மாரடைப்பின் முக்கிய அறிகுறிகள் தெரியுமா?

Posted by Nsjohnson (nsjohnson) on 9/18/2013 9:37:40 PM

மாரடைப்பின் முக்கிய அறிகுறிகள் தெரியுமா? . By ஆக்ஸிமெட் மருத்துவமனை, அண்ணா சாலை, நந்தனம்,சென்னை. First Published : 19 September 2013 06:19 AM IST . புகைப்படங்கள் நெஞ்சு வலி என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலருக்கு அது மிக அதிகமாகவும், சிலருக்கு மிகக் குறைவாகவும் காணப்படும். நீங்கள் கூறும் அறிகுறிகளைப் பொருத்துத்தான் மருத்துவர் அதற்கான பரிசோதனைகளை பரிந்துரைப்பார். அதனால் வலியின் அளவைப் பொருத்து நோயின் தீவிரத்தை கணிக்க முடியாது. அது போலத்தான் இதய நோயுள்ளவர்களும் உணருவார்கள். ஆனால் ஒரு சிலரோ ஒன்றுமே பிரச்னை இல்லாதபோதும் அதிகமான நெஞ்சு வலியை உணருவார்கள். சிலருக்கு பிரச்னை பெரிதாகவும் அறிகுறிகள் மிகக் குறைவாகவும் இருக்கும். உங்கள் மருத்துவர் நோய் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க வேண்டும். நீங்கள் உணரும் வலியினை துல்லியமாக கணித்து அவரிடம் விவரிக்க வேண்டும். அதாவது நெஞ்சு வலி ஒரே இடத்தில் மட்டும் உள்ளதா? ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவுகின்றதா? எந்த நேரங்களில் இருக்கிறது? ஓய்வெடுத்தால் சரியாகிவிடுகிறதா அல்லது மாறுபடுகிறதா, மிதமாக வலிக்கிறதா அல்லது தீவிரமாக தொடர்ந்து வலிக்கிறதா என்ற கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க வேண்டும். முக்கிய அறிகுறிகள் என்ன? பொதுவாக ஒவ்வொரு இதய நோய்க்கும் ஒவ்வொரு விதமான மாறுபட்ட அறிகுறிகள் தோன்றும். சுத்தமான இரத்தம் இதயத்திற்கு வருவது தடைபடுவதால் இதயத் தசைகள் பகுதியாகவோ (அ) முழுவதுமாகவோ இயங்காததால் மாரடைப்பு ஏற்படுகிறது. தீவிரமான நெஞ்சு வலி, உயர் இரத்த அழுத்தம், மேலும் வலி இடது தோள் மற்றும் கை, தாடை, பற்கள் போன்றவற்றுக்கும் பரவுதல் ஆகியவை மாரடைப்பின் முக்கிய அறிகுறிகளாகும். ஆண்களுக்கு மார்புக்கு நடுவில் பாரம் மற்றும் அழுத்தத்தை உணர முடியும். அதேபோல் பெண்களுக்கு நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு விட முடியாமல் திணறுதல், அதிக வியர்வை, வாந்தி, மயக்கம், தலைவலி ஆகியவை அனைத்தும் ஏற்பட்டு அசெüகரியத்தை உணருவார்கள். இதய நோயின் வகைகள்: "ஆஞ்சைனா' என்ற இதய நோய், இதயத்துக்கு வரும் ஆக்ஸிஜன் தற்காலிகமாக தடைபட்டு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவதால் ஏற்படுகிறது. உடற்பயிற்சிக்குப் பின் நெஞ்சு வலி ஏற்படுவது, மேலும் மன அழுத்தத்தின் போது மூச்சுத் திணறல், இதய அழுத்தம், மற்றும் பாரமாக இருப்பது, தலைவலி, நெஞ்செரிச்சல், அதிகம் வியர்த்து கொட்டுவது போன்றவை இதன் அறிகுறிகளாகும். இதயத்தின் இரத்த ஓட்டம் தடைபடுவதால் உருவாகும் தொடர் நெஞ்சு வலி காரணமாகவும் "ஆஞ்சைனா' எனும் இதய நோய் ஏற்படுகிறது. இது முக்கியமாக இரவில் ஏற்பட்டு தூங்க முடியாமல் செய்துவிடும். மேல்கூறிய அறிகுறிகளை கேட்டறிந்த மருத்துவர் மேலும் சில உடல் பரிசோதனைகள் செய்த பிறகு இதய நோயை உறுதிப்படுத்துவார். அதாவது முதலில் நோயாளியின் உதடு மற்றும் நகங்களில் நீல நிற மாற்றம் தோன்றினால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாகியிருக்கும். மேலும் தொடும்போது உடல் குளிர்ந்தோ, சூடாகவோ இருக்கிறதா என்று பார்ப்பார். மேலும் கால் மூட்டுகளில் வீக்கம் இருந்தால் அந்த இடங்களில் சரியான இரத்த ஓட்டம் இல்லாமல் இருக்கலாம். நாடித்துடிப்பில் மாற்றம் உள்ளதா என்றெல்லாம் பரிசோதிப்பார். மேலும் மருத்துவரால் தனது ஸ்டெதஸ்கோப்பின் மூலம் இதயத்தின் துடிப்பு மற்றும் "ரிதம்' வைத்து எந்த வகையான இதய நோய் என்பதைக் கண்டறிய முடியும். இதயத்துடிப்பு வேகமாக உள்ளதா அல்லது மெதுவாக தடைபட்டுக் கேட்கிறதா, இடைவெளி சரியாக இருக்கிறதா என்பதை வைத்து நோய் இதயத்தின் எந்த பகுதியில் உள்ளது. அதாவது இதயத் தசைகளிலா அல்லது இரத்தக் குழாய்களிலா என்பதைக் கூறமுடியும். இதய இரத்த ஓட்டம் மூலம்... பொதுவாக இதயத்தில் இரத்த ஓட்டம் சத்தமில்லாமல் இருக்கும். ஆனால் அது ஷ் ஷ்........ என்ற சத்தத்துடன் இரைச்சல் அடங்காமல் அதிகமாக இருந்தால் இரத்தக் குழாயில் கசிவு ஏற்பட்டு இரத்தம் இதயத்துக்கு வராமல் பின்னோக்கிப் போகிறது என்று கணிக்கலாம். இதய ஓலி முறையற்றும், வலியுடனும் இருந்தால் தமனிகளில் கடினமான பிளேக் எனும் கொழுப்பு அடைபட்டிருப்பதாகக் கொள்ள வேண்டும். மேலே கூறிய காரணங்களைப் பொருத்து மருத்துவர் அதற்கேற்ற பரிசோதனைகளை பரிந்துரைப்பார். பெரும்பாலானவை ஊசி துளைக்காதவை. அதாவது ஊசி துளைக்காத பரிசோதனைகள் வலி மற்றும் ஆபத்து இல்லாதது. உஇஏஞ, 3ஈஇஇஎ ("ஆஞ்சியோ கார்ட்டோகிராம்') போன்ற சோதனைகளுக்கு ஆக்ஸிமெட் மருத்துவமனையில் தங்கும் அவசியமில்லை. தற்காப்பு காரணமாக இதுபோல் சோதனைகளை நோய்வருமுன் செய்து நாம் நன்றாக இருக்கிறோமா என்று தெரிந்து கொள்வது நல்லது.






Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..