சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம்

Posted by S Peer Mohamed (peer) on 6/28/2020 2:03:03 PM

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரியை காட்டுமிராண்டித்தனமாக அடித்து கொலை செய்துள்ள பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கனேஷ் ஆகிய உதவி ஆய்வாளர்களில் பாலகிருஷ்ணன் என்பவர் 2012 ம் வருடத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவுக்கு உட்பட்ட திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் பணியாற்றினார்

அப்பொழுது ஒருநாள் அவர் மாலையில் வாகனதணிக்கையின் ஈடுபட்டிருந்த போது இரண்டு சக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றதற்காக எனது நண்பர் ஒருவரை தடுத்து நிறுத்தி அதிகார துஷ்பிரயோகத்தால் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று இரவு 11 மணிவரை வைத்து அடித்து நொறுக்கிவிட்டு விடுவித்து விட்டார்.

மறுநாள் காலையில் தான் இந்த சம்பவம் எங்களுக்கு தெரியவந்தது உடனே நண்பரை போய் சந்தித்தோம் நண்பரின் பின்பக்கம் முழுவதும் சரமாரியான காயத்தோடு படுத்திருந்தார் அதை பார்த்த எங்களுக்கோ ஜீரணிக்க முடியவில்லை பைக்கில் மூன்று பேர் சொல்வதெல்லாம் அப்படியொரு தேசதுரோகமான செயலா இதுக்குலாம் இப்படி அடிக்கனுமா என்று தவறு செய்தால் அதற்கான வழக்கை பதிவு செய்யாமல் இப்படியா மனிதாபிமானம் இல்லாமல் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து உதைப்பார்கள் என்ற மன வேதனையோடு நண்பரின் காயத்தையெல்லாம் புகைபடமாக எடுத்துக்கொண்டு அவரையும் அழைத்துக்கொண்டு திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் ஒரு புகாராக கொடுத்தோம்.

ஆனால் அந்த புகாருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாகதெரியவில்லை. உடனே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணிபுரியும் எனது நண்பரிடம் தெரிவித்தோம் நண்பரும் உடனே கிளம்பி திருநெல்வேலிவேலிக்கு வந்தார் அவரும் காயத்தையெல்லாம் பார்த்து வேதனையோடு இதை இப்படியே விடக்கூடாது உடனே இந்த புகைபடங்களையெல்லாம் இணைத்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஒரு புகார் ஒன்று அளிப்போம் என்று சொன்னார் நாங்களும் ஒப்புக்கொண்டு புகார் ஒன்றை எழுதி அனுப்பிவிட்டு எங்கள் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

நாட்கள் வாரங்களாகி மாதங்களாக கடந்தநிலையில் எனது வழக்கறிஞர் நண்பரிடமிருந்து ஒரு அழைப்பு ராஜன் நாம் மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகார் விசாரணைக்கு வந்துவிட்டது. அவர் மீது நாம் அளித்த புகாரும் ஆதாரங்களும் வலுவாக இருப்பதால் அவர் வேலைக்கு கூட ஆபத்து வரலாம் அதனால் உதவி ஆய்வாளர் என்னை சந்தித்து அண்ணன் நான் ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து அரசு வேலைக்கு வந்திருக்கேன் இந்த வேலையும் இல்லையென்றால் என்குடும்பம் என்ன நிலை ஆகுமென்று தெரியவில்லை னு கெஞ்சுராப்ல எனக்கு என்ன சொல்ரதுனு தெரியல எனக்கும் அவர பார்த்தா பாவமாகத்தான் இருக்குனு என்னிடம் சொல்ல.
நானும் வழக்கறிஞர் சொன்ன விசயத்தையெல்லாம் நண்பணிடம் போய் இப்படி எஸ் ஜ சொல்ராப்லயாம் என்ன பண்ணலாம் கேட்டப் போது அவன் கொஞ்சம் தீவிரமாகத்தான் இருந்தான்.

அவருக்கு எப்படியாவது தண்டனை வாங்கி கொடுத்துவிடவேண்டுமென்று ஆனால் அன்று நாங்கள் தான் அவனிடம் சொன்னோம் அவர்தான் பணிமாறுதல் வாங்கிக் கொண்டு வேறு ஊருக்கு போய்ட்டாரே இனி ஏம்ல கோட்டு கேசுன்னு அலைஞ்சிட்டு இருக்க போற அதுவுமில்லாமல் நீ எஸ் ஜ மேல வழக்கு போட்டிருப்பதால் உன் மேல தேவையில்லாமல் வழக்குகளை போட்டு உன்னை நிம்மதியா இருக்கவிடமாட்டாங்க அதனால சவத்த பேசாம வழக்க வாபஸ் வாங்கிட்டு நிம்மதியாக இருலன்னு ஒரு சாதாரண மனிதனின் மனநிலையில் சொல்லிவிட,,

மனம் முழுவதும் வலியிருந்தும் அவனும் ம்ம்... சரியென்று வழக்கை வாபஸ் வாங்க சம்மதித்து விட்டான் அதோடு அந்த வழக்கும் முடிந்து போனது. ஆனால் இன்று அதே உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன்தான் இரு அப்பாவி வியாபாரிகளை அதே அராஜகத்தாலும் அதிகார துஸ்பிரயோகத்தாலும் அடித்து கொன்றிருக்கிறார் என்று தெரிய வந்த போதுதான் ஏதோவொரு குற்ற உணர்ச்சி குத்தி குடைகிறது.

அய்யய்யோ அன்றே மனித மிருகத்திற்கு தண்டனை வாங்கி கொடுத்திருந்தால் இன்று இப்படி இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கபடிருக்காதே என்று

ஆர் ராஜன்

முகநூல் பதிவு:
















Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..