இருளை நோக்கி சமுதாயம்: தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது? - ​பாகம்-2:

Posted by Haja Mohideen (Hajas) on 3/9/2014 7:58:43 AM

பாகம்-2: எப்படி செயல்படுத்துவது?

 

(முந்தைய பாகத்தின் தொடர் )

 

கமிட்டியின் செயல் பாடுகள்:.

 

  1. ஊரில் எத்தனை மதராஸாக்கள் நடக்கின்றன என்ற ஒரு சர்வே. மேலும் இதனை நடத்திவருபவர்களை தொடர்புகொண்டு அவர்களின் கருத்துக்களை கேட்டறிதல்.
  2. இதில் வரும் மாணவர்களை கொண்டு ஊரில் ஒரு மார்க்க கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்துதல்.
  3. மதராஸா இல்லாத முஹல்லாவில் மக்தப் மதரஸா ஏற்படுத்துதல்.
  4. மற்ற முஹல்லாக்களிலும் இதே போன்ற மதரஸாக்களை ஏற்படுத்துதல்.

 


1. மதராஸா சர்வே:

 

இது ஆச்சரியப் படவைத்தது. சிறுதும் பெரிதுமாக 15 மதரஸாக்கள். இதில் பல ஏழை பெண்மணிகளால் நடத்தப்படுபவை. மாஷாஅல்லாஹ் பலனை எதிர்பார்க்காமல் தீனுக்காக பணி செய்யும் ஏழை பெண்மணிகள் இன்னும் இருக்கின்றார்கள். அவர்களை அணுகி இது விசயமாக பேசியபோது அவர்களுக்கு ஆனந்த கண்ணீர் – ”இதுவரை யாரும் எங்களை கண்டு கொண்டதே இல்லையே!” ”


2. மார்க்க விழிப்புணர்வு:

 

மார்க்க கல்வியின் அவசியத்தை வழியுருத்தி மாணவர்களின் சிறு நாடகங்களுடன் – மெளலானா ஆவூர் இஸ்மாயில் ஹஸனி அவர்களின் சிறப்புரையோடு ஒரு நாள் மாநாடு நடத்தப்பட்டது. சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் நிறைந்த மதரஸா மாணவர்களின் நாடகங்கள், இஸ்லாமிய கலை கண்காட்சி மற்றும் குர்ஆன் கிராஅத் போட்டிகளுடன் நடந்த இந்த மாநாடு நல்ல வரவேற்பையும் மக்கள் மனதில் ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. அத்தோடு ஏற்கனவே மதரஸா நடத்திவருபவர்களையும் அழைத்து கண்ணியப்படுத்தினோம்.  

 

 
3. மதராஸா இல்லாத முஹல்லாவில் மக்தப் மதரஸா ஏற்படுத்துதல்:

 

மதரஸா மற்ற மதரஸாவைப் போன்றல்லாமல் ஒரு முறையான, முழுமையான பாடதிட்டத்துடன் இருக்கவேண்டும் என்ற நிய்யத்தில் இருந்ததால் UNWO (United Welfare Organization) என்ற அமைப்பினை தொடர்பு கொண்டோம்.

 

UNWO: - சத்தமில்லாமல் சமுதாய சேவைகள்

 

மாற்றங்கள் வேர்களைப் போல் பரவவேண்டும் அப்போதுதான் அவைகள் உறுதியாக இருக்கும், நீடித்துமிருக்கும் , ஆனால் வேர்கள் பரவுவது கண்களுக்குத் தெரிவதில்லை. மாற்றங்கள் வேர்கள் இல்லாமல் கிளைகளைப் போல் வளர்ந்தால் அவை கண்களுக்குத் தெரியும் ஆனால் நீடித்திருக்காது. மாஷாஅல்லாஹ் UNWO செயல் பாடுகள் வேர்கள் போன்றது. இவர்களது சேவைகளில் ஒன்றுதான் மக்தப் மதரஸா – முறையான முழுமையான பாடதிட்டத்துடன். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான்.

 

பல ஊர்களில் பல சவால்களுக்கிடையே மக்த்தப் மதராஸாக்கள் ஏற்படுத்த உதவிகள் செய்த இந்த அமைப்பின் பிரதிநிதியை தொடர்பு கொண்டபோது அவரது சுறுசுறுப்பும் ஊக்கமும் எங்களையும் தொற்றிக் கொண்டது.

 

ஊரில் அனைத்து முஹல்லா ஜமாத் நிர்வாகிளுக்கான (ஐக்கிய ஜமாத்) கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து முஃப்தி ஷர்புத்தீன் (UNWO) அவர்களை அழைத்து மக்தப் மதராஸாவின் அவசியத்தை எடுத்துரைக்கச் செய்தோம்.

 

 ஒரு மக்தப் மதரஸா எப்படி இருக்கவேண்டும் என்று அவர் கூறியவைகளில் சில…

 

  1. சீர்திருத்தங்கள் பள்ளிவாசல்களிலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும். (மஸ்ஜிதுன் நபவி – உலகின் முதல் பல்கலைக்கழகம்)
  2. மக்தப் மதரஸா கமிட்டி ஒன்று அமைக்கவேண்டும். பள்ளி நிர்வாகிகளும் அதில் இருக்கவேண்டும். இது மதரஸா நிர்வாகம் மற்றும் மேற்பார்வைக்காக.
  3. மூன்று ஜும்மா பயான்கள் தொடர்ச்சியாக மற்றும் ஒரு பெண்கள் பயானில் மதரஸாவின் அவசியம் பற்றி பேசவேண்டும்.
  4. சேர விரும்புபவர்கள் அப்ளிகேசன் பார்ம் நிறைக்க வேண்டும்.
  5. அட்மிசன் பீஸ், யூனிபார்ம் பீஸ் மற்றும் புக்ஸ் பீஸ் உண்டு.
  6. மாதாந்திர பீஸ். (ஏழை மாணவர்களுக்கும் இலவசமல்ல ஆனால் ஸ்பான்ஸர் முறையுண்டு)
  7. ஒரு வகுப்பிற்கு அதிக பட்சம் 20 மாணவர்கள்.
  8. உஸ்தாதுகளை இண்டர்வீவ் (உதாரணம் தஜ்வீத் முறை சரியாக இருக்கின்றதா?) மூலம் தேர்வு செய்தல்
  9. உஸ்தாதுகளுக்கு மூன்று நாள் விசேச பயிற்சி.
    1. மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும்.
    2. மாணவர்களை அடிக்கக் கூடாது.
    3. மாணவர்களை சாக்லேட் மற்றும் பரிசு பொருட்களுடன் ஊக்குவித்தல் etc..
  10. கமிட்டி நிர்வாகிகளுக்கு விசேச பயிற்சி.
    1. எப்படி கண்காணிக்க வேண்டும்.
    2. பெற்றோர்களுடன் தொடர்பு, பெற்றோர்கள் கூட்டம் நடத்துதல்.
    3. Etc.
  11. மாணவர்கள் மதரஸாவிற்கு வரவில்லையெனில் பெற்றோர்கள் போன் மூலம் தெரியப் படுத்தவேண்டும்.
  12. இதுபோன்று இன்னும் பல…

 

 

இதனடிப்படையில் அந்த முஹல்லாவில் ஒரு மக்தப் மதரஸா கமிட்டி ஒன்றை ஏற்படுத்தினோம். பல பிரச்சினைளுக்கிடையே, முஹல்லா பள்ளி நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்புடன் மதரஸா திறப்பு நாளை அறிவித்தோம். அதற்கு முன்னர் ஜும்மா உரையில் மக்தப் மதராஸா வின் அவசியம் பற்றி எடுத்துரைக்கப் பட்டது. அத்துடன் மதரஸா அறிமுகம் பற்றிய நோட்டிஸும் விநியோகிக்கப்பட்டது. பெண்களுக்கான தனி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அதிலும் மக்தப் மதரஸாவின் அவசியம் பற்றி பேசப்பட்டது, (இதிலெல்லாம் பேசியவர் முஃப்தி ஷர்புத்தீன்)

 

இறைவனின் பேரருளால் இந்தச் செய்தி முஹல்லா மக்களிடையே நன்றாக சென்றடைந்தது.

 

தமிழகத்திலேயே ஒரு முன்மாதிரியாக நடத்தப்பட்டு வரும் இந்த மாதிரியான மதரஸா காயல்பட்டிணத்தில் தான். மதரஸா ஆரம்பிப்பதற்கு முன் அங்கே சென்று நேரடியாக பார்த்ததுமட்டுமல்லாமல் உஸ்தாத் அபூபக்கர் அவர்களின் அனுபவபூர்வமான அறிவுரைகளையும் கேட்டறிந்தோம். அவர்கள் தந்த ஊக்கம் கமிட்டியின் ஆர்வத்தை தன்னம்பிக்கையும் அதிகரித்தது.

 

ஆனாலும் பல தயக்கங்கள்…

 

  1. ஆரம்ப பீஸ்களை வைத்துப் பார்த்தால் முதலில் ஒரு குழந்தை சேர்க்கும் செலவு சுமார் ரூ 400/-. இவ்வளவு இருந்தால் யார்தான் பிள்ளைகளை அனுப்புவார்கள்?
  2. யூனிபார்முக்கு யார் ஒத்துவருவார்கள்?
  3. பள்ளிக்கூடம் தான் முக்கியம் தீன் இரண்டாம் பட்சம் என்ற நிலையில் இருக்கும் பெற்றோர்கள் எப்படி தங்களது பிள்ளைகளை அனுப்புவார்கள்?
  4. Etc..

 

ஆனால் முடிவோ யாருமே எதிர்பார்க்கவில்லை….

 

அல்ஹம்துலில்லாஹ் மதரஸா ஆரம்பிப்பதற்கு முன் கிடைத்த அப்ளிகேசன்கள் 80, காயல் பட்டிணம் உஸ்தாத் அபூபக்கர் கூறியது நாங்கள் ஆரம்பிக்கும் போது எங்களுக்கு கிடைத்த மாணவர்கள் 15-20 ஆனால் உங்களுக்கு ஆரம்பத்திற்கு முன்பே 80…. மாஷாஅல்லாஹ்.

 

இதிலிருந்து நாங்கள் விளங்கிக் கொண்டது, பொது மக்களின் தீனின் தேட்டம் குறையவில்லை ஆனால் பொறுப்பில் இருப்பவர்கள்தான் அதனை சரிவர புரிந்துகொள்ளவில்லை மற்றும் இந்த தேட்டத்தை சரியான முறையில் பயன் படுத்தவில்லை என்பதே! பள்ளி நிர்வாகிகள், பொறுப்பில் இருப்பவர்கள் கவனிக்கவேண்டிய விசயம்.

 

மதராஸா ஆரம்பிக்கும் நாள் அன்று அந்த பள்ளியில் சுப்ஹு தொழுகையில் சுமார் முப்பது, நாற்பது மாணவர்கள், யூனிஃபார்ம்களுடன். சாதரணமாக சுப்ஹு தொழுகையில் சில சஃப்கள் நிற்கும் அந்த பள்ளியில் இது ஒரு மகத்தான காட்சி. மதரஸாவின் முதல் வகுப்பு சுப்ஹு தொழுகைக்குப் பின்னர் என்பதால் மாணவர்கள் சுப்ஹு தொழுகைக்கே அணிவகுத்துவிட்டனர்

 

இந்த மாணவர்களின் சுப்ஹு தொழுகை அணிவகுப்பு மற்ற நாட்களுக்கும் தொடர்ந்தது, அது மட்டுமல்லாமல் அது ஞாயிற்றுக் கிழமையும் இருந்ததுதான் ஆச்சரியம் ஏனெனில் ஞாயிற்றுக் கிழமை மதரஸா விடுமுறை. பெற்றோர்களுக்கோ பேரானந்தம்.

 

இதோ அந்த யூத பெண் அமைச்சரின் வாசகம் நினைவிற்கு வருகிறது..

 

கோல்டா மேயர் என்ற அந்தப் பெண் அமைச்சரிடம் யூதப் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கின்றனர். “கடைசி காலத்-தில் யூதர்களை முஸ்லிம்கள் கல்லால் அடித்துக் கொல்லும் ஒரு நேரம் வரும் என்று முஸ்லிம்களின் நபி கூறியுள்ளாராமே.. அதைக் குறித்துத் தாங்கள் என்ன கூறுகின்றீர்..?” இதுதான் கேள்வி. அதற்கு அந்தப் பெண் அமைச்சர் என்ன கூறினார் தெரியுமா..? “ஆம். நாம் அதனை நம்புகின்றோம். ஒருநாள் அவர்கள் நம்முடன் போர் புரிவார்கள்”.

 

 “அப்படி என்றால் அந்த நாள் எப்போது வரும்?” என்று மீண்டும் அவர்கள் கேள்வி கேட்க, அப்பெண்மணி கூறினார் : “ஜும்ஆ தொழுகைக்கு வருவதைப் போன்றுஎன்றைக்கு முஸ்லிம்கள் ஸுபுஹ் தொழுகைக்கு வருகின்றார்களோ அன்றுவேண்டுமென்றால் அது நடக்கலாம். அதுவரை நாம் அஞ்ச வேண்டியதில்லை.”

 

 

 

சகோதரர்களே விரக்தியை கைவிடுவோம்! செயலில் இறங்குவோம். நற்செயல்களில் அல்லாஹ்வின் உதவிகளை கண்கூடாக காணலாம்.

 

 


4. மற்ற முஹல்லாக்களிலும் இதே போன்ற மதரஸாக்களை ஏற்படுத்துதல்.

 

இதன் பணிகள் இன்ஷாஅல்லாஹ் விரைவில் நடைபெறஉள்ளது. இருக்கும் மதரஸா நல்லமுறையில் நடைபெறவும், மற்ற முஹல்லாக்களிலும் இதே போன்று ஆரம்பிக்கவும், எதிர்கால சமுதாயம் ஒழுக்கமும் ஒளியும் மிக்கதாக இருக்கவும் துஆ செய்யவும்.

 

 பீர் முஹம்மத் (நெல்லை ஏர்வாடி) 
http://www.nellaieruvadi.com/
http://www.nellaieruvadi.com/

 

UNWO : http://www.unwo.org/

 






Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..