முஸ்லிம்கள் ஏன் ஹிந்துக்களிடம் ஒட்டுவதில்லை..?

Posted by Haja Mohideen (Hajas) on 7/6/2017 10:45:25 AM

 

முஸ்லிம்கள் ஏன்
ஹிந்துக்களிடம் 
ஒட்டுவதில்லை..?

கத்தார் பழ மாணிக்கம் விளக்கம்..!

*எந்த விஷயத்திலும் முஸ்லிம்கள் உங்களோடு ஒட்டாமல் தனித்து நிற்பதேன்?*

என்பது முஸ்லிம் அல்லாத பலரின் கேள்வி.

இதோ என் பதில்!!

Image may contain: 1 person, smiling, text

*அவர்களின் முன்னோர்கள் நம் இந்தியதேச விடுதலைக்கு அவர்களின் சதவீதத்திற்கும் அதிகமாக உழைத்தவர்கள். அதற்காக பட்டம், பதவி, கல்வி, செல்வம் போன்றவற்றைத் துறந்த முஸ்லிம்கள்,அவர்களுக்காக உருவாக்கப்பட்ட இஸ்லாமிய தேசம் பாகிஸ்தானுக்கு வாருங்கள் என அழைத்த போதும்கூட அவர்கள் இந்த மண்ணைவிட்டு வரமாட்டோம்! எங்கள் இந்துச் சகோதரர்களோடு வாழ்வோம்! என்று உறுதியாக நின்றவர்கள் அவர்கள்! ஆனால் இன்றைய மதவெறி அரசியல் அவர்களை பிரிக்க நினைக்கும் இக்காலகட்டத்தில் சில விஷயங்களை நீங்கள் சிந்திக்க வேண்டும்!*

*அவர்கள் முஸ்லிம்கள்; அவர்கள் மார்க்கம் 
"உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்; கரத்தாலும் நாவாலும் பிறருக்கு தீவினை செய்யாதீர்"* என்பதால்

*காசைக் கரியாக்கி காற்றை மாசாக்கி, காதை செவிடாக்கி வீதியை குப்பையாக்கி, 
நோயாளிகள் பதற,குழந்தைகள் துடிக்க ,குடிசைகள் எரிய காரணமாவதால் 
தீபாவளியை,அவர்கள்கொண்டாடுவதில்லை 
இதனால் இந்த தேசத்திற்கு நன்மையா தீமையா ?இதனால் யாருக்கு என்ன நட்டம் ? 
மாறாக இந்த நாட்டுக்கு நன்மையே !*

*வீதிகளை அடைத்து,நீர் நிலைகளை மாசுபடுத்தும்,பக்திக்காக அல்லாமல் மதவாத 
சக்தியைக் காட்டும் அரசியலாக மட்டுமே 
இருப்பதால் இந்துதுவா விநாயகர் சதுர்த்தியில் அவர்கள் பங்கெடுப்பதில்லை !*

*இதனால் இந்த தேசத்திற்கு நன்மையா தீமையா ?*

*சுற்றுச் சூழலை மாசுபடுத்தக் கூடாது என்பதால் பழையனவற்றை எரிக்கும் போகியில் கலந்து கொள்வதில்லை ! போகியின் பெயரால் தமிழர்களின் பல அரிய பொக்கிஷங்களை, ஒலைச்சுவடிகளை எரிக்கச் சொல்லி அவர்களை வரலாற்று அனாதையாக்கிய இந்துதுவா நஞ்சையும் அவர்கள் வெறுக்குகிறார்கள்.*

*படைத்தவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன் என்பதால்,ஆயுதங்களை வணங்கும் ஆயுத பூஜையிலும் காகிதங்களை வணங்கும் சரஸ்வதி பூஜையிலும் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை !இது உங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதால் அல்ல !*

*தீமைகளின் தாய்* *மது* *என அவர்களின் மார்க்கம் தடுப்பதால் அவர்கள் மது அருந்துவதில்லை! ஆகையால் அவர்களால் மதுவால் ஏற்படும் விபத்துகள் இல்லை, குடும்ப சமூக பிரச்னைகள் இல்லை கலவரம் இல்லை, வழக்குகள் இல்லை ! இதனால் யாருக்கு என்ன நட்டம் ? மாறாக இந்த நாட்டுக்கு நன்மையே !*

*வட்டி என்பது ஒருவரின் உழைப்பை உறிஞ்சும் கொடுஞ்செயல் என்பதால் அவர்களின் இஸ்லாம் அதைத் தடுக்கிறது ! அவர்களால் வட்டியினால் ஏற்படும் அடிதடி, கற்பிழப்பு, தற்கொலை, கொலை போன்ற உயிரிழப்புகள் இல்லை ! அவர்களால் யாருக்கு என்ன நட்டம் ? மாறாக அவர்கள் வங்கிகளில் இதுவரை வாங்காமல் விட்டு வைத்துள்ள வட்டித்தொகை 67,500 கோடிகளால் இந்த நாட்டுக்கு நன்மையே !*

*மேலும் பெண்ணின் அழகு என்பது அவர்களை மணம் முடிக்கும் கணவனுக்காக மட்டுமே என்பதால் அவர்களின் பெண்கள் பர்தா அணிகிறார்கள் ! இதனால் பாலியல் குற்றங்களில் இருந்தும் காமப்பார்வைகளில் இருந்தும் அவர்களையும் பாதுகாத்து சமூகத்தையும் தீமையில் இருந்து காக்கிறார்கள்! இதனால் யாருக்கு என்ன நட்டம் ?*

*குடிப்பதும் வெடிப்பதும் பண்டிகை அல்ல !
இல்லாதவர்க்கு வழங்குதலும் இறைவனை வணங்குதலும் தான் இஸ்லாமியப் பண்டிகை என்பதால் அவர்கள் ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து அவர்களும் உண்டு, நண்பர்களுக்கும் வழங்கி ஏழைகளுக்கும் கொடுக்கிறார்கள் !*

*அவர்களது மார்க்க சட்டப்படி 
அரசியல் சட்டம் தந்த அனுமதியின்படி 
அவர்களது சொத்துக்களை பிரிக்கிறார்கள் !
அவர்களது திருமணத்தை செய்கிறார்கள் !
அவர்களது விவாகரத்தை செய்கிறார்கள் !
இந்திய நீதிமன்றங்களில் ஏற்கனவே கோடிகணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கையில் அவர்களின் வழக்குகளை அவர்களே தீர்த்து கொள்கிறார்கள் !
இதனால் யாருக்கு என்ன நட்டம் ?*

*ஒன்றே குலம்! ஒருவனே இறைவன்!! என சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்! இதில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை !ஆனால் எல்லா சமூகங்களிலும் உணர்ச்சியால் உந்தப்பட்டு வன்முறையை கையில் எடுக்கும் சிலர் இருப்பது போல் இங்கும் இருக்கின்றனர் ! எப்படி குஜராத்தில் நடந்த கொலைகளுக்கு இங்குள்ள இந்துச் சகோதரர்கள் காரணமில்லையோ அது போன்று பயங்கரவாதத்திற்கும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் சம்மந்தமில்லை!மற்றவர்கள் குற்றம் இழைக்கும் போது மதத்தை அடையாளப்படுத்தாத மீடியாக்கள் முஸ்லிம்கள் குற்றம் இழைக்கும் போது மதத்தை அடையாளப்படுத்துகின்றனர்* .

*ஆகையால் அவர்களின் போக்குகளில் தலையிட்டு அவர்களை வம்புக்கு இழுப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற அடிப்படையையாவது உணர்ந்து செயல்படுங்கள். இல்லையேல் சமூக அமைதி சீரழிந்து நாடு நாசமாகும்.*

பழ. *மாணிக்கம்* ,
விசிக, 
கத்தார்.

https://www.facebook.com/photo.php?fbid=563475017375742&set=gm.1376492885752758&type=3&permPage=1

 






Other News
1. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
2. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
3. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
4. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
5. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
6. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
7. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
8. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
9. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
10. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
11. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
12. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
13. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
14. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
15. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
16. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
17. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
18. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
19. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
20. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
21. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
22. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
23. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
24. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
25. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
26. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
27. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
28. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
29. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
30. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..