புதுக்கோட்டை: அ.தி.மு.க.-வினரின் எளிமை கண்டு கண் கலங்கியது தேர்தல் கமிஷன்!

Posted by Haja Mohideen (Hajas) on 5/23/2012

புதுக்கோட்டை: அ.தி.மு.க.-வினரின் எளிமை கண்டு கண் கலங்கியது தேர்தல் கமிஷன்!

Viruvirupu, Wednesday 23 May 2012, 01:50 GMT
 

Pudukottai, India: The All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) candidate for the Pudukottai Assembly constituency, Karthik V.R. Thondaiman, filed his nomination papers yesterday (Tuesday). Accompanied by Adi Dravidar Welfare Minister N. Subramanian, Mr. Thondaiman submitted his papers to the Returning Officer at the office of the Revenue Divisional Officer.

 

புதுக்கோட்டை களை கட்டிவிட்டது. இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 18-ம் தேதி துவங்கியது. தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் அன்றே வேட்புமனு தாக்கல் செய்து விட்டார். அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் சற்று தாமதமாக, தலைமை குறித்துக் கொடுத்த நல்ல நாளில் தாக்கல் செய்துள்ளார்.

தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் மனு தாக்கல் செய்ய வரும்போது ‘ஆடம்பரமாக வந்து இறங்கினார்’ என்று குற்றம்சாட்டி, அவர்மீது வழக்கு பதிவு செய்துள்ளது தேர்தல் கமிஷன். அப்படியானால், அ.தி.மு.க. வேட்பாளர் எப்படி மனு தாக்கல் செய்தார்?

மிக எளிமையான கட்சியல்லவா அ.தி.மு.க.? அதன் வேட்பாளரும் சைக்கிள் கடைக்கு பஞ்சர் ஒட்டச்சென்ற பயணிபோல மிக எளிமையாக ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். அவருடன் துணைக்கு வெறும் 5 பேர் மட்டுமே வந்தனர்.

தேர்தல் கமிஷனுக்கு அளவற்ற ஆனந்தம். “அடாடா, ஆளும் கட்சியாக இருந்தாலும், இவ்வளவு எளிமையாக வந்திருக்கிறார்களே. அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் இந்த ஏழை பங்காளரைப்போல அடக்கமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தால், ட்ராஃபிக் ஜாம் ஏற்படாது. மக்களுக்கு இடைஞ்சல் ஏதும் கிடையாது”

இதனால், தே.மு.தி.க. வேட்பாளர்மீது பாய்ந்த வழக்கு, அ.தி.மு.க. வேட்பாளர்மீது பாயாது.

அப்படியிருந்தும், விஜயகாந்த் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களிடம், “தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்கிறது“ என்ற குற்றச்சாட்டு இருந்து எழப் போகின்றது.

“தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு பொய்யானது. அ.தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்து போன எளிமையான காட்சியை குற்றம் சாட்டுபவர்கள் பார்த்திருக்க வேண்டும். பரிதாப கோலத்தில் வெறும் 5 பேருடன் வந்த வேட்பாளரைப் பார்த்து, ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்களுக்கே கண்களில் ஜலம் தழும்பியது” என்று தேர்தல் கமிஷன் சார்பில் சொல்லப்படலாம்.

அதற்கு விஜயகாந்த், “தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு உள்ளேயே குடியிருக்கிறார்களா? அந்த அலுவலகத்துக்கு வெளியே என்ன நடந்தது என்று நிஜமாகவே அவர்களுக்கு தெரியாதா?” என்றும் கேட்டாலும் கேட்கலாம்.

அப்படி என்னதான் நடந்தது, வெளியே?

5 பேருடன் அலுவலகத்துக்குள் புகுந்த அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான், அதற்குமுன் புதுக்கோட்டை டவுன் ஹாலிலிருந்து அட்டகாச ஊர்வலம் ஒன்றில் அழைத்து வரப்பட்டார். அந்த ஊர்வலம் பிருந்தாவனம், கீழராஜ வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக ஆர்.டி.ஓ. அலுவலகத்தை நோக்கி வந்தது.

ஆளும் கட்சியினரின் ஊர்வலம் என்பதால், அது செல்லும் பாதைகளில், கேவலம் பொதுமக்களை நடமாட விடலாமா? ஊர்வலம் கடந்து செல்லும்வரை ட்ராஃபிக் ஸ்டாப்!

“ஒரு வழியாக ஊர்வலம்தான் முடிந்து விட்டதே” என்று வீதிகளில் காத்திருந்த பொதுமக்கள் நகர முயன்றால், அதுவும் முடியவில்லை. காரணம், மெயின் ஊர்வலத்துக்கு பின் மினி வி.ஐ.பி. ஊர்வலம் வந்துகொண்டிருந்தது.

வேட்பாளரின் ஊர்வலத்துக்குப் பின்னடி, தமிழக அமைச்சரவையே ஊர்வலமாக வந்துகொண்டிருந்தது.

அமைச்சர்கள், “வேட்பாளரோடு ஊர்வலமாக சென்றால் நாளைக்கே யாராவது (விஜயகாந்த்) பிரச்னையைக் கிளப்பலாம்” என்று நினைத்திருக்கலாம். அல்லது, “இந்த ஆள் (கார்த்திக் தொண்டைமான்) இப்பதானே சட்டசபைக்கு வர்ராரு. சீனியரான நாம அவரை ஊர்வலமாக அழைத்துச் செல்வதா?” என்றுகூட நினைத்திருக்கலாம்.

எப்படி நினைத்தார்கள் என்பது முக்கியமல்ல, வேட்பாளரின் ஊர்வலத்துக்குப் பின்னாடி சற்று தூரத்தில், அமைச்சர்களின் கார் ஊர்வலம் வந்தது என்பதுதான் முக்கியம்.

இன்னமும் எம்.எல்.ஏ. ஆகாத கார்த்திக் தொண்டைமானின் ஊர்வலத்துக்கே ட்ராஃபிக் நிறுத்தப்படுகிறது என்றால், ஏற்கனவே எம்.எல்.ஏ.வாகி, அத்துடன் அமைச்சர்களாகவும் மாறி, தற்போது ‘புதுக்கோட்டை தற்காலிக தலைமைச் செயலகத்தில்’ பணிபுரியும் அமைச்சர்களின் ஊர்வலத்துக்கு ட்ராஃபிக்கை நிறுத்த மாட்டார்களா?

நிறுத்தினார்கள். இதனால், அமைச்சர்கள் கடந்து செல்லும்வரை மக்கள் கால்கடுக்க காத்திருக்க நேரிட்டது.

நொந்துபோன மக்களில் சிலர் மட்டும், “அட பாவம் சார் அவங்க (அமைச்சர்கள்)… அம்மா வர்ராங்க என்றால் இதே அமைச்சர்கள் வீதியோரமாக கால்கடுக்க காத்திருப்பதில்லையா?” என்றார்கள்.

“நாங்களாவது ரிலாக்ஸ்டாக காத்திருக்கோம்.. அவுங்க பணிவாக, ஆங்கில எழுத்து C போல தாமும் வளைந்து, கையில் ஒரு பெரிய பூங்கொத்தையும் அல்லவா சுமந்து கொண்டு, அம்மா வரும்வரை காத்திருக்க வேண்டும். தலை நிமிர்ந்தால், ‘பணிவு போதாது’ என்று பதவி காலி! அப்படி முதுகு வலிக்க கஷ்டப்பட்ட அமைச்சர்கள் செல்வதற்காக, நாம சில நிமிடங்கள் காத்திருப்பது தப்பில்லை” என்று தம்மைத் தாமே தேற்றிக் கொண்டார்கள்.

இப்படி தடபுடலாக ஊர்வலம் வந்த வேட்பாளர்தான், ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குள் பவ்வியமாக 5 பேருடன் வந்து, தேர்தல் கமிஷனின் சிலாகிப்புடன்,  மனு தாக்கல் செய்தார்.“இவுக ரொம்பவும் எளிமையானவங்க சார்”

http://viruvirupu.com/aiadmk-candidate-files-nomination/18263/






Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..