500 ரூபாய் நோட்டு: சிகிச்சை மறுத்த மருத்துவமனை.. பரிதாபமாக மரணித்த குழந்தை!

Posted by S Peer Mohamed (peer) on 11/13/2016 12:19:45 PM

 மும்பை,

ரூபாய் 500, 1000 நோட்டுகளை வாங்க மறுத்து, சரியான சிகிச்சை அளிக்காததால் பிறந்த குந்தை மரணத்தை நாடியது. இந்த பரிதாபகரமான சம்பவம் மும்பையில் நடைபெற்றுள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபிறகு ஏற்பட்ட குழப்பங்களில், சாமானிய மக்கள், வியாபாரிகள், விவசாயிகளுடன் ஒரு பச்சிளம் குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள ஜீவன்ஜோதி நர்சிங்ஹோம் என்ற மருத்துவமனையில் அந்த பகுதியை சேர்ந்த சர்மா. அவரது மனைவு கிரண், கர்ப்பிணி. இவர் கடந்த ஏப்ரல் மாதம்முதல் தொடர்ந்து மகப்பேறு மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளார்.

நவம்பர் 8-ம்தேதி மோடி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததார்.
அன்றைய தினமும் கிரண் வழக்கமான பரிசோதனைக்கு சென்றுள்ளார்.

கிரணைப் பரிசோதித்த மருத்துவர்கள் டிசம்பர் 7-ம்தேதி அன்று குழந்தை பிறக்கலாம் என்று உறுதி அளித்துள்ளனர்.

ஆனால் கடந்த 9ந்தேதியே கிரணுக்கு வலி ஏற்பட, உறவினர்கள் உதவியுடன் வீட்டிலேயே குழந்குதை பிறந்துள்ளது. ரணுக்கு தொடந்து ரத்தப்போக்கும் இருந்துள்ளது. குழந்தை மிகவும் எடை குறைவாக 1.6 கிலோ எடையே இருந்துள்ளது.

கிரணுக்கும் ரத்தப்போக்கும் நிற்காததால், பயமடைந்த கிரணன் உறவினர்கள் அவரை ஏற்கனவே பரிசோதனை செய்து வந்த ஜீவன்ஜோதி நர்சிங்ஹோமில் சேர்த்துள்ளனர்.
குழந்தையை பறிகொடுத்த சர்மா-கிரண் தம்பதி

மருத்துவமனையில் குழந்தைக்கு முதல்கட்ட சிகிச்சையளித்த மருத்துவர்கள், அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக 6,000 ரூபாய் கட்டணமாக கேட்டுள்ளனர். 500, 1000 ஆயிரமாக கட்டக்கூடாது, 100 ரூபாய் தாளாக பணத்தை கட்டுங்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் கோரியுள்ளது.

ஆனால், கிரணின் கணவர் சர்மா, தன்னிடம் 500 ரூபாய் தாள்கள் மட்டுமே இருப்பதாகவும், சில்லரை கிடைத்தவுடன் 100 ரூபாய் தாளாக கட்டிவிடுவதாகவும் கூறியுள்ளர். ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ, பணத்தை கட்டினால் மட்டுமே சிகிச்சை தொடர முடியும் என்று கறாராக கூறிவிட்டனர்.

ஆனால், கடந்த 9, 10ந்தேதி ஏடிஎம் மூடப்பட்டிருந்ததால், சர்மா என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். 500 ரூபாய்தாள்களை 100 ரூபாய்தாள்களாக மாற்ற முடியாமல் சர்மாவின் குடும்பத்தினர் தவித்தனர்.

ஆனால், அவர்களின் தவிப்பை பொருட்படுத்தாக மருத்துவமனை நிர்வாகம் கல்மனசுடன், அந்த பச்சிளங்குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, மருத்துவமனையைவிட்டு வெளியேற்றியது.

இதனால் வீட்டிற்கு திரும்ப சர்மா குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர். மறுநாள் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், சர்மாவும் கிரணும் வேறு ஒரு மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கிச்சென்றனர்.

ஆனால் போகும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகமோ ஆணவமாக பதில் கூறி உள்ளது.

" குழந்தைக்கு முதன்மை பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஆனால் அவர்களிடம் செல்லாமல் போன 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்தன. செல்லாத நோட்டுகளை வாங்கிக்கொண்டு எப்படி சிகிச்சை அளிக்கமுடியும்? 'அத்துடன் உயர் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் எங்களிடம் இல்லாததால், வேறு மருத்துவமனைக்குப் போகச்சொன்னோம்" என ஜீவன் ஜோதி நர்சிங் ஹோம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், மத்திய அரசோ, மருந்தகம், மருத்துவ மனைகளில் 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை கட்டாயம் ஏற்க வேண்டும் என தெளிவான வழிமுறைகளை கொடுத்துள்ளது.

அப்படி இருந்தும் மருத்துவமனையின் அலட்சியத்தில் ஒரு பச்சிளங்குழந்தை உயிரிழந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு..? மத்திய அரசா, மருத்துவமனை நிர்வாகமா என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Source: http://m.dailyhunt.in/news/india/tamil/patrikai-epaper-patrikai/500+roobay+nottu+sikichai+marutha+maruthuvamanai+barithabamaga+maranitha+kuzhanthai-newsid-60186816








Other News
1. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
2. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
3. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
4. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
5. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
6. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
7. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
8. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
9. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
10. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
11. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
12. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
13. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
14. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
15. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
16. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
17. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
18. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
19. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
20. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
21. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
22. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
23. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
24. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
25. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
26. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
27. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
28. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
29. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
30. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..