EMAN :அமீரக ஈமான் கிரிக்கெட் 2020

Posted by S Peer Mohamed (peer) on 2/12/2020 4:30:43 PM

 07.02.2020 அமீரகத்தில் மற்றுமொரு வெள்ளியாக மற்றவருக்கு இருந்தது. ஆனால் ஏர்வாடி சகோதரர்களுக்கு கொண்டாட்டம், குதூகலம், சகோதரத்துவமாக மலர்ந்தது. அல்லாஹ் வின் மாபெரும் கிருபையால் அன்று துபை நஹ்தா பகுதியில் உள்ள மைதானத்தில் வைத்து ஈமான் சார்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளே இந்த கொண்டாட்டம், குதூகலம், சகோதரத்துவத்திற்கு காரணம்.

கிரிக்கெட், வாலிபால், கேரம் என விளையாட்டுக்களுடன், மதிய விருந்துடன் கூடிய இந்த மகிழ்வான நிகழ்வில் ஏறத்தாழ 90 ஏர்வாடி சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் ஈமான் 2020 கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் நான்கு அணிகள் பங்கேற்றன.

Abudhabi Wolves – ADW கேப்டன் - யூசுப்
Burdubai Knights - BDK கேப்டன் - அக்ரம்
Sharjah Smashers – SS கேப்டன் - ஜைனுல்
Deira Lions - DL கேப்டன் - ஹசன்

ஒவ்வொரு அணியும் மற்ற 3 அணிகளுடன் ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெற்ற லீக் ஆட்டங்களில் தலா 2 வெற்றிகள் பெற்ற அபுதாபி மற்றும் பர்துபை அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.இறுதி போட்டிக்கு அக்ரம் தலைமையிலான Burdubai Knights அணியும் யூஸுப் தலைமையிலான Abudhabi Wolves அணியும் தேர்வாகி ஈமான் 2020 க்கான சுழற்கோப்பை யை யார் தட்டி செல்வது என்ற பலப்பரிசைக்கு களம் கண்டது.

டாஸ் வென்ற அபுதாபி அணி முதலில் பேட்டிங் செய்தது. தனது அபார ஆட்டத்தால் 5 ஒவர்களில் 49 ரன்கள் அடித்தது. 50 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிய பர்துபை விரைவாக இலக்கை நோக்கி பயணித்தது. ஆனாலும் இறுதியில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 42 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

அபுதாபி அணிக்கு மிகுந்த சவாலாக திகழ்ந்த பர்துபை அணி வெற்றி வாய்ப்பை தக்க வைக்க இறுதி வரை போராடி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அபுதாபி அணி ஈமான் 2020 சுழற்கோப்பையை தட்டிச் சென்றது. அபுதாபி அணியின் கேப்டன் யூசுப் அவர்கள் வெற்றிக் கோப்பையை பெற்றுக்கொண்டார்.

இறுதி போட்டியில் தோல்வியடைந்த பர்துபை அணிக்கு ஈமான் 2020 ரன்னர்அப் சுழற்கோப்பை வழங்கப்பட்டது இந்த லீக் ஆட்டங்களில் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கான சிறப்பு விருதுகளை கீழ்காணும் வீரர்கள் தட்டி சென்றனர்.

ஆட்ட நாயகன் : ரிஸ்வான்
அதிக ரன்கள் : மீரான்
அதிக விக்கெட்கள் : ஹூசைன்
தொடர் நாயகன் : இசக்கி ராஜா

அஷ்ரஃப் காகா (புதுமனை) போட்டிகளில் நடுவராக இருந்து சிறப்பித்தது 90 களில் ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த போட்டிகளை அக்கால கிரிக்கெட்டர்களுக்கு நினைவூட்டி மகிழ்வூட்டியது.

கிரிக்கெட் போட்டி ஏற்பாடுகளை ஜெய்னுல் தலைமையிலான ஈமான் விளையாட்டு குழு சிறப்பாய் செய்திருந்தது. சகோதரர் அக்ரம் போட்டிக்கான பதிவுகள் மற்றும் போட்டி நடைபெறும் போது ஏற்பாடு செய்திருந்த டிஜிட்டல் அப்டேட் ஏற்பாடுகள் புதுமையாகவும் ஹைலைட்டாகவும் அமைந்தது. (குறிப்பு : லீக் ஆட்ட்ங்கள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கும் ஸ்கோர் போர்ட் விபரங்களுக்கும் கீழுள்ள செய்தியை பார்க்கவும் )

ஒருபுறம் சமகால கிரிக்கெட் வீரர்கள் ஈமான் 2020 சுழற்கோப்பைக்கான பலப்பரிட்சையில் இருக்கும்போதே மைதானத்தின் மறுபுறம் முன்னால் கிரிக்கெட் வீரர்களும் வருங்கால கிரிக்கெட் வீரர்களும் தத்தமது திறமைகளை வெளிக்காட்டி ஆச்சரியப்படுத்தினர்.

வாலிபால் களத்தில் களமாடிய வீரர்களில் சூப்பர் சீனியர் வீரர்களான சகோ.AM பீர், சகோ பேங்க் கனி, சகோ துபை டிவி பீர் போன்றோர் சமகால வீரர்களுக்கே டஃப் கொடுத்தது மட்டுமல்லாமல் வாலிபாலுக்கான பெஸ்ட் அட்டாக்கர் மற்றும் பெஸ்ட் சர்வீஸ் க்கான கோப்பைகளையும் தட்டி சென்றனர்.

கேரம் விளையாட்டில் ஃபர்ஹான் /ஷஃபீக் அணி மற்றும் அபூபக்கர் / அஹ்மத் முஹைதீன் அணிகள் கோப்பையை தட்டி சென்றது திட்டமிட்ட இந்த நிகழ்ச்சி வானிலை காரணங்களால் தொடர்ச்சியாக மாற்றியமைத்திருந்த நிலையில் 90 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் பங்குகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடதக்கது.

வீரர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகளில் ஈமான் நிர்வாகிகள் மூத்த உறுப்பினர்கள் மற்றும் சிட்டி கோல்ட் துபை யின் நிர்வாக மேலாளர் சகோ. ஜாஃபர் ஆகியோர் சுழற்கோப்பைகளை வழங்கி வீரர்களை கவுரவித்தனர்.

நிகழ்வில் பேசிய அமீரக ஈமான் தலைவர் சகோ ஹனீஃப் வருடாந்திரம் நாம் நடத்தும் இதுபோன்ற கிரிக்கெட் விளையாட்டு சந்திப்புகள் மூலமாக நமதூர் மக்களுக்கான அறிமுகம் மற்றும் நல்லதொரு புரிந்துணர்வுகளும் ஏற்படுகிறது என்றும் விளையாட்டுக்களின் மூலமாக கல்வி, வேலை வாய்ப்புகளில் உள்ள கோட்டா முறைகளை எடுத்து கூறியும் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களை முறைப்படி தேவையான பயிற்ச்சிகளை கொடுத்து தயார் செய்ய வேண்டும் எனவும் ஊரிலும் அமீரகத்திலும் இதனை முன்னெடுக்க தேவையான ஆலோசனைகளை வழங்குமாறும் கேட்டு கொண்டு, ஈமான் அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் சுழற்கோப்பைகளை ஸ்பான்ஸர் செய்த சிட்டி கோல்ட் துபை நிறுவனத்தார்களுக்கும் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.

ஈமான் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட இளந்தலைமுறையினர் தொடர்ந்து ஈமானின் அனைத்து அறப்பணிகளிலும் தங்களை ஈடுபடுத்தி இறைவனருளால் ஈமானை மேலும் வலுப்படுத்துவர். நிகழ்ச்சிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள்,ரெஃப்ரஷ்மெண்ட், மதிய உணவு போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் ஈமான் ஈவெண்ட் மேனெஜ்மெண்ட் டீம் சகோ அமீர் புஹாரி தலைமையில் சகோதரர்கள் முஹைதீன்( சிட்டி கோல்டு,) அக்ரம், அல்தாப், தெளபிக், ஜெய்னுல், ஷபீக், அஹ்மத் முகைதீன், அப்துல் பாஸித், ஹசன், அபுபக்கர் கொண்ட தன்னார்வலர்கள் குழு சிறப்பாய் செய்திருந்தனர்.

Cricket Score: https://cricheroes.in/tournament/94148/ERUVADI-PREMIER-LEAGUE-2020

Photos: 
http://nellaieruvadi.com/eman/photos.asp?dNam=61_2020_Sports_Day-I

http://nellaieruvadi.com/eman/photos.asp?dNam=61_2020_Sports_Day-II






Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..