பழமை இன்பம்! புதுமை இறுக்கம்!

Posted by Haja Mohideen (Hajas) on 11/29/2014 12:05:17 AM

பழமை இன்பம்!
புதுமை இறுக்கம்!

ஏர்வாடியின் தெருக்கள் தோறும் கம்பீரமாய் காட்சி தந்த பழைய வீடுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.

...
 
நெல்லை ஏர்வாடி அழகும் வளமும்'s photo.
நெல்லை ஏர்வாடி அழகும் வளமும்'s photo.
நெல்லை ஏர்வாடி அழகும் வளமும் 

பழமை இன்பம்!
புதுமை இறுக்கம்!

ஏர்வாடியின் தெருக்கள் தோறும் கம்பீரமாய் காட்சி தந்த பழைய வீடுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.

பழைய வீடுகளின் அமைப்பு. (ஏர்வாடியின் சொல் வழக்கில்)

திண்ணை, தெருவூடு, கூடம் அல்லது அங்கனம், அறவூடு, அடுப்படி, முற்றம் இவைகள் தான் அன்றைய பழைய வீடுகள்.

ஓட்டு வீடாக இருந்தாலும், கட்டை குத்திய மாடி வீடாக இருந்தாலும பெரும்பாலும் தனித் தனி அறைகள் இருப்பதில்லை.
அடுப்படியில் வேலைப் பார்க்கும் பெண்கள், வீட்டு வாசலில் யார் நிற்கிறார் என்பதைக் கவனிக்க அங்கிருந்தே எட்டிப் பார்ப்பார்கள்.
வீட்டின் தலைவாசலிலிருந்து, கொள்ளைப் புறம் வரைத் தெரியும் நேரான வாசல்கள்.

தனிமையின் வாய்ப்புகள் மிகக் குறைவே!

இதனால் எல்லோரும் எப்போதும் எல்லோரையும் பார்த்துக் கொள்கின்ற சூழல்.

ஒன்றாக அமர்ந்து சாயா குடிப்பதில் தொடங்கி, சாப்பிடுவது, பேசிக் கொள்வது என எப்போதுமே கலகலப்புக்கும் சில நேரங்களில் கலகத்துக்கும் பஞ்சமே இருக்காது.

எவ்வளவு வெயில் அடித்தாலும் குளுமைத் தந்தது நம் கட்டைகுத்திய வீடுகள்.

 

ஆங்காங்கே இருந்த நூண்கள், 
குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடவும்,
வயதானவர்கள் கால்களை நீட்டியவாறு அமர்ந்து கட்டளைகள் போடவும்,
சில குடும்பங்களில் அதிகம் சேட்டை செய்யும் பிள்ளைகளைக் கட்டி வைத்து அடிக்கவும் இப்படி பல விதங்களில் அவை பயன்பட்டதை அவ்வீடுகளில் வசிக்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

கூட்டுக் குடும்பங்களால் குதூகலமாக இருந்தார்கள் 
அந்த வீடுகளில் இருந்த மனிதர்கள்.

சிறு சிறு உரசல்கள் வந்தாலும் மனதுக்குள் ஏதோ ஒரு இன்பம் இருந்து கொண்டே இருந்தது.

வீட்டின் முகப்பில் இருந்த தின்னைகள்,
ஓய்வு நேரங்களின்,
குறிப்பாக அந்தி சாய்ந்த பொழுதுகளின் அரட்டை அரங்கமாகவும், அரசியல் மேடை யாகவும், ஆன்மீகத் தளமாகவும், அண்டை வீட்டினரோடு ஒன்றாக அமர்ந்து ஊர்க் கதைகள் முதல், உலக செய்திகள் வரை அனைத்தையும் பரிமாறிக் கொள்ளும் தகவல் களமாவும் இருந்தது.

ஆனால் இன்றோ!
வீடுகளின் அமைப்புகள் முற்றிலும் மாறுபட்டுவிட்டது. தனிமைகள் அதிகரித்து விட்டது. தனித் தனி அறைகள் உறவுகளுக்கு மத்தியிலே சந்திப்பையும், நெருக்கத்தையும் குறைத்துவிட்டது.

குறிப்பாக வயதானவர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டது.

திறந்தே இருக்கும் தின்னைகள் அழிக்கப்பட்டு,
அடைக்கப்பட்ட காம்பவுண்ட்களாக மாற்றப்பட்டு விட்டது.

இன்றைய வீடுகளில் மகிழ்ச்சியே இல்லை என்பதற்கல்ல. இருக்கிறது. 
என்றாலும்...
ஏதோ ஒரு இறுக்கம்.
பழைய வீடுகளில் வாழ்ந்தவர்களால் நிச்சயம் அதை உணர முடியும்.

  • Mohamed Mohideen Peer Mohamed பழையன கழிதலும் புதியன வருதலும் இயற்கை. எத்தனை புதிய வாகனங்கள் வந்தாலும் பழைய மோட்டார் வாகனங்கள் போல வருமா என்று கேட்கிறோமா. இல்லை பழைய வாகனங்களை வாங்குகிறோமா. புதியதை தானே விரும்புகிறோம்.
  • Si Sulthan வருங்காலத்தில் இதையும் இடித்துவிட்டு புதிய காங்க்ரீட் வீடு கட்டுவாங்க.. ஆனால் அவர்கள் கொஞ்சம் புத்திசாலிதனமாக செய்தால் இதன் பழமை மாறாமலேயே உட்பக்கங்களை புதியவீடாக மாற்றியமைக்க முடியும்.
     
  • Si Sulthan முதல் படத்தில் இருக்கும் வீட்டின் கூரைப்பகுதிகள் உட்புறம் வெப்பம் இறங்காதிருக்க மரப்பலகைகளால் வேயப்பட்டவை. கூடத்துப்பகுதி உயர்ந்த விதானமும் நாற்புரமும் காற்று வரும்படி ஜன்னல் வைத்த, எந்த கோடையிலும் ஒரு மின்விசிரி மட்டுமே போதுமானதாக குளிர்ச்சி தரும் வடிவமைப்பு.
  • Silicon Adam அனைத்திலும் பழையதுதான் சிறந்தது,உறுதியானது,நல்லது,என்பதை யாரும் மறுக்க முடியாது,பழைய கால கட்டிடங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் நிலைத்து என்னை போல் யார் உண்டு என சவால் விடுகிறது, பழைய காலத்து உணவு சக்தி வாய்ந்தது அதை உட்கொண்ட மனிதர்கள் உறுதியானவர்களாக வாழந்தார்கள் வாழ்கிறார்கள் வயது முதிர்ந்தவர்களாக,பழையவாகனம் போல் உறுதியான வாகனம் இன்று இருக்கிறதா? என்றால் கேள்விறியே?? மிஞ்சும் , பழைய காலத்து உறவு மற்றும் நட்பும் அது போலவே...பழைய காலத்து நீதி,பழைய காலத்து காதல்,பழைய காலத்து கல்யாணம் பழைய காலத்து நெய் சோறு கறி வாசம் என இன்னும் சொல்லிகிட்டே போகலாம் நா விரும்பும் பழைய காலத்தை பற்றி
  • Mohideen Annavi இரத்தினசுருக்கமாக : OLD IS GOLD !
  • Peer Mohideen old is gold
  • Meeran Alisheik எனக்கு தெரிந்து 5 வது தெருவில் 
    engr . இஸ்மத் பாட்சா பழைய வீட்டை சில மாற்றங்கள் செய்து 
    புதிய வீடு போல் ஆக்கியுள்ளார் .
    6வது தெரு engr கொழும்பு லப்பை 
    கனி அவர்கள் பழைய உத்தண்டப்பா வீட்டை வாங்கி 
    மாற்றி அமைத்துள்ளார் .
    7 வது தெரு 1944 கட்டப்பட்ட கொடிகாணி. 
    அப்பா. வீடு உள்ளே செட்டி நாட்டு வீடு போல் பிரமாண்டமாக இருக்கும் . வயரிங் சுவிட்ச் 1955 ல் அமைக்கப்பட்டது. அப்படியே உள்ளது .6வது தெரு பெங்களூரு SKMG பீர் 
    அண்மையில் தனது பழைய வீட்டை
    அதன் பழைய தன்மை மாறாது புதுப்பித்துள்ளார் .
  • Si Sulthan முக்கியமான விசயம் என்னவென்றால் இந்த வீடுகளில் கட்டைகுத்தி இருக்கும், சுண்ணாம்பு சாந்து கொண்டு கட்டப்பட்டிருப்பதால் கோடையில் சூடு தாக்காது..
  • Meera Mohideen என்னதான் புது புது வீடுகள் வந்தாலும், நம்ம ஊர் தெருக்களில் உள்ள பழைய காலத்து வீடுகள் போல் வருமா ? வீட்டுக்குள் நுழைய்ந்தால் ஏர் கண்டிஸனே தேவையில்லை, ஓல்ட் ஈஸ் கோல்ட் !!

 

Mohamed Ghani ஆங்காங்கே இருந்த தூண்கள் சேட்டை செய்யும் பிள்ளைகளை கட்டி வைத்து அடிக்கவும பயன் பட்டது.////
எனக்கும் எனது நண்பர்களுக்கும நிறைய அனுபவம் உள்ளது
இன்று நினைத்தாலும் வலிக்கிறது.

Hmohideen Kader முற்றிலும் உண்மை

 

 

https://www.facebook.com/groups/baithussalam/permalink/749830288419024/

https://www.facebook.com/permalink.php?story_fbid=403995053090709&id=386252861531595

 

 


 





Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..