வெள்ளத்தில் சிக்கிய 2,100 பேரை காப்பாற்றிய யூனுசுக்கு அண்ணா பதக்கம்: ஜெயலலிதா வழங்கினார்

Posted by S Peer Mohamed (peer) on 1/27/2016 2:17:30 AM

சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை 4 பேருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். அவர்கள் விவரம் வருமாறு:–

1. எம்.எஸ்.பாஸ்கர், கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் நீலாங்கரை, பாலவாக்கம், வெட்டுவாங்கேணி, பெத்தேல் நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கிய போது அங்குள்ள மக்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மீனவர்கள் உதவியுடன் 1,500 பேர்களை காப்பாற்றினார்.

2. சீனிவாசன், நங்கநல்லூர்.

மெரீனா கடற்கரையில் குளித்துக் கொண்டு இருந்த குணசேகரன் என்ற வாலிபரை கடல் அலை இழுத்துச் சென்ற போது அவரது தாயார் பிரபா காப்பாற்ற முயன்ற போது அவரும் கடல் அலையில் சிக்கினார். அப்போது மெரீனாவை சுற்றிப்பார்க்க வந்த சீனிவாசன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் இருவரையும் காப்பாற்றினார்.

3. செல்வன் ரிஷி, சீர்காழி திருமுல்லைவாசல்.

நாகை மாவட்டம் திருமுல்லைவாசல் கடலில் குளித்துக் கொண்டு இருந்த சகாபுதீன், சமீர் பாரி ஆகிய இருவரை கடல் அலை இழுத்துச் சென்றது. அவர்களை கடலில் இறங்கி செல்வன் ரிஷி காப்பாற்றினார்.

4. முகமது யூனுஸ், சூளைமேடு சவுராஷ்டிரா நகர், சென்னை.

17.11.2015 அன்று ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது முகமது யூனுஸ் முயற்சியால் 1,500 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 300 வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். 2.12.2015 அன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 600 பேரை காப்பாற்றினார்.

1.12.2015 அன்று ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் சித்ராவை மீட்டு பெருங்களத்தூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மறுநாள் சித்ரா–கணவர் மோகன் ஆகியோர் அந்த குழந்தைக்கு யூனுஸ் என்று பெயரிட்டனர். முகமது யூனுசின் தன்னலமற்ற தீர செயல்களை பாராட்டி அரசு அவருக்கு அண்ணாபதக்கம் வழங்கப்பட்டது.

பதக்கம் பெற்ற 4 பேருக்கும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் சான்றிதழ்கள் ஆகியவற்றை முதல்– அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

மதநல்லிணக்கத்துக்காக பாடுபட்ட தஞ்சை மாவட்டம் எம்.பி. அபுபக்கருக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டது. இவருக்கு பதக்கமும் ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை, சான்றிதழ்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதற்காக தஞ்சை மாவட்ட மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், நாகை மாவட்டம் புதுப்பட்டினம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி, தர்மபுரி மாவட்டம் ஏர்யூர் போலீஸ் ஏட்டு ராஜூ ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

இவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை, பதக்கம் வழங்கப்பட்டது.

திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைப்பிடித்து அதிக உற்பத்தியை ஈட்டிய மதுரை திருப்பாலை கிராமத்தைச் சேர்ந்த பெண் பிரசன்னாவுக்கு பதக்கமும், ரூ.5 லட்சத்துக்கான காசோலையும் முதல்– அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

இவர் அரை ஏக்கருக்கு 3,223 கிலோ தானிய மகசூல் மற்றும் ஹெக்டேருக்கு 16,115 கிலோ தானிய மகசூல் செய்துள்ளார். இது மாநிலத்திலேயே அதிக விளைச்சல் ஆகும்

 

Thanks: http://www.maalaimalar.com/2016/01/26123320/Anna-medal-for-Yunus-Jayalalit.html

 












Other News
1. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
2. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
3. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
4. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
5. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
6. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
7. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
8. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
9. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
10. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
11. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
12. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
13. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
14. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
15. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
16. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
17. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
18. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
19. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
20. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
21. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
22. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
23. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
24. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
25. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
26. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
27. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
28. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
29. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
30. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..