காவி மயமானது ஆசிரியர் தினமும்

Posted by Haja Mohideen (Hajas) on 9/3/2014 4:53:20 AM

காவி மயமானது ஆசிரியர் தினமும் - பரதேசி பண்டாரங்களாய் நாளைய மாணவர் சமூகம்.

 
நரந்திர மோதியின் தலைமையிலான புதிய இந்துத்வ பயங்கரவாத அரசு, மக்களின் வாழ்வாதாரத்தை சரி செய்து, பொருளாதாரத்தை முன்னேற்றுகின்றதோ இல்லையோ, தனது நூற்றாண்டு இந்து மய கனவை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றுகின்றது. நரேந்திர மோதிக்கும் அவர்கள் சகாக்களுக்கும் பாராளமன்றத்திலோ வெளியிலோ வேறு வேலையே இல்லையா. பண வீக்கத்தைக் குறைப்பது, கருப்பு பணத்தை எடுப்பது, வேலை வாய்ப்பைக் கூட்டுவது, தொழில்களை அதிகரிப்பது, உள்கட்டமைப்பை ஸ்திரப்படுத்துவது, இந்திய தேசத்தின் ஒற்றுமையை கட்டமைப்பது என எவ்வளவோ நல்ல காரியம் இருக்கின்ற போது. மோதி & கோ தொடர்ந்து இந்தியாவை இந்தி மயமாக்கும் முயற்சிகளை செய்து வருவது, இந்தி பேசாத மக்களை, குறிப்பாக தமிழர்களை கலக்கத்தில் ஆற்றியுள்ளது. இதுவரைக் காலமும் எதாவது ஒரு தமிழக கட்சி மத்தியில் கூட்டாட்சி செய்தது, தமிழக உறுப்பினர்களின் தேவை மத்தியில் இருந்தோருக்கு தேவைப்பட்டது, அப்படி பட்ட காலத்தில் கூட மீனவர் பிரச்சனை, காவிரி பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் மீது மிளகாய் அரைத்தவர்கள் மத்திய அரசாங்கம். இப்போது அதுவும் இல்லை, அதுவும் பெரும்பான்மை ஆட்சி. அதனால் தொடர்ந்து தமது சந்தடி சித்து வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டனர். 
 
மத்திய அரசுப் பணியாளர்கள் பேஸ்புக், ட்விட்டரில் இந்தியிலேயே எழுத வேண்டும் என நிர்பந்தித்தனர். அடக் கொய்யாலே ! இந்தி தெரியாதவன் எப்படி இந்தியில் எழுத முடியும், இந்தி தெரிஞ்சவன் கூட பேஸ்புக், ட்விட்டரில் இந்தியில் எழுத மாட்டான், டுபாக்கார் தேவநகரில் கூட்டெழுத்துக்களைக் கூட்டி கூட்டி எழுதுவதற்குள் ரோமநகரியில் ஒரு பாராகிராபே எழுதிவிடலாம். அப்புறம் தமிழ்நாட்டுக்காரர்கள் எதிர்ப்புக் காட்டியதும், மத்திய அரசு இந்தி உத்தரவு இந்தி மாநிலத்துக்கு மட்டுந்தேன் என ஜகா வாங்கியது. 
 
மத்திய அரசுப் பணித் தேர்வு ( IAS, IPS ) எழுத்த வக்கிலாத கொஞ்சம் மாணவர்களை உசுப்பிவிட்டு, அந்த தேர்வுகளில் கேட்கப்படும் அடிப்படை ஆங்கில திறனுக்கான கேள்விகளைத் தூங்கி எறிந்தது மத்திய அரசு. ஆனால் மாணவர்கள் கேட்டதோ தேர்வில் அதிகம் எஞ்சினியரிங்க் கேள்விகள் இடம்பெறுகின்றன கலை அறிவியல் பாடங்களைப் படித்தோருக்கு அவற்றை எழுத கஷ்டமாக இருக்கின்றது என்பதே. ஆனால் அரசாங்கமோ ஆங்கிலத் திறன் பகுதியை மட்டும் நீக்கி ஆங்கிலத்துக்கு சங்கூத பிள்ளையார் சுழி போட்டது. 
 
இதோடு நின்றார்களா, இந்தியாவில் எவனுமே பேசாத செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கு மத்திய அரசுப் பள்ளிகளில் ஒருவாரம் விழா எடுக்க சுற்றறிக்கை அனுப்பினார்கள். இந்தியாவில் எத்தனையோ வளமான மொழி இருக்க, இந்த சமஸ்கிருதத்துக்கு மட்டும் அரசு வால்பிடிப்பது வேடிக்கை. எவனும் பேசாத இந்த மொழியை அட்டவணை மொழிகளாக்கி, ஆண்டு தோறும் பல கோடி ரூபாய்களை இந்த மொழியை வளர்க்க செலவிடுகின்றது. கருநாடகம் மத்தூர், மத்திய பிரதேசம் போபால் என சில ஊர்களில் இதை பேச்சு மொழியாக்க காசு கொடுத்தும் முயன்றார்கள், கடைசியில் இதை எவனும் பேசவே இல்லை.. அப்படி பட்ட சம்ஸ்கிருத மொழியை தூக்கி வைத்து கொண்டாடியது. இந்திய பாரம்பரிய மொழிகளை கொண்டாடுவோம் என்றால் சமஸ்கிருதத்தோடு, பாளி, பிராகிருதம், தமிழ் போன்றவைகளை கொண்டாடலாமே, ஆனால் கொண்டாட மாட்டார்கள் பாளி பவுத்தர்களின் சமய மொழி, பிராகிருதம் சமணர்களின் சமய மொழி, தமிழ் திராவிடர்களின் பெருமொழி இவற்றுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்தால் இந்துத்வாக்களுக்கு தினமும் ஒழுங்காக கக்கூஸ் கூட போகாது.. 
 
குஜராத்தின் பள்ளி பாடங்களில் வேத காலத்தில் மகாபாரத்தில் டெஸ்ட் டுயுப் பேபி இருந்ததாம், ஏவுகணைகள் இருந்தனவாம், ஏரோபிளேன் இருந்தனவாம் என புராணக் கப்சாக்களோடு பாடங்களை நடத்துகின்றனர். இதனைக் கற்பவர்கள் வளரும் போது மூளைச்சலவை செய்யப்பட்ட முட்டாள்களாகவே வளருவார்களோ ஒழிய புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கும் வல்லமை வரப் போவதில்லை. இதைத் தான் இந்த அரசு செய்து வருகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக வரலாறுகளை அழிக்கத் தொடங்கி இருக்கின்றனர். சிந்து சமவெளி திராவிட நாகரிகத்தை பிராமண நாகரிகமாக காட்டவும், ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல திராவிடர்களே வந்தேறிகள் என்ற விஷத் தன்மை மிக்க பிரச்சாரம் செய்வோர்கள் இன்று மத்திய அரசின் பாடத்திட்டங்களை வகுப்பவர்களாக பதவி ஏற்றும் உள்ளனர். இதே குஜராத்தில் ஆதிவாசிக் குழந்தைகள் ஆற்றுக்குள் அரைமணி நேரம் நீந்தி தினமும் பள்ளிக்கூடம் போறாங்க, ஓ ! இது தான் வளர்ச்சியோ. என்ன கண்றவியோ. 
 
அப்படித் தான் இந்தியாவின் பெயர் ஆங்கிலத்தில் இந்தியா எனவும், இந்தியில் பாரத் எனவும் இருக்கின்றது, ஆனால் காவி வெறித் தலைவர் மோகன் பாகவத்துக்கு மட்டும் இந்தியா இன்னும் இந்துஸ்தான் என்ற பெயரில் இருக்கின்றதாம், அதனால் இந்தியர்கள் என்பதை இனி இந்துக்கள் என மாற்றிக் கொள்ள வேண்டுமாம். நாஷமாப் போச்ச்சு.. 
 
அதைத் தாண்டி இப்போது ஆசிரியர் தினத்தை குரு உற்சவ் என மாற்றியுள்ளது மத்திய அரசு. குரு உற்சவ் என்ற பெயரையே அனைத்து மொழியினரும் பயன்படுத்துமாறு திணிக்கின்றது. இது அப்பட்டமான சமஸ்கிருத திணிப்பல்லவா, ஏன் வேறு மொழிகளில் ஆசிரியர் தினம் என்பதற்கு என்ன சொல் பஞ்சமா? இல்லை? குரு உற்சவ் என சொன்னால் மாணவர்கள் மண்டைக்குள் பாடங்கள் எளிதாக நுழைந்துவிடுமா என்ன? அதுவும் சமஸ்கிருதத்தோடு சம்மந்தமில்லா தமிழ் போன்ற மொழிகள் என்ன மயிருக்கு சமஸ்கிருத சொல்லை கையாள வேண்டும். குரு உற்சவ் என சொல்லும் நமக்கு எது நியாபகம் வருகின்றத், கல்வி என்பது பூணூல் இட்டவருக்கு மட்டுமே, மற்றவன் எல்லாம் குலத் தொழில் பயில மட்டுமே லாயக்கு என கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக கல்வியை மறுத்து வந்த குருகுலத்தை அல்லவா நினைவூட்டுகின்றது. இன்று செருப்புத் தைப்பவனின் மக்கள் கூட நல்ல கல்வியை பெறுகின்றனர், கல்விச் சாலைகளில் கல்வி பயில பிறப்பும், குலமும், கோத்திரமும், மூத்திரமும் தடை இல்லை என்றல்லவா இருக்கின்றது. இவற்றை மாற்றி மீண்டும் இந்தியாவை இருண்ட காலத்துக்கு தள்ளும் விதமாகவே இந்த அரசு இவ்வாறான செயல்களை செய்து வருகின்றன.
 
இவர்கள் இவ்வாறே ஆரிய மொழியையும், ஆரிய மதங்களையும் தொடர்ந்து திணிப்பார்களானால், இந்தியாவின் ஒற்றுமையும் வளர்ச்சியும் நிலைகுலையும் வாய்ப்பு நிறையவே உள்ளது. உலகப் பொருளாதார மொழியான ஆங்கிலத்தையும், உள்ளூர் மொழிகளான தமிழ் உட்பட பல மாநில மொழிகளையும் அழிப்பதன் மூலம் குருட்டுச் சமூகத்தையே இவர்கள் உருவாக்க நினைக்கின்றனர். இது இந்தியாவை பாகிஸ்தான், எகிப்து, இலங்கை, இராக், வடகொரியா போன்ற தேசங்களாக மாற்றக் கூடும். இங்குள்ள பிரிவினை சக்திகளை ஊக்கப்படுத்தி தேசத்தை தவறான பாதைகளுக்கு கொண்டு செல்லக் கூடும்.  இதே நிலைத் தொடர்ந்தால் வருங்கால இளைய இந்தியா பரதேசி பண்டாரங்களாக பிச்சை எடுத்து கஞ்சா அடிச்சு காசி, ராமேசுவரம் என சுத்த வேண்டியது தான். 
 
பொறுத்திருந்து பாருங்கள் ! மோதியின் இந்தியா மோசமான இந்தியாவாக உருமாறக் கூடும்.   
 
 

3 comments :

  1. பூணூல் இட்டவருக்கு....

    இன்று செருப்புத் தைப்பவனின்....


    நம்மை. அறியாமலேயே பதிந்து விட்டது .
    நாம் எப்போது மாறப் போகிறோம் ?

    Reply
    Replies
     
     
  2. பூணூல் போட்டால் பெரிய புடுங்கி, செருப்பு தைத்தால் இழிந்தவன் என்றா சொன்னேன். ஆபிரகாம் லிங்கன் கூட செருப்புத் தைத்தவரின் மகன் தான்.. இங்கு அதுவல்ல பிரச்சனை, ஒருவரது பிறப்பின் அடிப்படையில் மட்டுமே கல்வி பரிபாலனம் செய்யப்படும் நிலையில் இருந்து இன்று அனைவருக்குமான கல்வி என்ற நிலையை எட்ட குருகுலக் கல்வி ஒழிப்பும், மெக்காலே கல்வி அறிமுகப் படுத்தலமே உதவியது.. ஆனால் மெக்காலே கல்வியை அழித்துவிட்டு குருகுலக் கல்விக்கு திரும்பலாம் என்ற மிதப்பில் புதிய இந்துத்வா அரசு முயல்வதாக எமக்குப் படுகின்றது, இதைத் தான் எதிர்க்கின்றோம். மற்றபடி பூணூல் போட்டவன் பெரிய மயிரு என்றோ, செருப்பு தைப்பவன் வக்கற்றவன் என்றோ சொல்வதல்ல என் ஜோழி...

     
     
  3. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

 

http://www.kodangi.net/2014/09/modi-wallahs-safforanisation-of-teachers-day.html

 

 

 

 





Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..