சகோதரர் ஜின்னா கோடியில் ஒருவர் -அவர்களின் மறைவு.

Posted by Haja Mohideen (Hajas) on 12/19/2013 12:42:12 PM

வந்தான் வாழ்ந்தான் போனான் என்ற வகையில் நம்மில் அனைவரது வாழ்வும் சென்று கொண்டிருக்கிறது.
ஏர்வாடியின் பெயரை உலக சரித்திரத்தில் சொல்லும்படி யாராவது இருந்திருக்கிறார்களா?
எத்தனைபேர் வாழ்ந்திருக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை.

ஆனால் சகோதரர் ஜின்னா கோடியில் ஒருவர்.

அவரது பெயர் அவரது சேவைகளால் உலகெங்கும் உள்ள பார்வையற்றவர்களாலும், அதைப்பற்றி தெரிந்துகொள்ளும் அனைவராலும் உச்சரிக்கப்படும்.

'ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப் படுவீர்கள்'. ( அல்குர்ஆன் 21:35)

நாம் எதைக்கொண்டு சோதிக்கப்படுகிறோம் என்பதை அனைவரும் சிறிதாவது சிந்திப்போமாக.

இறைவன் சகோதரர் ஜின்னா அவர்களின் மறுமையை சிறப்பானதாக ஆக்கிவைப்பானாக.
அவனது நல்லடியார்கள் கூட்டத்தில் அவரையும் சேர்த்தருள்வானாக.
சுவனபதியில் அல்லாஹ் அவருக்கு சிறப்பான இடத்தை கொடுத்தருள்வானாக. ஆமீன்
 
ஏர்வாடியில் இவரைத் தெரியுமா? :S.M.A.ஜின்னா அவர்கள்
இருளில் இருந்து வெளிச்சத்துக்கு! 

1985-ம் ஆண்டு 400 சதுர அடியில், நான்கு பார்வையற்ற மாணவர்களைக்கொண்டு ஜின்னா என்பவரால் தொடங்கப்பட்டதுதான் 'இந்தியப் பார்வையற்றோர் சங்கம்’. இன்று 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 300 மாணவர்கள் தங்கிப் படிக்கும் வசதிகளுடன் கம்பீரமாக வளர்ந்து நிற்கிறது. 

'பார்வையைத்தான் இழந்துள்ளோம். எங்கள் எண்ணங்களையும் சக்திகளையும் அல்ல...’ என்பதை நிரூபித்துவிட்டார்கள் மதுரை சுந்தர ராஜபுரத்தில் இருக்கும் இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தினர்.

இந்தச் சங்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ஹாங்காங்கில் இருக்கும் 'ஹெல்ப் தி ப்ளைண்ட் ஃபவுண்டேஷன்’, மூன்று கோடி ரூபாயை அள்ளிக் கொடுக்க 18 ஆயிரம் சதுர அடியில் புதிதாக ஒரு மேல்நிலைப் பள்ளி கட்டி முடிக்கப்பட்டட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த அதன் திறப்பு விழாவில்...
ஹாங்காங்கைச் சேர்ந்த ஃபவுண்டேஷன் நிறுவனர் டி.கே. படேல் மற்றும் நித்தி படேல் ஆகியோர் 'வரலாற்றுப் பாதையில் ஐ.ஏ.பி.’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள். டி.கே.படேல் பேசும்போது, ''ஹாங்காங்கில் வாழும் இந்தியர்கள் உதவி செய்ததால் மட்டுமே இத்தகைய வெற்றி சாத்தியம் ஆயிற்று. நாங்கள் இதுவரை 25 பார்வையற்ற பட்டதாரிகளை உருவாக்கி உள்ளோம். 
தமிழகத்தின் பிரமுகர்கள் நிறையப் பேர் இந்த விழாவுக்கு வந்துள்ளார்கள். நான் அவர்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். பார்வை இல்லாமல், பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவில் தளராத முயற்சியுடன் படித்துப் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக் கொடுங்கள்'' என்றார்.

தொடர்ந்து தமிழகத்தில் பயிலும் 10 மற்றும் ப்ளஸ் டூ படிக்கும் பார்வையற்ற மாணவர்களுக்காக, பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் ப்ரெய்லி முறையில் உருவாக்கிய கோனார் தமிழ் உரைப் புத்தகத்தை வெளியிட்டபோது, மாணவர்களிடையே பலத்த கரகோஷம். அமெரிக்காவின் நாசாவில் இருந்து வானவியல் பற்றிய புத்தகமும் ப்ரெய்லி முறையில் அச்சிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது கூடுதல் ஆச்சர்யம்.

காமன்வெல்த் லீக் எஜுகேஷன் ஃபண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜூடித் பிஷேர், ''நாங்கள் இதுவரை 26 நாடுகளில் 400 பெண் குழந்தைகளைப் படிக்கவைத்து இருக்கிறோம். இப்போது மதுரையில் இந்தப் பள்ளியில் இருந்து 10 பெண் குழந்தைகளுக்கு உதவ முடிவு செய்து உள்ளோம். இந்தத் திட்டத்தின் மூலம் உலகின் பல்வேறு கலாசசாரங்களை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.

(என் விகடன்)
 

ஏர்வாடியில் இவரைத் தெரியுமா? :

S.M.A.ஜின்னா அவர்கள் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு!

 

1985-ம் ஆண்டு 400 சதுர அடியில், நான்கு பார்வையற்ற மாணவர்களைக்கொண்டு ஜின்னா என்பவரால் தொடங்கப்பட்டதுதான் 'இந்தியப் பார்வையற்றோர் சங்கம்’. இன்று 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 300 மாணவர்கள் தங்கிப் படிக்கும் வசதிகளுடன் கம்பீரமாக வளர்ந்து நிற்கிறது. 'பார்வையைத்தான் இழந்துள்ளோம். எங்கள் எண்ணங்களையும் சக்திகளையும் அல்ல...’ என்பதை நிரூபித்துவிட்டார்கள்

மதுரை சுந்தர ராஜபுரத்தில் இருக்கும் இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தினர். இந்தச் சங்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ஹாங்காங்கில் இருக்கும் 'ஹெல்ப் தி ப்ளைண்ட் ஃபவுண்டேஷன்’, மூன்று கோடி ரூபாயை அள்ளிக் கொடுக்க 18 ஆயிரம் சதுர அடியில் புதிதாக ஒரு மேல்நிலைப் பள்ளி கட்டி முடிக்கப்பட்டட்டுள்ளது. சமீபத்தில் நடந்த அதன் திறப்பு விழாவில்... ஹாங்காங்கைச் சேர்ந்த ஃபவுண்டேஷன் நிறுவனர் டி.கே. படேல் மற்றும் நித்தி படேல் ஆகியோர் 'வரலாற்றுப் பாதையில் ஐ.ஏ.பி.’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள்.

டி.கே.படேல் பேசும்போது, ''ஹாங்காங்கில் வாழும் இந்தியர்கள் உதவி செய்ததால் மட்டுமே இத்தகைய வெற்றி சாத்தியம் ஆயிற்று. நாங்கள் இதுவரை 25 பார்வையற்ற பட்டதாரிகளை உருவாக்கி உள்ளோம். தமிழகத்தின் பிரமுகர்கள் நிறையப் பேர் இந்த விழாவுக்கு வந்துள்ளார்கள். நான் அவர்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். பார்வை இல்லாமல், பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவில் தளராத முயற்சியுடன் படித்துப் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக் கொடுங்கள்'' என்றார். தொடர்ந்து தமிழகத்தில் பயிலும் 10 மற்றும் ப்ளஸ் டூ படிக்கும் பார்வையற்ற மாணவர்களுக்காக, பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் ப்ரெய்லி முறையில் உருவாக்கிய கோனார் தமிழ் உரைப் புத்தகத்தை வெளியிட்டபோது, மாணவர்களிடையே பலத்த கரகோஷம்.

அமெரிக்காவின் நாசாவில் இருந்து வானவியல் பற்றிய புத்தகமும் ப்ரெய்லி முறையில் அச்சிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது கூடுதல் ஆச்சர்யம். காமன்வெல்த் லீக் எஜுகேஷன் ஃபண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜூடித் பிஷேர், ''நாங்கள் இதுவரை 26 நாடுகளில் 400 பெண் குழந்தைகளைப் படிக்கவைத்து இருக்கிறோம். இப்போது மதுரையில் இந்தப் பள்ளியில் இருந்து 10 பெண் குழந்தைகளுக்கு உதவ முடிவு செய்து உள்ளோம். இந்தத் திட்டத்தின் மூலம் உலகின் பல்வேறு கலாசசாரங்களை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார். (என் விகடன்)



  • Mohideen Annaviஇதற்கு அதிக அளவில் "லைக்" கொடுத்து சகோதரர் ஜின்னா அவர்களை கண்ணியப்படுத்துமாறு அன்புடன் வேண்டுகிறேன்
     
  • ஹஸன் ஷேக்இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!
    அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக !
    வல்ல ரஹ்மான் அவரது மண்ணறையை ஒளிமயமாக்கி வைப்பானாக.
    அவருக்கு உயர்பதவியாம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை வழங்குவானாக.
    அவரது பிரிவால் துயருற்றுள்ள அவரின் அன்பு குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய பொறுமையைக் தந்தருள்வானாக.
    ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
 
 
 
 
அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.....

மதுரைய்யில் வசிக்கும், என்னுடைய்ய பெரியாப்பா மகன் என் பாசத்துக்குரிய காகா S.M.A.ஜின்னா அவர்கள் இன்று 19-12-2013 மதியம் 02:15 மனிக்கு வபாத் ஆனார்கள்.

இடம்; மதுரை சுந்தரராஜன்பட்டி. I.A.B. பள்ளி வளாகம்.

அன்னார், சிக்கந்தர் என்ற அப்துல் ரஹீம், மற்றும் ரோஷன் ஆகியோரின் தகப்பனார் ஆவார்கள்.

அன்னார், மர்ஹூம்: உதுமான் கனி, மர்ஹூம்: ரஹீம் ஹாஜியார், மர்ஹூம்: ஹாஜா, மர்ஹூம்: பதர்னிஷா ஆகியோரின் சகோதரராவார்.

மர்ஹூம்: S.A.மீரான் அவர்களின் மருமகனாவார்.

என்னுடைய்ய வாப்பாவின், கூடபிறந்த காகாவின் மகனாவார்.

தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி: +91 9600 822994
+91 9600 822995.

அன்னார்: I.A.B பள்ளியின் தாளாளர் ஆவார்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்யவும்.

இறைவா ! இவரை மன்னித்து அருள் புரிவாயாக !

இவரது பிழைகளை பொறுத்தருள்வாயாக !

இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக !

இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக !

பனிகட்டி, ஆலங்கட்டி, மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக !

அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக !

நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக!

இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக!

வல்ல ரஹ்மான் அவரது மண்ணறையை ஒளிமயமாக்கி வைப்பானாக.

அவருக்கு உயர்பதவியாம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை வழங்குவானாக.

அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் நீ மன்னிப்பாயாக!

அவரது பிரிவால் துயருற்றுள்ள அவரின் அன்பு குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய பொறுமையைக் தந்தருள்வானாக.

إِنّا لِلّٰهِ وَإِنّا إِلَيْهِ رَاجِعُونَ

நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம். {அல்குரான் 2 : 156 }
 

 






Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..