சிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின்! அசரடிக்கும் டீம் 5 வந்தார் ரகுராம் ராஜன்

Posted by S Peer Mohamed (peer) on 6/22/2021 5:27:01 AM

 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு இன்னொரு சிக்சரை இன்று விளாசியுள்ளது. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் போல, மைதானத்தை தாண்டிப் போய் விழுந்துள்ளது பந்து.

அருமையான டீம் ஒன்றை உருவாக்கியுள்ளார் ஸ்டாலின் .

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு நடைபெறும் முதல் சட்டசபை கூட்டத் தொடரின் முதல் நாளில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

அப்போது அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்புதான் இந்த வரவேற்புக்கும், ஆரவாரத்திற்கும் காரணம்.

முதல்வருக்காக உருவாக்கப்படும் நிபுணர் குழு.. சூப்பர்!
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,

பொருளாதார நிபுணர்கள் அரவிந்த் சுப்பிரமணியன், ஜான் ட்ரீஸ், எஸ்.நாராயணன் ஆகிய ஐந்து தலை சிறந்த பொருளாதார நிபுணர்கள்

தமிழ்நாடு முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை நிபுணர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்பதுதான் அந்த அறிவிப்பு.

ஜெயரஞ்சன் நியமனம் சமீபத்தில், மாநில வளர்ச்சி குழு துணைத் தலைவராக ஜெயரஞ்சன் நியமனம் செய்யப்பட்ட போது எழுந்த ஆரவாரத்தை விட இப்போது அதிக வரவேற்பு எழுந்துள்ளது.

அதிலும் ரகுராம் ராஜன் நியமனம் ரொம்பவே முக்கியமானது. பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் அதி முக்கியமானது.

ஆர்பிஐ ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், பொருளாதார அறிஞர் மட்டும் கிடையாது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்ற மிகப்பெரிய பதவியில் இருந்தவர்.

2013ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2016ம் ஆண்டு செப்டம்பர் வரை, இவர் ஆர்பிஐ ஆளுநராக இருந்தார்.

2003 முதல் 2006 வரை, சர்வதேச நாணய நிதியம் இயக்குநர் மற்றும் தலைமை பொருளாதார வல்லுநராக இருந்தார்.

இப்படி மிகப்பெரிய அனுபவ அறிவு கொண்டவர் ரகுராம் ராஜன். அவர் கடனால் தத்தளிக்கும் தமிழ்நாட்டின், பொருளாதார ஆலோசனைக் குழுவிற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியை சமாளித்தவர் பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜன் கடந்த 2007-08 ஆம் வருடம் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியையே சாமர்த்தியமாக சமாளித்து பல ஆலோசனைகளை அளித்தவர்.

ஏற்கனவே நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் தேர்ந்த கல்வியாளர். பொருளாதாரம் படித்தவர். பல சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

அவரோடு ரகுராம் ராஜன் கைகோர்க்கும்போது, அந்த யோசனைகள் தமிழகத்தை அடுத்தகட்டத்திற்கு முன்னேற்ற உதவும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

நிதியை பயன்படுத்த ஆலோசனை

தமிழகம் எப்போதுமே, சமூக நீதி, கடையனுக்கும் கடைத் தேற்றம் என்ற கொள்கை கொண்ட மாநிலம். எனவே மக்களுக்கு விலையில்லா பொருட்கள் என்ற பெயரில் வசதி வாய்ப்புகள் செய்து தரப்படும், ரேஷன் கடைகளின் சிறந்த கட்டமைப்பை பயன்படுத்தி, பொருட்கள் மட்டுமின்றி, பணத்தையும் வழங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளோம்.

இவற்றுக்கான நிதியாதாரங்களை பாதுகாப்பதோடு, நிதிச் சிக்கலை தீர்க்க ரகுராம் ராஜனின் பரந்து விரிந்த அனுபவம் பலன் தரும்.

அரசியல் முக்கியத்துவம்

பொருளாதார ரீதியாக ரகுராம் ராஜனின் நியமனம் முக்கியத்துவம் என்றால், அரசியல் ரீதியாகவும் இந்த நியமனம் முக்கியத்துவத்தோடு பார்க்கப்படுகிறது.

ஏனெனில், 2014ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, ரகுராம் ராஜனின் கொள்கைகள், வழிகாட்டுதல்களை ஏற்க மறுத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ரகுராம் ராஜன் ராஜினாமா

இந்த நிலையில் ஆர்பிஐ ஆளுநர் பதவியிலிருந்து ரகுராம் ராஜன் ராஜினாமா செய்தார். அவருக்கு பாஜக அரசு நெருக்கடி கொடுத்ததாக காங்கிரஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியது.

பதவியை ராஜினாமா செய்த பிறகு சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்கினார் ரகுராம் ராஜன்.

இருப்பினும், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை அவர் தொடர்ந்து விமர்சித்துதான் வருகிறார்.

மத்திய அரசு தனது தேர்தல் வெற்றிக்கு பிறகு, அரசியல் மற்றும் சமூக கொள்கைகளை
நிறைவேற்றத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது.

பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார் ரகுராம் ராஜன்.

பண மதிப்பிழப்பு, சரியாக அமல் படுத்தப்படாத ஜிஎஸ்டி போன்றவை இந்திய பொருளாதாரத்தின் வேகத்தை குறைத்து விட்டதாகவும் ரகுராம் ராஜன் குற்றம் சாட்டியிருந்தார்.

ஜெயரஞ்சனும், மத்திய அரசின் பொருளாதார கொள்கையால்தான் நாடு இப்படி பாதிப்புகளை சந்தித்து வருகிறது எனக் கூறி வருபவர்தான்

விமர்சன சாட்டைநோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ அபிஜீத் பானர்ஜியின் மனைவியாகும்.

ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியம் மட்டுல்ல, அபிஜீத் பானர்ஜியும், மோடி அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் செய்பவர்கள்தான்.

ஜெயரஞ்சனும் அப்படித்தான். இவர்கள் அனைவரும், தமிழக அரசின் பணியில் தங்களை ஈடுபடுத்துவது,

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு நேர் எதிராக தமிழ்நாடு பயணிக்கப் போவதற்கான முன் அறிவிப்பு என்று தான் பார்க்கப்படுகிறது.

இதனால்தான் ரகுராம் ராஜன் நியமனம், அரசியல் ரீதியாகவும் அதிர்வுகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

யார் இவர்கள்?பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றவர்கள் குறித்த சிறு அறிமுகம்:

ரகுராம் ராஜன்- ஆர்பிஐ முன்னாள் ஆளுநர்.

எஸ்தர் டஃப்லோ- நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர், பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜியின் மனைவி.

அரவிந்த் சுப்பிரமணியன்- இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகர்.

எஸ். நாராயணன்- இந்தியாவின் முன்னாள் நிதித்துறை செயலர்.

ஜான் த்ரே- பொருளாதார நிபுணர், ஏழ்மை மற்றும் எளியவர்கள் குறித்த பார்வை கொண்டவர்.

அமர்த்தியா சென் உடன் இணைந்து பல புத்தகங்களை எழுதியவர். தாராளமயமாக்கல் கொள்கையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

வாழ்க வளர்க தமிழ்நாடு.....






Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..