பஸ் படிக்கட்டு பயணத்தை தடுக்க பல நகரங்களில் ரெயிடு! சென்னையில் 500 மாணவர்கள் சிக்கினர்!!

Posted by Haja Mohideen (Hajas) on 12/13/2012

பஸ் படிக்கட்டு பயணத்தை தடுக்க பல நகரங்களில் ரெயிடு! சென்னையில் 500 மாணவர்கள் சிக்கினர்!!

Viruvirupu, Thursday 13 December 2012, 14:35 GMT
வலி ஒரு பக்கம், அபராதம் ஒரு பக்கம்!

வலி ஒரு பக்கம், அபராதம் ஒரு பக்கம்!

பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால், பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு கோர்ட்டில் சொல்லிய கையோடு, சுறுசுறு நடவடிக்கையில் இறங்கிவிட்டது. பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் போலீசார் இன்று சோதனை நடத்தினர். சென்னையில் மட்டும் 500 மாணவர்கள் பிடிபட்டனர். முதல் நாள் என்பதால் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சென்னை பெருங்குடியில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தபோதே, தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால், பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

அப்போது போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனரின் அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். “பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்” என்று அப்போது அவர் தெரிவித்திருந்தார். வழக்கு பதிவு செய்ய, பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்பவர்களை பிடிக்க வேண்டும் அல்லவா?

அதற்காகவே, போலீஸ் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது.

இன்று வீதிச் சோதனைகளில் இறக்கி விடப்பட்ட போலீஸார், பஸ் படிகளில் நின்று பயணம் செய்தவர்களை பிடித்து எச்சரித்தனர். அவர்களை இறக்கிவிட்டு, அடுத்த பஸ்சில் ஏற்றி அனுப்பினர். பஸ் நிறுத்தங்களில் போலீசார் மறைந்து நின்று கண்காணிக்கின்றனர். அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் டிரைவர், கண்டக்டர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

தானியங்கி கதவுகளை மூடாத பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெவ்வேறு நகரங்களில் போலீஸார், படிக்கட்டில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களை வீடியோ கேமராவிலும் படம் பிடித்து வருகின்றனர். மதுரை, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் வீதி சோதனைகளை நடத்தினர்.

கோவையில் படிக்கட்டில் பயணிகளை ஏற்றி சென்ற அரசு பஸ் கண்டக்டர்கள் 11 பேர் மற்றும் தனியார் பஸ் கண்டக்டர்கள் 30 பேர், அளவுக்குஅதிகமாக குழந்தைகளை ஏற்றிச் சென்ற 70க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் சிக்கினர். அவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது, பயணிகளை படிக்கட்டில் ஏற்றிச் செல்பவர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது. அதை மாற்றி, படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கும் அபராதம் விதிக்கும் திட்டத்தை போலீசார் பரிசீலனை செய்து வருகின்றனர்.

http://viruvirupu.com/2012/12/13/40460/






Other News
1. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
2. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
3. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
4. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
5. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
6. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
7. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
8. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
9. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
10. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
11. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
12. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
13. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
14. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
15. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
16. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
17. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
18. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
19. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
20. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
21. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
22. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
23. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
24. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
25. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
26. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
27. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
28. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
29. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
30. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..