ஸஹர் செய்வதின் சிறப்பு

Posted by Haja Mohideen (Hajas) on 6/24/2015 8:07:23 AM

ரமலான் - புனித ரமலான்

ஸஹர் செய்வதின் சிறப்பு
***********************************
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள்,மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

எனதருமை சகோதரர்களே! அல்லாஹு தஆலாவின் வெகுமதிகளும்,பேருபகாரங்களும், எந்த அளவு இருக்கின்றன என்பதை பாருங்கள்.நோன்பின் பரக்கத்தினால் ஸஹர் நேர உணவையும் இந்த உம்மத்தினருக்கு நன்மைக்குரியதாக ஆக்கித் தந்துள்ளான். அதிலும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளியதாக இபுனு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹு தஆலாவும், அவனின் மலக்குகளும் ஸஹர் சாப்பிடுவோரின் மீது அருள் புரிகின்றனர்.(தபரானி)

ஸஹர் என்பது ஸுப்ஹுக்குச் சமீபத்தில் உள்ள நேரத்தில் சாப்பிடும் உணவு. அதாவது ஃபஜ்ர் நேரம் ஆரம்பமாகும் முன்பு உணவு உட்கொள்ளப்படுவதற்கு ஸஹர் என்று பெயர்.

ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது எனவே அதை விட்டு விடாதீர்கள், ஒரு மிடறு தண்ணீரையாவது குடியுங்கள்; நிச்சயமாக ஸஹர் உணவு உண்பவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள் என்று நபிகளார் (ஸல்)அவர்கள் சொன்னதாக அபூ சயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அஹ்மத்)

நமக்கும், வேதக்காரர்களுக்கும் இடையே நோன்பு நோற்பதில் வித்தியாசம் ஸஹர் சாப்பிடுவதுதான், என்றும்
நீங்கள் ஸஹர் செய்யுங்கள் ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது என்றும் நபிகளார் (ஸல்) கூறியுள்ளார்கள்.
(முஸ்லீம்-புஹாரி)

அன்பிற்குரிய சகோதரர்களே! ஹாஃபிழ் இபுனு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ஸஹர் சாப்பிடுவதால் பலவகையான பரக்கத்துகள் உண்டாகின்றன.

சுன்னத்தை பின் பற்றுதல், வேதக்காரர்களுக்கு மாறு செய்தல், இன்னும் வணக்கங்கள் செய்ய சக்தி பெறுதல், வணக்கத்தின் உற்சாகம் அதிகமாகுதல், பசி அதிகமானால் உண்டாகும் தீய குணத்தைத் தடுத்தல், அந்த நேரத்தில் தேவையுள்ள யாசகர் வந்தால் உதவி செய்தல், பக்கத்து வீட்டார் எழ்மையுடையவராக இருந்தால் அவருக்கு உதவுதல், குறிப்பாக அந்த நேரத்தில் துஆ ஏற்கப்படுதல்,ஸஹரின் பரக்கத்தால் துஆச் செய்யும் நல்லுதவியும் கிடைத்துவிடுதல், மேலும் அந்நேரத்தில் திக்ரு செய்வதற்குரிய வாய்ப்பு கிடைத்தல் போன்ற பல வகையான நன்மைகள் ஏற்படுகின்றன,

பிலால் (ரலி) அவர்கள் இரவில் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லும்வரை நீங்கள் சாப்பிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) அவர்கள் (புஹாரி)

நபியவர்கள் பிலால் (ரலி) மற்றும் இப்னு உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் (ரலி) அவர்கள் ஸஹரின் கடைசின் நேரத்தில் பாங்கு சொல்வார்கள் இது ஃபஜ்ரின் தொழுகைக்கானதல்ல, மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பு.அதன் பின்னர் ஃபஜ்ர் நேரம் வந்ததும் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் பாங்கு சொல்வார்கள் இது ஃபஜ்ர் தொழுகைக்கான அழைப்பாகும்.

பிலால் (ரலி) அவர்கள் முன்கூட்டியே அறிவிப்புச் செய்வதின் நோக்கம் தூங்கிக் கொண்டிருப்பவகள் எழுந்து வணக்கங்களில் ஈடுபடுவார்கள் பிறகு ஸஹர் செய்வார்கள் மேலும் இரவு முழுவதும் வணக்கங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் இவ்வறிவிப்பை கேட்டவுடன் வீடு திரும்பி ஸஹர் சாப்பிடக்கூடும் காரணம் சஹாபா பெருமக்கள் நேரத்தின் புனிதத்தை அறிந்தவர்கள்.

ஸஹர் நேரம் என்பது முஸ்லிம்களுக்கு இறைவன் தந்த மாபெரும் அருட்கொடை அதில் ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்புமிக்கது.

ரமழான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அருள் நிறைந்த ஸஹ்ரே வருக! வருக! என்று வரவேற்பார்கள். 
- அல் இர்ஃபால் பின் சாரியா (ரலி) - நஸாயி

அல்ஹம்துலில்லாஹ் ஸஹ்ரை நாமும் வரவேற்போம் இறைவனின் அருளை பெறுவோம்.

 https://www.facebook.com/photo.php?fbid=437863686392819&set=gm.878932808844083&type=1&permPage=1

 





Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..