ஈதுல் அழ்ஹா - ஹஜ்ஜு பெருநாள் குடும்பக் கூட்ட நிகழ்ச்சி

Posted by Mohamed Uvais (jasmin) on 11/19/2012

அளவற்ற அருளாளனான நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

பெருநாள் நிகழ்வு புகைப்படங்களைக் காண

http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=85_2012_EID_Function

ஏர்வாடி முஸ்லிம் கூட்டமைப்பு - EMAN

அமீரகம்.

ஈதுல் அழ்ஹா - ஹஜ்ஜு பெருநாள் குடும்பக் கூட்ட நிகழ்ச்சி

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் 26.10.2012 வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் எஜூகேஷணல் அகாடமி பள்ளிவாசலில் ஜும்மா தொழுஹைக்குப் பின் பள்ளி வளாகத்தில்  விருந்து பரிமாறப்பட்டு சரியாக 2.30 மணியளவில் பெருநாள் கூட்ட நிகழ்ச்சி ஆரம்பமானது.

சகோதரர் முகம்து அலி(enoc) தலைமையில் அப்துல்லாஹ் அவர்களின் மகள் ஆயிஷா சுபைதா கிராத் ஓத அதனின் விளக்கவுரையை சகோதரர் அப்துல் பாஸித் (cater pillar) அவர்கள் வாசித்தார்கள்.

ஈமான் செயலாளர் இப்ராஹிம் அவர்கள் "ஈமான் கடந்து வந்தபாதை"  என்ற தலைப்பில் 1977 வருடம் ஆரம்பிக்கப்பட்ட ஈமான், 2012 வருடம் வரை கடந்த 35 வருடமாக செய்து வந்த செயல் விபரங்களை பட்டியலிட்டு, மேலும் ஈமான் இனிமேல் இன்ஷாஅல்லாஹ் செய்யப்போகும் சேவைகளை குறித்தும் சொன்னார்கள்.

சகோதரர் முகமது அலி(enoc) அவர்கள் "ஈமான் ஜக்காத் கமிட்டி" பற்றி உரையாற்றினார்கள்.  ஜக்காத் வசூலிக்கப்பட்டு  இவ்வருடம் முதல் ஊரில் கொடுக்க ஏற்பாடு செய்து வருவதை குறித்தும், அதை விநியோகம் செய்யும் முறையில் முதலாவதாக செய்யும் போதுள்ள தாமதத்தை குறித்தும், இனி வரும் காலங்களில் அதை முறைபடுத்தி செய்வதை குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

ஈமானின் வளர்சிக்கு உறுப்பினர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டு  சகோதர, சகோதரிகளுக்கும்,

கருத்து கணிப்பு படிவம் கொடுக்கப்பட்டு அதை பூர்த்தி செய்து பெறப்பட்டது.

ஈமான் மக்கள் தொடர்பாளர் சகோதரர் அப்துல்லாஹ்(etisalat) அவர்கள் நடத்திய  "வினாடி வினா" வில் சகோதர, சகோதரிகள் அனைவர்களும் சரியான பதில் சொல்லி பரிசுடன் வெற்றி வாகை சூடினார்கள். இதில் சகோதரிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துக் கொண்டார்கள்.

சகோதரர்கள் முகைதீன்(uae exchange), முகைதீன்(city gold), பரீத் அஹமது(al bahar shipping), இவர்களின் சிறப்பான மேற்பார்வையில் அனைத்து சிறுவர் சிறுமியர் களுக்கு விளையாட்டு போட்டிகள், கிராத் போட்டிகள் நடத்தப்பட்டது..

சகோதரர் Eng. ஜலாலுதீன் அவர்கள் " நபிகள் நாயகமும் நாமும்" என்ற தலைப்பில்

சிறப்பான முறையில் உரை ஆற்றினார்கள்.வந்திருந்தவர்களின் அறிவு பசிக்கு  விருந்தாக இந்த உரை அமைந்தது.

சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட சகோதரர் Eng. ஜலாலுதீன் அவர்களுக்கு ஈமானின் சார்பாக நினைவு பரிசை சகோதரர் செய்யது (refri king) வழங்கி சிறப்பித்தார்கள்.

கிராத் போட்டி, விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு சகோதரர்கள் Eng. ஜலாலுதீன், முகமது அலி (enoc), இப்ராஹிம் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள்.

சகோதரர் யாஸீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.  ஈமானின் இக்கூட்ட நிகழ்ச்சியை சிறப்புடன் ஆக்கி தந்த வல்ல அல்லாஹ்விற்கு அனைத்துப் புகழும்.  இந்த நிகழ்விற்காக சுறுசுறுப்பாக பணியாற்றியஅனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.

இறுதியாக துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவு செய்யப்பட்டது.

ஈமான்.

அமீரகம்.






Other News
1. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
2. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
3. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
4. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
5. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
6. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
7. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
8. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
9. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
10. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
11. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
12. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
13. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
14. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
15. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
16. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
17. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
18. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
19. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
20. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
21. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
22. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
23. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
24. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
25. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
26. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
27. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
28. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
29. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
30. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..