிர்த்து போராடும் காஸா. இந்த தீனின் பாதையில் சிறப்புக்குரிய மனிதர்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் காஸா. ஆயிரக்கணக்கான உயிர் துறந்த தியாகிகளையும், பல்லாயிரக் கணக்கான வாழும் தியாகிகளையும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் காஸா. இந்த பாதையில் பல தசாப்தங்களாக சந்திக்கும் எண்ணிலடங்கா துயரங்களை பொருட்படுத்தாமல் உறுதியான போராளிகளை தயார்படுத்தும் காஸா.


2014 ஆம் ஆண்டு போரின் போது எனது வீட்டிற்கு வெளியே உள்ள அகதிகள் முகாமில் தான் நான் பிறந்தேன். உயிர் தியாகிகளும், காயமுற்றவர்களுகும் ஆங்காங்கே கிடக்கும் நிலையில் தான் இந்த மண்ணில் நான் பிறந்தேன். அல்லாஹ் நன்மையை(ஃகைர்) தீர்மானித்திருப்பது நாம் மிகவும் சிரமமாக கருதும் இத்தகைய கட்டங்களில் அல்லவா!
நான் அறிவு மற்றும் தஃவா( இஸ்லாமிய அழைப்பியலின்) பாதையில் இருக்கிறேன். அல்லாஹ்வின் பாதைக்கு அழைப்பதன் மூலமும், குத்ஸ் விவகாரத்தில் கவனத்தை ஈர்ப்பதன் மூலமும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். நான் இந்த உம்மத்திற்கு(சமூகத்திற்கு) பயனளிப்பவனாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.


என்னிடமும் முழு முஸ்லிம் இளைஞர்களிடமும் சில விசயங்களை விழிப்புணர்வூட்ட விரும்புகிறேன்.
அல்லாஹ்வின் வேதத்தைப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.. அல்லாஹ்வின் தூதரின் வழியைப் பின்பற்றுங்கள்.ஃபலஸ்தீனத்தின் மீது உங்கள் கண்களை பதித்திருங்கள். ஃபலஸ்தீனத்தின் வரலாற்றை நாம் கற்க வேண்டும், கற்பிக்க வேண்டும். ஃபலஸ்தீனம் என்பது உலக முஸ்லிம் உம்மத்தின் பிரச்சனை, நமது முதல் கிப்லாவின் பிரச்சனை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தப் புனித பூமியின் சுதந்திரத்திற்காக அல்லும் பகலும் பாராமல் தயாராகும் சிங்கக் குட்டிகளின் தேசம் காஸா என்பதை கற்பிக்க வேண்டும்.


போராட்டத்தில் நம்பிக்கையாளர்களுக்கு வெற்றி நிச்சயமான நாட்கள் வரவிருக்கின்றன. இந்த மாபெரும் வெற்றியில் உங்கள் சொந்த அடையாளங்களையும் பதிவு செய்யுங்கள். “அது எப்போது நிகழும் என்று உங்களிடம் கேட்டால் அது உடனே நிகழும் என்று சொல்லுங்கள்."


உங்களிடமிருந்து இந்த விருதினை நேரடியாக வாங்க முடியவில்லை. ஆனால் குத்ஸின் வாயிலில் வைத்து உங்களிடமிருந்து இந்த விருதினை பெற விரும்புகிறேன். நான் வெற்றியின் ஃபத்ஹ் தொழுகையை நிறைவேற்றி விட்டு அந்த விருதை உங்களிடமிருந்து பெறும் நாளுக்காக காத்திருக்கிருப்பேன்.. பைத்துல் மக்திஸ் வாயிலில் டாக்டர் முஹம்மது அல்-இவதி (குவைத்தில் உள்ள ஒரு பிரபலமான தாயீ(இஸ்லாமிய அழைப்பாளர்)) அவர்களிடமிருந்து இந்த விருதை பெற வேண்டும். நாம் அனைவரும் அங்கு சந்திக்க வேண்டும். இது அல்லாஹ்வுக்கு மிக மிக எளிதான காரியம் அல்லவா!


நீங்கள் காண்பதைப் போலவே நான் இடிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் இருந்து தான் இந்த காணொளியை பதிவு செய்கிறேன். பாருங்கள்! இது தான் நாங்கள் காஸாவில் வாழும் தருணங்கள். இதுதான் சிறார்களுக்கான காஸாவில் உள்ள எங்களின் வாழ்க்கை! உலகில் மற்ற குழந்தைகள் வளரும் அழகான சூழ்நிலைகள் எங்களுக்கு மறுக்கப்படுகின்றன. எப்போதும் குண்டுவீச்சு. எந்த நேரத்திலும் ஏதேனும் அன்பானவர்களின் மரணம். இடிந்து கிடக்கும் இந்த கட்டிடம் எனது வீட்டில் இருந்து 20 மீட்டர் தொலைவில் உள்ளது.


நான் இந்த காணொளியை பதிவு செய்து கொண்டிருக்கும் போது சியோனிஸ்டுகள் எங்கள் மீது ஒரு குண்டை வீசக்கூடும். அவ்வாறு அல்லாஹ் எங்களை ஷஹீதுகளாக(உயிர் தியாகிகளாக) தேர்ந்தெடுப்பான்.


நீங்கள் தொலைக்காட்சி திரையில் பார்ப்பதைப்போலவே ஆக்கிரமிப்பு எதிரிக்கு குழந்தைகள், பெரியவர்கள் என்ற பாகுபாடு இல்லை. எங்களை கொன்றொழிக்க வேண்டும். அவர்களுக்கு மனிதாபிமானம் என்றால் என்ன? என்று தெரியாதது மட்டுமல்ல. அவர்கள் பெரும்பாலும் குழந்தைகளான எங்களைத்தான் குறி வைக்கிறார்கள்.‌ ஏன் எங்கள் மீது இத்தகைய காட்டுமிராண்டித்தனமான கொடூரத்தை இழைக்கிறார்கள்? ஆனால் காஸாவில் உள்ள மனிதர்களாகிய நாங்கள் இந்த கொடூரமான சூழல்களை வென்றெடுப்போம். இந்த செய்திகளை பகிர்ந்து கொண்டே இருப்போம். காஸாவில் தொடர்ச்சியாக குண்டுவீச்சு, தகர்ப்பு மற்றும் முற்றுகைக்கு உள்ளான எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!


Courtesy: DrCK Abdulla






Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..