வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி

Posted by Haja Mohideen (Hajas) on 7/24/2012

வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி

 ஜூலை 20,2012,16:52 IST

 
 
 

அது சென்னையில் உள்ள ஒரு பிரம்மாண்டமான கல்யாண மண்டபம். கல்யாணக்களை மண்டபம் முழுவதும் நிறைந்து இருந்தது. அதிகாலை 6 மணிக்கு பெண் மண்டபத்திற்குள் வரும்போது ஒன்பது கெஜ மடிசார் புடவை அணிந்த மங்களகரமான தோற்றத்துடன் சில பெண்கள், மணப்பெண்ணை வாய் நிறைய வரவேற்று அழைத்துச் சென்றனர். இதேபோல மாப்பிள்ளை வீட்டாரையும் முகம் முழுவதும் புன்னகை காட்டி அழைத்துச் சென்றனர்

அப்போதே ஆரம்பித்து திருமணம் முடியும் வரை அவர்கள் அங்குமிங்கும் ஓடி, ஓடி அனைவரையும் உபசரித்ததுடன் நிற்காமல், அனைவருக்கும் காபி, டீ மற்றும் பல்வேறு வித குளிர்பானம் கொடுப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்தனர். யார் இந்த மாமிகள் பெண் வீடா, மாப்பிள்ளை வீடா என்று கேட்காதவர்கள் குறைவு. ஆனால் இவர்கள் பெண் வீட்டைச் சேர்ந்தவர்களும் கிடையாது; மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்களும் கிடையாது.

பிறகு யார் என்கிறீர்களா? திருமணவீட்டில் சேவை செய்ய நியமனம் செய்யப்பட்டவர்களே இவர்கள். வேலையை வேலையாக செய்யாமல் ஒரு வேள்வி போல செய்யும் இவர்கள் யார்? என்பதை அறியும் ஆர்வம் ஏற்பட்டது. இவர்களில் ஒருவரானவரும் தலைவியுமான காயத்ரி என்பவரிடம் பேச்சு கொடுத்தோம். நிறைய சுவராசியமான விஷயங்களை சொன்னார்.

கும்பகோணத்தில் பிறந்த காயத்ரிக்கு தன் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றம் வரும் என்று அவரே எதிர்பார்த்தது இல்லை. பாங்கில் வேலை பார்க்கும் கணவர் நீலகண்டன், குழந்தைகள் ஸ்ரீராம், அபிநயா என குடும்பம் அமைதியாகத்தான் சென்று கொண்டு இருந்தது. அசாதாரண சூழ்நிலையில் கணவர் பாங்க் வேலையை விட்டுவிட செய்வதறியாத சூழ்நிலையில் சென்னைக்கு ரயிலேறினார்.

வாழ்க்கையில் ஜெயிக்கவேண்டும், பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக இருந்தவருக்கு எப்படி அடியெடுத்து வைப்பது என்பதில் குழப்பம் இருந்தது. அப்போதுதான் அவரது மாமனார் ராமய்யர் கற்றுக் கொடுத்த பல்வேறு வித சமையல் கைகொடுத்தது. அவர் குடியிருக்கும் பம்மல் பகுதியில் உறவினர் உதவியோடு சமையல் வேலைக்கு சென்றார்.

இது நடந்து பல ஆண்டுகளாகிவிட்டது, இப்போது இவரது வாடிக்கையாளர்கள் பலரே இவரது உறவினர்கள் போலாகிவிட்டனர். ஒருவர் இவரது சமையல் ருசி காரணமாக இவரை இங்கிலாந்திற்கே பலமுறை அழைத்துச் சென்றுள்ளார். பிராமணர்கள் வீட்டில் நடக்கும் சிறிய அளவிலான விழாவிற்கு சமைத்துக் கொடுப்பது என்பது இவரது பிரதான தொழில். பெரியவீட்டில் நடக்கும் கல்யாணங்களில் சேவை செய்ய செல்வது இவரது உபதொழில். அவர்களது தேவைக்கு ஏற்ப ஆட்களை அழைத்துச் செல்வார்.

காலையில் 4 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை இரவு 10 மணியானாலும் தொடரும், ஆனாலும் காயத்ரி தொய்வடைவதில்லை, காரணம் எந்த லட்சியத்துடன் சென்னைக்கு வந்தாரோ அந்த லட்சியம் நிறைவேறிக்கொண்டு இருப்பதானால். மகன் பொறியாளராகி வேலைக்கு செல்கிறார், மகள் பொறியாளர் படிப்பு முடிக்க போகிறார்.

நிறைய உழைச்சாச்சு நான்தான் சம்பாதிக்கிறேனே கொஞ்சம் ஒய்வு எடுக்கலாமே என்ற மகனின் ஆதங்கத்திற்கு காயத்ரியின் பதில், " நான் எப்போதுமே பணத்திற்காக வேலைக்கு சென்றதில்லை, வாழ்க்கையின் சந்தோஷமே மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதில்தானே இருக்கிறது, அந்த வகையில் எனது சமையல் கலையாலும், கல்யாண சேவையாலும் பலரை சந்தோஷப்படுத்த முடியறது, பகவான் விருப்பப்படுறவரை உழைப்போமே' 'என்கிறார் ஒரு சின்ன சிரிப்புடன்.

 

- எல்.முருகராஜ்

http://www.dinamalar.com/News_detail.asp?id=511971






Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..