சவூதியில் பணியாற்றும் சகோதரர்களின் கவனத்திற்கு....

Posted by Haja Mohideen (Hajas) on 3/1/2013

                                         சவூதியில் பணியாற்றும் சகோதரர்களின் கவனத்திற்கு....

     

                                                         கீழை ஜஹாங்கீர் அரூசி-தம்மாம்

 சவூதியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் எனதருமை தமிழ் சொந்தங்களே,

 சமீப காலமாக நமதருமை சகோதரர்களில் சிலர் விடுமுறையில் தாயகம் செல்வதற்காக விமான நிலையம் சென்ற போது எதிர்பாரா விதமாக அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.

 தாயகமும் செல்ல முடியாமல் விமான நிலையத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை தாங்கிக்கொள்ளவும் முடியாமல் விக்கித்து நின்ற அவர்களின் பரிதாப நிலை கண்டு என்னால் கண்ணீர் சிந்த மட்டுமே முடிந்தது.

 இப்போது என் கதியும் அதே நிலைதான்.விசயத்திற்கு வருகிறேன்,

 நாம் நமது அத்தியாவசிய பயன்பாட்டிற்காக நமது இகாமாவில் ( STC,ZAIN,MOBILY )போன்ற கம்பெனிகளில் சிம் கார்டு பெற்று அதை முறையாக பயன்படுத்தி வருகிறோம்.

 நம்மில் சிலர் ஒன்று அல்லது இரண்டு சிம் கார்டுகள் வைத்திருப்பது இயல்பு.

 இப்போது பிரச்சினை என்னவென்றால் நமக்கே தெரியாமல் நம்முடைய இகாமாவில் வேறு யார்,யாரோ சிம் கார்டுகளும்,நெட்கார்டுகளும் பெற்று பயன்படுத்திவருவதால் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நாம் பலியாகி விடுகிறோம்.

 இப்படி ஒருவர் இகாமாவில் வேறொருவர்  நெட்சிம்கார்டு வாங்கி தாறுமாறாக பயன்படுத்தி ஆயிரக்கணக்கான சவூதி ரியால்களுக்கு பில் பாக்கி வைத்து விட்டதால்,

 யாருடைய பெயரில் சிம்பெறப்பட்டதோ அவர் ஏர்போர்ட்டை விட்டு வெளியேற முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டு விடுகின்றனர்.

 அப்படி திருப்பி அனுப்பப்பட்டவர்களில் ஒருவர்தான் தமிழ் சகோதரர்.

 நிலுவைத்தொகை முழுவதையும் திருப்பி செலுத்தாத வரை இந்த நபர் சவூதியை விட்டு வெளியேற முடியாது.

 இந்த தவறுகள் எப்படி நடக்கிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

 தற்போது எனது இகாமாவில் எனக்கே தெரியாமல் 9 சிம்கார்டுகளும்,5 நெட்சிம்கார்டுகளும் STC மூலம் பெறப்பட்டு யார் யாரோ பயன் படுத்தி வருவதை கண்டு நொந்து போய் விட்டேன்.

 உடனடியாக  STC தலைமை அலுவலகம் சென்று புகார் செய்து விட்டேன்.

 அவர்களும் எனது புகாரை பதிவு செய்து விட்டு 24 மணி நேரத்தில் இல்லீகலாக செயல்படும் சிம்கார்டுகளின் சேவை நிறுத்தம் செய்யப்பட்டு விடும் என சொல்லி 5 நாட்களாகி விட்டன.ஆனாலும் இதுவரை நடவடிக்கை இல்லை.

 வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பதை போல் உணர்கிறேன்.

 இது போல எத்தனையோ நபர்கள் பாதிக்கப்பட்டு  சிம்கார்டு அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டிருப்பதை காண முடிகிறது.

 விஷயம் தெரிந்தவர்கள் சுதாரித்துக் கொள்கின்றனர் விஷயம் தெரியாதவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

 நமது இகாமாவில் எத்தனை சிம்கார்டு பயன்பாட்டில் உள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? 

 STC சிம்கார்டு வைத்திருப்பவர்கள்  902 என்ற எண்ணிற்கு 9988 என்ற எண்களை டைப் செய்து மெசேஜ் செய்தால் உடனே நமது இகாமாவில் எத்தனை சிம்கார்டுகள் உள்ளது என்ற விபரம் வந்து விடும்.

  STC சிம்கார்டு வைத்திருக்கும் சகோதரர்கள் உடனே உங்களது இகாமாவின் நிலைபாட்டை தெரிந்து கொள்ள முயற்சிக்கவும்.

ஏதேனும் பிரச்சினை இருந்தால் சம்பந்தப்பட்ட சிம்கார்டு தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் இது காலத்தின் மிக மிக அவசர அவசியமாகும்

 

 






Other News
1. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
2. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
3. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
4. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
5. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
6. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
7. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
8. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
9. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
10. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
11. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
12. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
13. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
14. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
15. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
16. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
17. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
18. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
19. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
20. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
21. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
22. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
23. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
24. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
25. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
26. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
27. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
28. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
29. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
30. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..