சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்துக்கு 'தீ' வைத்தது யார்? - சி.சி.டி.வி.யில் மர்ம மனிதர்கள்

Posted by Haja Mohideen (Hajas) on 1/23/2017 4:14:41 AM

 

சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்துக்கு 'தீ' வைத்தது யார்? - சி.சி.டி.வி.யில் மர்ம மனிதர்கள் 

 

சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைத்தவர்களின் உருவம், அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் அமைதியான முறையில் தமிழகம் முழுவதும் போராடி வந்தனர். இந்தப் போராட்டம் மத்திய, மாநில அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. போராட்டத்தை கைவிடும்படி அரசும், காவல்துறையும் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் போராட்டக்குழுவினர் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து பின்வாங்காமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்தச் சென்றுவிட்டு, ஆனால் முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். சென்னை வந்த அவர், போலீஸ் உயரதிகாரிகள், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 'அறவழியில் போராடுபவர்களை அமைதியான வழியில் வெளியேற்றுங்கள். ஏனெனில் வரும் 26-ம் தேதி குடியரசு தினவிழாவை சென்னை மெரினாவில் நடத்த வேண்டும்.

மேலும் போராட்டம், அரசு நிர்வாகத்துக்கு பலவகையில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது போடப்பட்டுள்ள அவசரச் சட்டம் குறித்தும் போராட்டக்குழுவினருக்கு தெளிவாக விளக்கிச் சொல்லுங்கள்' என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு மெரினாவுக்குச் சென்ற போலீஸ் உயரதிகாரிகள், போராட்டக்குழுவினருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் சமரசமடையவில்லை. இதனால் மெரினாவுக்கு வரும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டன. இன்று காலை மெரினாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. அவர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசுக்கும், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, லத்திசார்ஜ் நடத்தி கூட்டத்தை கலைத்தனர் போலீஸார். 

மெரினா போராட்டத்தில் சில கட்சியைச் சேர்ந்தவர்களும் அமைப்புகளும் புகுந்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது.  இதனால் அவர்களால் எந்த நேரத்திலும் அசம்பாவித சம்பவங்கள் நேரிடலாம் என்று உளவுப்பிரிவு போலீஸார், உயரதிகாரிகளும், அரசுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்களை அடையாளம் கண்டறிவதிலும் சிக்கல்கள் எழுந்த நிலையில், இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஐஸ் ஹவுஸ் போலீஸ் நிலையம் முன்பு ஒரு கும்பல் திரண்டது. பெரும்பாலான போலீஸார் பாதுகாப்பு பணிக்குச் சென்று விட்டதால் போலீஸ் நிலையத்தில் இரண்டு பெண் போலீஸார் மட்டுமே இருந்தனர். அவர்கள் பணியில் இருந்தபோது, பல வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள் மீது ஒரு கும்பல் பெட்ரோலை ஊற்றியது. அடுத்து அங்கு தீ வைக்கப்பட்டது. இதனால் இரு சக்கர வாகனங்கள் கொளுந்து விட்டு எரியத் தொடங்கின. போலீஸ் நிலையத்துக்குள் சிக்கிய பெண் போலீஸார் 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்' என்று அலறினர். அவ்வழியாக சென்ற மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவல் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸ் டீம், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு விரைந்தது. இதற்குள் வாகனங்களுக்கு தீ வைத்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். போலீஸ் நிலையத்துக்குள் சிக்கிய இரண்டு பெண் போலீஸையும் அவர்கள் மீட்டனர். போலீஸார் துரிதமாகச் செயல்பட்டதால் உயிர்சேதம் ஏற்படவில்லை. 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மாணவர்கள் இதுவரை அறவழியில் போராடி வருகின்றனர். இதனால் நிச்சயம் அவர்கள் இந்த வன்முறையில் ஈடுபடவில்லை. மாணவர்கள் என்ற போர்வையில் சிலர் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் யார் என்று விசாரித்து வருகிறோம். இதற்காக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆராய்ந்தோம். அப்போது ஒரு கும்பல் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களின் அருகே வருவதும், பிறகு எதையோ வாகனங்கள் மீது ஊற்றும் காட்சிகள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் முகத்தை மூடியுள்ளனர். இந்தப் பதிவுகளை வைத்து அவர்கள் யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எங்களுக்கு இப்பகுதியிலேயே இருக்கும் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மேல் சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணைக்குப் பின் முழு விவரத்தையும் ஊர்ஜிதப்படுத்துவோம்!" என்றார்.

- எஸ்.மகேஷ்

https://www.facebook.com/ukhmz/posts/10211378995407573







Other News
1. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
2. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
3. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
4. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
5. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
6. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
7. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
8. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
9. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
10. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
11. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
12. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
13. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
14. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
15. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
16. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
17. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
18. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
19. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
20. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
21. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
22. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
23. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
24. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
25. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
26. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
27. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
28. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
29. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
30. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..