ஹாஜாமுகைதீன் படுகொலை: மனம் திறந்த மடல் !! எங்கள் தமிழக சொந்தங்களுக்கு !!

Posted by S Peer Mohamed (peer) on 12/24/2015 9:15:46 AM


--------
உங்கள் மெளனம் எதற்காக ? 
மரணித்தவன் முஸ்லிம் என்பதாலா ? 
--------------
வீடு மறந்து தொழில் மறந்து மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த உங்களை மீட்க தொடர்ந்து 15 நாட்களாக போராடினோம் ,

ராணுவம் வரும் வரை வேடிக்கை பார்க்க மனம் இல்லை 
நாங்களே இராணுவமாக மாறினோம் ,

உங்களுக்கு உணவு போட்டலங்களை 
வீசி ஏறிய மனம் இல்லை 
நீங்கள் அடுத்தவன் இல்லையே

எங்கள் உறவு என்பதால்
உணவுபோட்டலங்களை தூக்கி சுமந்து 
நாங்கள் நனைந்து 
உணவுகளை நனையாமல் 
சுமந்து வந்தோம் ,

பள்ளிவாசல்களின் மூலைகளில் 
நின்று தொழுது கொண்டு 
உங்களுக்கு உறைவிடம் தந்தோம்

எங்கள் வீட்டு பிள்ளைகளை போலவே 
உங்கள் பிள்ளைகளை நினைத்து 
அழுத பிள்ளைக்கு பால் புகட்ட 
அரசை எதிர்பார்த்து இருக்காமல்
நங்கள் சேற்றிலும் சகதியிலும் நடந்து வந்து 
பால் பாக்கட்டுகளை 
உன் படிக்கட்டில் வீசி எறியாமல் 
கதவு தட்டி தந்து 
உன் நலம் விசாரித்து சென்றோம்

நிவாரண களத்தில் 
நின்று இருந்த பொழுதும் 
அருமை தம்பி 
இம்ரானை இழந்தோம்

அது கூட எங்களை நிலைகுலையச் செய்யவில்லை

இந்த கட்டுரையை எழுதி கொண்டு இருக்கும்
இந்த நேரத்திலும் நிவாரணம் களத்தில்
உழைத்து கொண்டு இருக்கிறோம்

இந்த நேரத்தில் நெல்லை ஏர்வாடியில் 
ரத்தம் சொட்ட சொட்ட 
காஜா முகைதீன் என்ற
இஸ்லாமிய இளைஞன் படுகொலை செய்யப்பட்டு உள்ளான்

உனக்காக உழைத்ததற்கு 
மதவெறி மிருகங்கள் இதை அரங்கேற்றினர்களா ?? 
மனிதநேயத்தை எங்கள் 
மாண்பாக கொண்டது குற்றமா ??

காவல் துறை அதிகாரிகளை சந்தித்தோம் 
கவனிக்கப்படவில்லை !!

மாவட்ட ஆட்சியரை சந்தித்தோம் 
சந்திக்க மனம் இன்றி எள்ளி நகையாடினார் !!

வீதி யில் இறங்கி போராடிக்கொண்டு இருக்கிறோம்
விடிவு எதுவும் இல்லை !!

நீதி எங்கள் சமுதாயத்திற்கு எட்டா கனியே ! 
என்பது நிதர்சனமான உண்மை 
என்பதை நீ நன்கு அறிவாய்

ஆனால் அதை விட உனது மெளனமே 
எங்களை வேதனை பட செய்கிறது !!
உன் மௌனத்தை நீ கலைத்தால்......

நீதி பிறக்கும் நீயும் எங்களோடு 
வீதிக்கு வந்தால் 
விடிவு பிறக்கும் வருவாயா !!

உன்னுடைய கண்டன குரல்கள் 
எங்கள் கண்ணீரை துடைக்கும் 
அரசு குரல்வளையை நெரித்து பிடிக்கும் 
குரல் எழுப்பினால்

சகோதரர்களே உங்கள் மெளனம் 
களையவில்லை என்றாலும்

உனக்கு உழைப்பதை நாங்கள் நிறுத்த மாட்டோம்
ஏன் என்றல் நீ என்றும் எங்கள் சகோதரன்
-----
இந்த கடிதம் எதாவது உன்னை 
கடிந்து பேசி இருந்தால் என்னை மன்னித்து கொள் !!
வேதனைகளுடன் உங்கள் சகோதரன் 
-------
தாம்பரம் அசாருதீன்

மாநில ஒருங்கிணைப்பாளர் 
சமூக நீதிக்கான மக்கள் இயக்கம்



 

 

Chidambaram Ramasamy அன்புத்தோழா அசாருதீன் உனது பதிவு கண்டு நெஞ்சு கனக்கிறது நீயும் நானும் வேறு வேறு அல்ல என்பதை முதலில் உனக்கு சொல்லிக்கொள்கிறேன் சில சமுதாய விரோதிகலால் அந்த நிகழ்வு நடந்திருக்கும் அதற்கு உரியமுறையில் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் கலங்காதே அமைதிகாத்து ஜனநாயக முறையில் எதிர்கொள்ளலாம் உனது ஆதங்கம் நிச்சயம் அவர்களுக்கு தண்டனை என்னும் தீயில் கருகுவார்கள் கவலைப்படாதே அமைதி காப்பாய்
 
Tambaram Azarudeen
 
Tambaram Azarudeen உண்மையே நன்றி சொல்லி உங்களை பிரிக்க மறுபடியும் மனம் இல்லை







Other News
1. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
2. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
3. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
4. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
5. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
6. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
7. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
8. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
9. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
10. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
11. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
12. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
13. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
14. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
15. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
16. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
17. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
18. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
19. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
20. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
21. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
22. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
23. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
24. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
25. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
26. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
27. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
28. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
29. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
30. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..