ஏன் ஜல்லிக்கட்டு!!

Posted by S Peer Mohamed (peer) on 1/14/2017 12:50:20 AM

 

ஏன் ஜல்லிக்கட்டு!!

jalli

 

வேட்டையாடிய சமூகத்திலிருந்து நாகரிக வளர்ச்சியின் அடுத்த நிலையாய் நாம் உருமாறியதுதான்  விவசாய சமூகம். ஆறுகளின் கரை ஓரங்களில் கூடாரமிட்டு நிலங்களை உழுது பயிர் செய்யத் தொடங்கினோம். நம் தொழிலுக்கு உதவ வசதியாய் நாம் நம்முடன் சேர்த்துக் கொண்டவைதான் ஆடுகளும் மாடுகளும். இயற்கையில் குவிந்துகிடந்த வளங்களை நமக்கு உதவும் கருவிகளாக மாற்றிக்கொண்டோம்.

 

அக்கருவிகளை கடவுளாகவே வழிப்பட்டோம். அதில் ஒரு முக்கிய கருவி தான் ‘மாடு’. ஏரைப்பூட்ட உழுதது. இரண்டாம் தாயாய் பால் பொழிந்தது. சாணம் உரமானது. கோமியமும் புனிதமானது. விவசாயமே தன் முதுகெலும்பாய் கொண்டு விளங்கிய இந்தியாவில் மாடு கடவுளுக்கு இணையாய் வழிப்படப் பட்டது. கோமாதா என்று வழிப்பட்டோம். கொம்பிற்கு மஞ்சள் பூசி திலகமிட்டு மாட்டுப் பொங்கல் என்று விழா எடுத்துக் கொண்டாடினோம். இந்த மாடுகளின் ஆரோக்கியமான இனப் பெருக்கிற்கும்  ஜல்லிக்கட்டுக்கும் தொடர்பு உண்டு என்று கேட்ட போது வியப்பாகவே இருந்தது. ஆராய முற்பட்டேன். என் கண்கள் விரிந்தன. ‘கற்றது கை மண் அளவு’ என்று ஔவை சொன்னது உண்மைதான். என் ஊர்…எனக்கு சோறு போடும் என் கிராமம், என் விவசாயி… அவர்கள் வாழ்வியல் எனக்கு தெரியவில்லை.


இதற்காகவே வளர்க்கப்பட்டு, வாடி வாசல் திறக்க, வீரியத்துடன் சீறி வரும் காளைகளை அடக்கத்துடிக்கும் வீரர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். அடக்க விடாமல் திமிறி வெற்றிக்கண்டு கம்பீரமாய் நிற்கும் அந்தக் காளை… அதன் வீரியம்…அதைக்கொண்டே அந்த ஊர் மாடுகளின் ஆரோக்கியமான இனப்பெருக்கம் நடைப்பெறும்.


அடக்க வரும் வீரர்களுக்கு அடிப் பட்டாலும், ‘காளைக்கு ஒன்னும் ஆகாம பாத்துக்கையா ஐயனாரே’ என்று கும்பிட்டுக் கொள்ளும் ஊர் மக்கள் தான் அதிகம். காளைதான் அங்கு பிரதானம். இது ஒரு ஊரின் பொழுதுபோக்கு விளையாட்டாக மட்டும் எப்படி இருந்துவிட முடியும்? அவர்களின் வாழ்வாதாரத்தை பேணி காக்கும் முயற்சி இது என்று தோன்றியது. அவர்கள் வாழ்வியலோடு பின்னப்பட்ட ஒன்று என்று விளங்கியது. தமிழ் நாட்டில் உள்ள நாட்டு மாடு வகைகள் முக்கியமாக ஆலம்பாடி, பர்கூர், காங்கயம், புலிக்குளம், உம்பளச்சேரி, மலை மாடு என்று ஆறு வகைகள் சொல்லுகிறார்கள். இன்று ஆலம்பாடி வகை இல்லை. தொலைந்துவிட்டது. சரியாகச் சொன்னால் தொலைத்துவிட்டோம். 

300 க்கும் மேலான மாடு வகைகள் கொண்டிருந்த நம் நாட்டில் இன்று வெறும் 30 க்கும் குறைவான மாடு வகைகளே பரிதாபமாய் உலாவிக்கொண்டிருக்கின்றன. நம்மை அதிரவைக்கும் இந்தப் புள்ளி விவரம். பார்க்கப்போனால் மிருக நல ஆர்வலர்கள் இதற்குத் தானே பதைபதைக்க வேண்டும்? வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் விவசாயி என்றும் ஏழையே. அவன் தன் பசுவின் இனம் பெருக்க காளைக்கு போவதெங்கே? ஜல்லிக்கட்டில் முதலில் வரும் காளையை அந்த ஊர் மக்கள் தங்கள் பசுக்களுடன் சேர்த்து இனம்பெருக்க வைப்பதே வழக்கம். பின் ஜல்லிக்கட்டு இல்லாத ஊர்களில்? பிறக்கும் கன்று பசுவாக (female cow – heifer) இருந்தால் அது தப்பிக்கும். காளையாக இருந்தால், அதை பேணிக் காக்க முடியாமல், பிறந்த ஒரு வாரத்திற்குள் அந்தக் கன்று சந்தைக்கு வந்துவிடும்… கறிக்கடையில் தொங்கும் இளம் மாமிசமாய்!

ஜெர்சி மாடுகள் போன்ற வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் மாடுகள் தான் இன்று பெருகிக்கொண்டு வருகின்றன. விவசாயிகள் பெரும்பாலும் இம்மாடுகளுக்கு தீனிப்போட இயலாது. கட்டுப்படி ஆகாத நிலையில் பால் கறவை, பால் விநியோகம் அனைத்தும் நம் ‘corporate’ அண்ணன்கள் கைகளுக்கே! நம் நாட்டு மாடுகளுக்கு ‘grasslands’ எனப்படும் நம் புல் வெளியில் மேய்தலே போதும். அனால் இறக்குமதி மாடுகளுக்கு? ராஜஸ்தான் பாலைவனத்தின் மணல் பரப்பில் நடக்கும் நாட்டு மாடு ‘தார்பர்க்கர்’… இந்த மாட்டை ஒழித்துவிட்டு அங்கு ஜெர்மன் மாட்டை நடக்கவிட்டால் என்னாகும்! ஜல்லிக்கட்டு, ‘Eco system’ எனப்படும் சுற்றுச் சூழல் அமைப்பை பாதுகாக்க நம் முன்னோர்கள் அன்றே கொண்டிருந்த ஒரு ஏற்பாடு.


இந்த ஏற்பாடு இன்று நேற்று வந்ததல்ல. 5000 வருடத்திற்கு முன்பே சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. நம் சங்க இலக்கியங்கள் தொட்டே பல இடங்களில் ‘ஏறு தழுவுதல்’ நடந்ததாக சொல்லப்படுகிறது. அன்று தமிழர்கள் இயற்கையோடு ஒன்றியே வாழ்ந்தார்கள். இதற்கு ஆதாரங்கள் ஏதும் தேவை இல்லை. அவர்கள் வாழ்ந்த நிலத்தையும் காற்றையும் கூட பகுதி அறிந்து திசை அறிந்து பெயர்கள் இட்டார்கள். தன்னை வாழவைக்கும் இயற்கையை அதன் சிறப்பறிந்து வணங்கினார்கள்.


இப்படிப்பட்ட ஒரு இனம் மிருகங்களை வதைக்கும் ஒரு விளையாட்டை விளையாடியிருக்க முடியாது. ஏறு தழுவுதல் என்பதே கட்டிப்பிடித்து தழுவுவதுதானே. முல்லைக்கே தேர்கொடுத்த இனமாயிற்றே நம் தமிழினம். பிற்காலத்தில் நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தில் ‘சல்லி’ அதாவது சில்லறை காசுகளை ஒரு துணியில் முடித்து காலையின் கொம்பில் கட்டிவிட்டு, பின் வீரர்கள் அந்த முடியைக் கழற்றி அந்த காசைப் பரிசாக கொள்ளும் பழக்கம் வந்ததால், ஜல்லிக்கட்டு என்று பெயர் மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. வீரம் என்ன நம் தமிழ் மண்ணுக்கு புதிதா? புலியையே முறத்தால் விரட்டி விட்ட தமிழச்சியின் கதை கேட்டிருக்கிறோம். நாட்டுக்கும் போருக்கும் தன் பிள்ளைகளை நேந்துவிட்ட தாய்மார்களின் சரித்திரம் படித்திருக்கிறோம். வீரப் புண் என்று வீரத்தையும் புறமுதுகு என்று கோழைத்தனத்தையும் இனம் பிரித்து சொல்லும் தமிழினம்.

அன்று போர்க்காலங்கள் அல்லாது பிற நேரங்களில் தமிழன் அவன் வீரத்தைக் காட்ட இப்படிப்பட்ட கலங்களும் தேவையாய் இருந்தனப் போலும். முதல் புண், முதல் ரத்தம் என்று பயந்து போரில் புறமுதுகு காட்டி ஓடாமல் நின்று போரிட்டு ஜெயிக்க நம் தமிழனின் வீரத்திற்கு பட்டைத்தீட்டும் கலங்களாக ஜல்லிக்கட்டு கலங்கள் இருந்திருக்கக்கூடும். நகரமும் கிராமமும் இரண்டு தீவுகளாய் இருப்பதே பல அறியாமைகளுக்கு காரணம். கிராமங்கள் ‘ஏறு தழுவுதலுக்கு’ முன் நம் நகரங்கள் ‘கிராம ததழுவுதலை’ மேற்கொள்ளட்டுமே!

பீட்டா போன்ற நிறுவனங்கள் செய்ய முயல்வதுதான் என்ன? மாடுகளின் கால்களுக்கு சூடுவைத்து லாடம் அடித்தல், ஒரு நாளைக்கு பல கிலோ மீட்டர் நடக்க வேண்டிய யானையை கோவில் யானை என்று சொல்லி காலில் சங்கிலி இட்டு கட்டி வைத்தல் இவையெல்லாம் மிருக வதையைத் தானே சாரும்? இன்று இந்தியா மாட்டு இறைச்சி (beef) ஏற்றுமதியில் முதலிடம்!!

https://kalpanaganesaninsights.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/

 






Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..