கொட்டும் கனமழை... நிரம்பி வரும் தமிழக அணைகள்- விவசாயிகள் மகிழ்ச்சி

Posted by S Peer Mohamed (peer) on 9/21/2017 12:03:33 PM

 

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லையில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டம் திற்பரப்பு அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

சேர்வலாறு அணையின் உச்சநீர்மட்டம் 156 அடி. நீர் இருப்பு, 88.91 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1913.43 கன அடி ஆகும்.

மணிமுத்தாறு அணையின் உச்சநீர்மட்டம் 118 அடி. நீர் இருப்பு, 43 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 807 கன அடி ஆகும்

பாபநாசம் அணை பாபநாசம் அணையின் மொத்த கொள்ளளவு 143 அடி. நீர் இருப்பு, 83.80 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 2804.72 கன அடி ஆகும். வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 304.75 கனஅடி.

குமரி மாவட்ட அணைகள் பேச்சிப்பாறை அணையின் மொத்த கொள்ளளவான 48 அடியில் தற்போது வரை 21 அடி நீர் வரத்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2086 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணியின் மொத்தக் கொள்ளளவான 77அடியில் தற்போது 45.10 அடி நீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1255 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணை
ஒரே நாளில் 124 அடியிலிருந்து 126.10 அடியாக உயர்த்துள்ளது. அணையின் நீர் கொள்ளளவு 3,856 மில்லியன் கன அடியாகவும், 218 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 142 அடியை விரைவில் எட்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் மகிழ்ச்சியடைத்துள்ளனார்.

மேட்டூர் அணை கர்நாடகா, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மிதமான மழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சற்று உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.16 அடியிலிருந்து 77.39 அடியாக உயர்ந்துள்ளது.

வைகை அணை இதேபோல் வைகை அணை நீர் மட்டமும் 36.81 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 61 கன அடியாகவும், நீர் கொள்ளளவு 717 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து 40 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு, சோத்துப்பறை அணைகள் நிரம்பிவழிகின்றன.

பில்லூர் அணை நிரம்பியது
12,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சிறுவாணி அணை மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மொத்தம் 50 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணை தற்போது 42 அடியை தாண்டி உள்ளது.

திருமூர்த்தி அணை
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி இரண்டாவது நாளாக அருவிக்குச் செல்ல அறநிலையத் துறையினர் தடை விதித்துள்ளனர். 60 அடியாக உள்ள திருமூர்த்தி அணை நிரம்பி வருகிறது. இதேபோல 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை நீர்மட்டம் தற்போது 85 அடியாக உள்ளது. தொடர் மழை காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேஆர்பி அணை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை முழு கொள்ளளவான 52 அடி நீர் இருப்பில் 51 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 355 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.








Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..