EMAN - UAE ஹஜ் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

Posted by S Peer Mohamed (peer) on 10/24/2013 1:44:12 PM

 அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்    நெல்லை ஏர்வாடி சகோதரர்களால் 1978 ஆம் ஆண்டு அமீரகத்தில் ஏர்வாடி முஸ்லிம் சங்கம் ( Eruvadi Muslim Association - EMAN) ஆரம்பிக்கப்பட்டது.இந்த சங்கத்தின் சார்பாக இந்த வருடம் ஹஜ் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ஹஜ் பெருநாள் தினத்தன்று ( 15.10.2013, செவ்வாய்கிழமை) துபையில் நடைபெற்றது.

EMAN - UAE

 ஆரம்பமாக அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. விருந்து ஏற்பாடுகளை சகோதரர்கள் முஹம்மத் அலி (ENOC), இப்ராஹீம் (ஷார்ஜா) , சேக் உமர் (அபுதாபி), அமீர் புஹாரி, அஷ்ரஃப் ( REFRI KING) ஆகியோர் தலைமையிலான குழு சிறப்பாக செய்திருந்தது.

 

 மதிய உணவிற்குப் பிறகு மதியம் 2.30 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. நிகழ்ச்சியின் தளகர்த்தகராக சகோதரர் அல்தாப் விளங்கினார். துவக்கத்தில் சகோதரர் முஹைதீன்  (”அலி ஸ்டோர்ஸ்”) அவர்களின் மகள் மௌஃபிதா ஷுரா ஹூஜூராத்தின் 10 முதல் 13 வரையுள்ள வசனங்களை கேட்பவர்களின் மனதிற்கு இதமாக இனியக் குரலில் ஓதினார். இந்த வசனத்தின் மொழியாகத்தினை சகோதரர் பீர் முஹம்மத் ( ராஸல் கைமா) தெளிவாக வாசித்துக்காண்பித்தார்கள்.

 

 சகோதரர் யாஸீன் ”திரும்பிப் பார்க்கிறோம்” என்றத் தலைப்பில் ஈமான் அமைப்புக் கடந்து வந்த பாதையை வந்திருந்த மக்களுக்கு விளக்கினார்கள். ஈமான் அமைப்பினை ஆரம்பித்த சகோதரர்கள், அதற்கு உறுதுணையாக இன்றளவும் இருந்து வரும் சகோதரர்கள் என அவர்கள் பல சகோதரர்களை பட்டியலிட்டுக் காண்பித்தார்கள். தற்போது அமீரகத்தில் வசித்து வரும் சகோதரர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 350 ஐக் கடந்து விட்டதால், அனைத்து சகோதரர்களுக்கும் மாதந்தோறும் தொலைபேசியில் கூட்டத்திற்காக அழைப்பு விடுப்பது கடினம் என்பதால் வாய்ப்புள்ள சகோதரர்கள் மாதாந்திரக் கூட்டங்களில் தவறாது கலந்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்கள். அவ்வாறே சந்தாத் தொகையினையும் முறையாக தந்து உதவுவது ஈமானின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது என்பதை வலியுறுத்தினார்கள்.

 

 

 

 பின்னர் சகோதரர்கள் ஜமால் ( Matrix) மற்றும் முஹம்மது ஹூசைன்  (சின்னாப்பா - லெப்பை வளைவுத் தெரு) ஆகியோர் ”முயன்றால் முடியும்” என்ற தலைப்பில் தங்களின் முயற்சியினால் அடைந்துள்ள முன்னேற்றத்தினை எடுத்துக் கூறினார்கள். முயன்றால் அனைவரும் முன்னேறலாம் என்பதை மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இருவரும் எடுத்துரைத்தார்கள். சகோதரர் ஜமால் தனது உரையில், வாகன ஓட்டுனராக ஏர்வாடியில் இருந்து படிப்படியாக முன்னேறி தற்போது லண்டனுக்கு சென்று தேர்வு எழுதி வந்ததைக் குறிப்பிட்டது இளந்தலைமுறையினரின் எழுச்சிக்கு பாடமாக இருந்தது என்றால் மிகையாகாது. தேர்வு முடிவினை எதிர்பார்த்திருக்கும் அவர் தேர்வில் சிறப்பான வெற்றி பெற அனைவரும் துஆ செய்யக் கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறே தொழில்நுட்ப படிப்பினை ( ITI) முடித்து பல்வேறு தடைகளையும் மீறி தற்போது அமீரகத்தில் கிரேன் ஆபரேட்டராக உயர்ந்துள்ள சகோதரர் ஹூசைனின் உரையும் ஊக்கமிக்க ஒன்றாக அமைந்தது. ஒவ்வொரு இடங்களில் பணி புரியும் போதும், மேற்கொண்டு எதனைப் படித்தால் முன்னேற முடியும் என்பதனை தேர்வு செய்தது தங்களின் வெற்றிக்குப் பக்கபலமாக அமைந்தது என்பதையும் இருவரும் சுட்டிக்காட்டினர்.

 

 அவ்வாறே, 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த சகோதரர் ஜமால், தனது சகோதரன் மேற்கொண்டு படிக்க வேண்டும் எனஅளித்த ஊக்கத்தினைக் குறிப்பிட்டதும், ”எந்த வேலையினை முதலில் ஆரம்பித்தாலும் கடினமாகத்தான் இருக்கும், ஆனால் அதில் முயன்று வெற்றி பெற்று விட்டால் அடையும் மகிழச்சி அலாதியானது” என தனது தந்தையின் அறிவுரையை சகோதரர் ஹூசைன் குறிப்பிட்டதும் குடும்பத்தினரின் ஊக்கம் ஒருவரின் வெற்றிக்கு எந்தளவு முக்கியம் என்பதை பறைசாற்றியது.    

ஈமானின் ஜகாத் குழு சார்பாக உரையாற்றிய சகோதரர் M I ஷேக்பீர், ஈமான் கடந்த வருடம் ஜகாத் வசூலித்து செய்த உதவிகளையும் தற்போதுள்ள வருடத்தின் இலக்கினையும் எடுத்துரைத்தார்கள். முதல் வருடத்திலே ஈமானின் மீது நம்பிக்கை வைத்து, ஜகாத் தொகையினை வழங்கிய அனைவருக்கும் நன்றித் தெரிவித்த அவர் ஈமான் சார்பாக ஏர்வாடியில் ஜக்காத் குழு ஆற்றி வரும் பணிகளையும் சுட்டிக் காட்டினார்கள். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஏர்வாடியில்,  3 தனியார் வட்டி நிறுவனங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஜகாத் தொகையினை அனைவரும் முறையாக அளிக்காமல் இருப்பதே இந்த நிலைக்கு காரணம் என்பது சிந்தனைக்குரிய செய்தியாக அமைந்தது. ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட இடங்களில் அல்லாஹ் ஜக்காத்தினை குறிப்பிடுவதாக சுட்டிக்காட்டிய சகோதரர் ஷேக்பீர், இந்தக் கடமையை அனைவரும் தவறாது நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.    பின்னர் அஸர் தொழுகைக்கான இடைவேளை விடப்பட்டது.

 அஸர் தொழுகைக்குப் பின்னர் உரையாற்ற வந்த ஈமானின் கௌரவ நிர்வாகி ஷம்சுதீன் ஷாபி, ”வாழ்வு வளம்பெற” என்ற தலைப்பில் சிறந்தக் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்கள். நமது இம்மை, மறுமை வாழ்வு இரண்டும் சிறப்பானதாக அமைய வேண்டுமானால், அது அதிகளவில் மக்களுக்கு உதவுவதன் மூலமாகவே அமையும் என்பதை இஸ்லாமிய அடிப்படையில் விளக்கினார்கள். மக்களின் கருத்துக்களை வைத்தே ஒருவர் சொர்க்கத்திற்கு செல்வார் என்பதையும், மற்றொருவர் நரகத்திற்கு செல்வார் என்பதையும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெளிவுபடுத்தி இருப்பதைச் சுட்டிக்காட்டி, மனிதர்களுடன் நன்முறையில் பழக வேண்டும் என எடுத்துரைத்தார்கள். இந்த உரையில் மறைந்த சகோதரர் மர்ஹூம் மீராசாஹிப் காக்கா ( 5வது தெரு) அவர்களை ஒரு முன்னுதாரணமாக சுட்டிக் காண்பித்தது வந்திருந்த சகோதர சகோதரிகளை நெகிழ வைத்தது.

 பிறகு சகோதரர் பீர் முஹம்மத் (Etihad Airways), ”பிரகாசமான எதிர்காலம்” என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்கள். இதில் ஏர்வாடியில் நடைபெற்ற ஈமானிய மொட்டுக்கள் நிகழ்ச்சிக்காக ஈமானின் மக்தப் குழுவினர் சிறப்பாக செயல்பட்டதையும், தொடர்ந்து மக்தப் மூலமாக நல்ல மாற்றங்களை ஏர்வாடியில் நடைமுறைப்படுத்த அந்தக் குழு தொடர்ந்து செயலாற்றும் என உறுதியளித்தார்கள். இதற்காக UNWO போன்ற தன்னார்வக் குழுக்களுடன் இணைந்து ஈமான் பணியாற்றும் எனவும் தெரிவித்தார்கள்.

 பின்பு ஈமானின் மற்றொரு கௌரவ நிர்வாகியான சகோதரர் முஹம்மத் அலி (ENOC), ”சிகரத்தினைத் தொடுவோம்” என்ற தலைப்பில் சிந்தனை உரை நிகழ்த்தினார்கள். ஒவ்வொருவருக்கும் திறமை உண்டு என்பதையும் அதனை முழுமையாகத் தன்னம்பிக்கையோடு பயன்படுத்தினால் அனைவரும் சிகரத்தினைத் தொடலாம் என்பதையும் பல்வேறு உதாரணங்களுடன் விளக்கினார்கள். ஏர்வாடியினைச் சார்ந்த நான்கு சகோதரர்கள் தங்களது வாழ்வில் எவ்வாறு தன்னம்பிக்கையுடன் முன்னேறினார்கள் என்பதை அவர்கள் விளக்கியது சிறப்பாக இருந்தது. இந்த தகவல் கூட்டத்திற்கு வந்திருந்த பலருக்கு புதிய தகவலாகவும், உந்துசக்தியாகவும் இருந்தது.    முன்னேறுவதற்கு பேச்சுத் திறனும், சிந்தனைத் திறனும் அவசியம் என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். ஒவ்வொருவரும் தங்களது இலக்கினை நிர்ணயித்து அதனடிப்படையில் முயற்சியில் ஈடுபட்டிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள்.

 

 பின்னர் ”அமீரக வாழ்க்கை ஆனந்தமா, ஆதங்கமா?” என்ற தலைப்பில் பார்வையாளர்கள் கலந்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சகோதரர் ஆரிப் (NMC) மற்றும் சகோதரர் அப்துல்லாஹ் ஆகியோர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர். சகோதரர் ஆரிப் ஆனந்தம் என்றும், சகோதரர் அப்துல்லாஹ் ஆனந்தம் பாதி, ஆதங்கம் பாதி என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

 இந்த இருவரின் கருத்தினை மேற்கோளாகக் கொண்டு, இறுதியாக நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்து கலந்துக் கொண்ட சகோதரர் ஜலாலுதீன் ( மேற்பார்வையாளர், www.understandqurantamil.com) இறையச்சத்தினை வளர்க்க எளிய வழிகள் என்ற தலைப்பில் மக்களின் மனம் கவரும் உரையினை நிகழ்த்தினார்கள். மன்னிக்கும் மனப்பான்மையைக் கைக்கொள்வதால் நமது தக்வா உயரும் என்பதை குர்ஆன் வசனங்களுடன் அவர்கள் விளக்கிய விதம் சிறப்பாக இருந்தது. தக்வாவிற்கு உதாரணமாக அவர்கள் அனைவரையும் எழுப்பி உடல் பயிற்சி மூலமாக தெளிவுபடுத்தியது  அருமை.  உரையினை நேரமின்மைக் காரணமாக விரைவாக முடித்ததால் வந்திருந்த சகோதரர்கள் ஏமாற்றம் அடைந்ததையும் காண முடிந்தது.

   நிகழ்ச்சிகளின் இடையில் பார்வையாளர்களுக்கான வினாடி வினா நடைபெற்றது. இதனை சகோதரர்கள் ஹனீப் மற்றும் அப்துல் பாஸித் ஆகியோர் தொகுத்து வழங்கினர். வினாடி வினாவில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர். சரியான பதிலைச் சொன்ன சகோதர சகோதரிகளுக்கு புத்தகங்களும், தவறான பதிலைச் சொன்னவர்களிடமிருந்து நன்கொடையும் பெற்றுக் கொள்ளப்பட்டது. நேரமின்மைக் காரணமாக வினாடி வினா நிகழ்ச்சி சுருக்கப்பட்டது. ஈமானின் பணிகள் சம்பந்தமாக சகோதரர் ஹனீப் ஆற்ற இருந்த உரையும் ரத்து செய்யப்பட்டது. இன்ஷா அல்லாஹ் ஈமானின் பணிகள் பற்றிய தகவல் உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட மின் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

 

 வளாகத்தின் ஒரு இடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கையில், மற்றொரு இடத்தில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிராஅத் போட்டி, ஹதீஸ் போட்டிகள், விளையாட்டு போட்டிகள் அவர்களுக்காக நடைபெற்றன. இவற்றினை சகோதரர்கள்  முஹைதீன் (UAE Exchange), முஹைதீன் (City Gold), அஹமத் மீரான் மற்றும் இர்ஷாத் ஆகியோர் நடத்தினர். அனைத்துக் குழந்தைகளுக்கும் சிறப்பு விருந்தினர் ஜலாலுதீன் சிறப்பு பரிசுகளை வழங்கினார்கள்.

 நிநிகழ்ச்சிக்கான டெக்னிக்கல் குழுவினர் (ஹனீப், சர்ஃபராஸ், பீர் முஹம்மத்) ஆடியோ, வீடியொ மற்றும் பவர் பாயிண்ட் பிரசென்டேசன் ஆகியவற்றை கவனித்துக் கொண்டனர்.

 நிகழ்ச்சிக்கான புகைப்படங்களை, ஈமானுக்கான அழைப்பிதழ்கள் மற்றும் சுவரொட்டிகளை சிறப்பாக வடிவமைத்துத் தரும் சகோதரர் முகைதீன்( LV street)  அவர்கள் எடுத்தார்கள். இவர் ஓமானில் சலாலாவில் பணி புரிந்து வருகிறார்.

 நிகழ்ச்சி சம்பந்தமான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை emandubai@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.    மேலதிக புகைப்படங்களை கீழ்கண்ட சுட்டியில் காணலாம்.    http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=83_2013_EID-I

 http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=83_2013_EID-II    

 

ஜஷாக்கல்லாஹ் ஹைரா...






Other News
1. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
2. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
3. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
4. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
5. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
6. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
7. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
8. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
9. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
10. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
11. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
12. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
13. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
14. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
15. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
16. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
17. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
18. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
19. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
20. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
21. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
22. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
23. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
24. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
25. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
26. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
27. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
28. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
29. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
30. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..