நமது முன்னோடிகள் யார்? .நல்லோர்களான இமாம்களா? ..நவீன ஏகத்துவ ஏஜெண்ட்களா?

Posted by Haja Mohideen (Hajas) on 8/27/2015 2:26:30 AM

நமது முன்னோடிகள் யார்?
நல்லோர்களான இமாம்களா?
நவீன ஏகத்துவ ஏஜெண்ட்களா?

இமாம்களின் வழி நடப்போம்!
இறைவனின் பொருத்தத்தை அடைவோம்!

இஸ்லாம் மட்டுமே நேர்வழி என்ற நிலைமாறி,
இஸ்லாமில் எது நேர்வழி என்ற குழப்பமான கால சூழ்னிலையில் நாம் வாழ்கிறோம்.

குர்ஆன், ஹதீஸிலிருந்து மார்க்கச் சட்டங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்த நாம் யாருடைய விளக்கங்களைப் பின்பற்றுவது.
இன்றைய நவீன அறிஞர்களையா?
அல்லது அல்லாஹ்வுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்த இமாம்கள் மற்றும் ஹதீஸ் கலை வல்லுநர்களையா?

இதோ உங்கள் சிந்தனைக்கு........

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்திற்கு ஏறத்தாள 90 ஆண்டுகளுக்கு பிறகு மத்ஹப்கள் தோன்றியது.

மத்ஹப்கள் உருவாகியதன் முக்கிய நோக்கம் குழப்பம் இல்லாமல் சிறந்த வழியில் மக்கள் அமல்களை செய்யவும், மார்க்கச் சடங்களை நிறைவேற்றவும் வேண்டும் என்பதேயாகும்.

மத்ஹபில் 4 வழிமுறைகள் உள்ளது. அந்த நான்கு வழிமுறைகளும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டிதந்ததே..

அதில் பிரிவுகள் இல்லை. மனநோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மத்ஹப்கள் பிரிவாகத் தெரியும்.

1. ஹனபி மத்ஹப் = 
அபு ஹனிபா நுஃமான் இப்னு ஸாபித் (ரஹ்).
வாழ்ந்த காலம்: ஹிஜ்ரி 80 - 150.

2. மாலிகி மத்ஹப் =
மாலிக் இப்ன் அத்ப்த்ிய்ரஹ்).
வாழ்ந்த காலம்: ஹிஜ்ரி 93 - 179.

3. ஷாபி மத்ஹப் =
அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்ன் இத்ரிஸ் அஷ்-ஷாபி . 
வாழ்ந்த காலம்: ஹிஜ்ரி 150 - 204.

4. ஹன்பலி மத்ஹப் = 
அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு ஹன்பல் (ரஹ்).
வாழ்ந்த காலம்: 164 - 241.

மார்க்கச் சட்டங்களைத் தொகுத்த மத்ஹப் இமாம்களின் காலங்களும் கிட்டத்தட்ட ஒரே காலம்தான் .

மத்ஹப்பில் பிரிவினை இருந்தது என்று வைத்துக்கொண்டால் நான்கு இமாம்களிடமும் "நீ பெரியவனா? அல்லது நான் பெரியவனா?" என்ற தர்க்கம் ஏற்ப்பட்டு அன்றைக்கே நான்கு நாற்பதாக மாறியிருக்கும்!

ஆனால் மத்ஹப் தோன்றி 1300 வருடங்கள் ஆகியும் அதே 4 வழிகள்தான் இன்று வரைக்கும் இருக்கிறது.

புதிதாக ஒன்று கூட தோன்றவில்லை. மத்ஹப்பில் பிரிவினை இல்லை என்பதற்கு இதுவே தக்க சான்று.
நான்கு இமாம்களையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.

(ஆனால் இன்றோ மத்ஹப்பில் பிரிவினை என்று வந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் வேர் வேறாக பிரித்து அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் சூழலை உருவாக்கி மக்களுக்கு அந்த கூட்டத்தை பிரித்து காட்டியுள்ளான்.
வெறும் முப்பது வருடங்களுக்குள்.)

ஹதீஸும், ஹதீஸ் கலை வல்லுநர்களும்!

ஆதாரப்பூர்வமான ஆறு மிகப்பெரிய ஹதீஸ் நூல்களைத் தொகுத்த ஆறு இமாம்களும் மத்ஹப்பை பின்பற்றியவர்களே!!

அந்த ஆறு இமாம்களும் ஹதீதுகளை தொகுப்பதற்கு முன் தங்களுக்கென ஓர் வரைவிலக்கணம் வகுத்து அதன் படியே தங்கள் நூல்களில் ஹதீஸ்களைப் பதிய தொடங்கினார்கள்!

1. ஸஹீஹ் அல் புகாரி = 
அபு அப்துல்லாஹ் முஹம்மது பின் இஸ்மாயில் அல் புகாரி .
வாழ்ந்த காலம்: 194 - 256.
பின்பற்றிய மத்ஹப் = ஷாஃபி.
தொகுத்த ஹதீத்கள் = 7275.

2. ஸஹீஹ் முஸ்லிம் = 
அபு அல் ஹசன் அஸ்கர் அத்தீன் முஸ்லிம் அன் நய்சாபூரி.
வாழ்ந்த காலம்: 204-261
பின்பற்றிய மத்ஹப் = ஷாஃபி.
தொகுத்த ஹதீத்கள் = 2200.

3. அபு தாவூத் = 
அபு தாவூத் சுலைமான் இப்னு அல் அசாத் (ரஹ்).
வாழ்ந்த காலம்: 202 - 275.
பின்பற்றிய மத்ஹப் = ஹன்பலி
தொகுத்த ஹதீத்கள் = 4800.

4. திர்மிதீ= 
அபு ஈஸா இப்னு ஈஸா திர்மிதீ (ரஹ்).
வாழ்ந்த காலம்: 209-279.
பின்பற்றிய மத்ஹப் = ஷாஃபி
தொகுத்த ஹதீத்கள் = 3956.

5. நஸாயீ = 
அஹ்மத் இப்னு சுஹைப் இப்னுஅலி அந்-நஸாயீ (ரஹ்).
வாழ்ந்த காலம்: 215 - 300.
பின்பற்றிய மத்ஹப் = ஹன்பலி.
தொகுத்த ஹதீத்கள் = 5270

6. இப்னு மாஜா = அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்னு யாஜித் இப்னு மாஜா (ரஹ்).
வாழ்ந்த காலம்: 209 - 273.
பின்பற்றிய மத்ஹப் = ஷாஃபி.
தொகுத்த ஹதீத்கள் = 4000.


மத்ஹப்கள் அனைத்தும் குப்பை, இமாம்களைப் பின்பற்றக்கூடாது, இமாம்களின் கருத்துகளை ஏற்கக்கூடாது ,
குர்ஆன் மற்றும் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று கூறும் கூட்டத்தார்க்கு பகிரங்க அறைகூவல்.!

ஹதீஸ்களை தொகுப்பதற்கு முன் அனைத்து இமாம்களும் அவர்களுக்கு என்று ஓர் வரைவிலக்கணத்தை (இமாம்களின் சொந்த கூற்று) வடிவமைத்துக்கொண்டு அதன் படியே ஹதீஸ்களைத் தொகுத்தார்கள்.
ஆகையால் இமாம்களின் கூற்றினை ஏற்கக்கூடாது என சொல்பவர்கள் முதலில் அவர்கள் வகுத்த வரைவிலக்கணத்தை தூக்கியெறிய வேண்டும்!

பின்பு மத்ஹப்வாதிகள் வழிகேடர்கள், காஃபிர்கள்.
அவர்களின் தொகுப்பினை ஏற்கக்கூடாது எனில்,
ஹதீஸ்களைத் தொகுத்த அனைத்து இமாம்களும் நான்கு மத்ஹப்களில் ஒன்றைப் பின்பற்றியே வாழ்ந்துள்ளார்கள்.
ஆகையால் அவர்கள் தொகுத்த அனைத்து ஹதீத்களையும் கட்டுக்கதைகள் என புறம் தள்ள வேண்டும்!!
செய்வார்களா ???

எதற்கெடுத்தாலும் புகாரியில் இருக்கிறதா?
முஸ்லிமில் இருக்கிறதா?
(ஸிஹாஹ் சித்தா) ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் கிதாபுகளில் இருக்கிறதா? என்று கேள்வி கேட்கும் நவீன ஏகத்துவவாதிகளே!

மத்ஹப்களை வழிகேடுகள் என்றும் குப்பைகள் என்றும் நாவு கூசாமல் அநாகரீகமாக விமர்சிக்கும் 
ஏகத்துவத்தின் ஏகபோக உரிமையாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் கணவான்களே!

இமாம் புஹாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ போன்ற இந்த சமுதாயத்திற்கு ஹதீஸைத் தொகுத்தளித்த அத்தனை மிகப் பெரிய இமாம்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மத்ஹப் இமாம்கள் வகுத்துத் தந்த மார்க்கச் சட்டங்களின் அடிப்படையிலேயே வாழ்ந்து மறைந்தவர்கள்.

மத்ஹபை பின்பற்றுவோரை வழிகேடர்கள், காஃபிர்கள் என்று முத்திரை குத்தும் நீங்கள் 
தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து,
இந்த சமுதாயத்திற்கு ஹதீஸ்களை வழங்கிய மத்ஹப்களை பின்பற்றி வாழ்ந்த மரியாதைக்குரிய ஹதீஸ்களை வல்லுநர்களையும் நிராகரிப்பில் தள்ளுகிறீர்களா?

சகோதரர்களே!
நல்லடியார்களாக வாழ்ந்து மறைந்த நம் இமாம்களின் விளக்கங்களை ஏற்று அவ்வழியில் ஒற்றுமையான சமூகமாக, பலம் மிக்க உம்மத்தாக பயணிப்போமா?
அல்லது பிரிவினையை வளர்க்கும் நவீன ஏகத்துவ ஏஜண்ட்களைப் பின்பற்றி சிதறுண்டு கிடப்போமா?

சிந்தியுங்கள்!
செயல்படுங்கள்!

அனைவருக்கும் பகிருங்கள்!

 
Nellai Eruvadi Sunnath Jamath's photo.
 
  • ரிஸ்வி உமர்கத்தாப் ஓவ்வொரு மத்ஹபிலும் சில சட்டங்களிலும், தொழும் முறைகளிலும் சில வேறுபாடுகள் உள்ளதே. அது ஏன்?
  • Nellai Eruvadi Sunnath Jamath சில செயல்களை நபி (ஸல்) அவர்கள் வெவ்வேறு முறைகளில் செய்துள்ளார்கள். 
    அந்த முறைகள் அனைத்தும் ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ஒவ்வொருவரும் தங்கள் ஆய்வின் படி சில முறைகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.


    எந்த இமாம்களும் மற்ற இமாம்கள் முன் வைத்த ஆய்வையும், ஆதாரங்களையும் தவறு என்று விமர்ச்சிக்கவோ,
    அல்லது தான் சொல்வது மட்டுமெ சரி என்று வாதிடவோ இல்லை.
    இதனால் மத்ஹப்கள் நான்காக இருந்தாலும் மனங்கள் ஒன்றாக சகோதரத்துவத்தோடு ஒருங்கிணைந்து இருந்தது.

    பொதுவாக மார்க்கத்தின் கிளைச் சட்டங்களில் கருத்துவேறுபாடுகள் தோன்றுவது இயல்பு.

    அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) போன்ற பெரும் நபித் தோழர்களிடையே கூட நூற்றுக்கணக்கான மார்க்கச் சட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்தது.

    எனினும் பிறரின் கருத்துக்களை அவர்கள் குறை கூறாமலும், எதிர் கருத்துடையோரை தவறாக விமர்சிக்காமலும் கடைபிடித்த அழகிய அணுகுமுறையை நம் இமாம்களும் கடைபிடித்தனர்.
  •  





Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..