“இன்னமும் சில நிமிடங்களில் எமது ரகசியம் சிக்கிக் கொள்ளப் போகிறது”

Posted by Haja Mohideen (Hajas) on 12/4/2011

“இன்னமும் சில நிமிடங்களில் எமது ரகசியம் சிக்கிக் கொள்ளப் போகிறது”

Saturday 03 December 2011, 10:05 GMT

Tyre, Lebanon: The Israeli army yesterday (Friday) detonated an espionage device in southern lebanon that had been monitoring a communications network, Shiite militant group Hezbollah said.

A Hezbollah official in southern lebanon told “The Israeli army today detonated an espionage apparatus latched onto a communications network between the villages of Srifa and Deir Kifa by drone after the Islamic resistance (Hezbollah) succeeded in uncovering the device.”

ஜேம்ஸ்-பாண்ட் திரைப்படங்களில் வருவதுபோன்ற சுவாரசியமான ரகசிய ஆபரேஷன் நேற்று (வெள்ளிக்கிழமை) தெற்கு லெபனானில் நடைபெற்றுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் நேற்று தமது (லெபனான்) நாட்டுக்குள் ரகசியமாக இயக்கிய உளவு பார்க்க வைத்திருந்த கருவி ஒன்றை அழித்து விட்டுச் சென்றிருப்பதாக ஹிஸ்பொல்லா அமைப்பு கூறியுள்ளது.

இஸ்ரேலிய ராணுவம் வழமையாக பயன்படுத்தும் எம்.க்யூ-1 ரக ஆளற்ற உளவு விமானம்

இவர்கள் குறிப்பிடும் உளவு பார்க்கும் கருவி, இஸ்ரேலுக்குச் சொந்தமானதுதான். லெபனானுக்கே தெரியாமல், லெபனானுக்குள் இஸ்ரேலிய உளவுத்துறையால் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்பதே குற்றச்சாட்டு.

கருவி இயங்கும் விஷயத்தை லெபனானில் உள்ள ஹிஸ்பொல்லா அமைப்பு கண்டுபிடித்து அணுகுமுன், இஸ்ரேலிய உளவு விமானம் ஒன்று வந்து, கருவியை குண்டுவீசி அழித்துவிட்டு சென்றிருக்கிறது.

இந்த அதிரடிச் சம்பவத்தின் பின்னணி என்ன?

தெற்கு லெபனானில் தமக்கு தெரியாமலேயே ஒரு கம்யூனிகேஷன் நெட்வேர்க் இயங்கி வருவதை ஹிஸ்பொல்லா அமைப்பின் உளவுத்துறை கண்டுபிடித்திருக்கின்றது.

அந்த நெட்வேர்க், லெபனானின் தென்பகுதியில், ஸ்ரிஃபா, டெய்ர்-கிஃபா ஆகிய இரு கிராமங்களுக்கு மத்தியில் எங்கோ ஒரு இடத்திலுள்ள கருவியால் கன்ட்ரோல் பண்ணப்படுகின்றது என்பதையும் ஹிஸ்பொல்லா உளவுத்துறை தமது சிக்னல் டிட்டெக்டர்கள் மூலம் கண்டு பிடித்தனர்.

இந்த இரு கிராமங்களுக்கும் இடையே ஒரு காட்டுப் பகுதி உள்ளது. அதற்குள் எங்கேயோதான் இந்தக்

ஸ்ரிஃபா காட்டுப் பகுதியில் கருவியை தேடும் ஹிஸ்பொல்லா போராளிகள்

கருவி  இருந்து இயங்க வேண்டும் என்று புரிந்துகொண்ட ஹிஸ்பொல்லா, தமது போராளிகளை காட்டுப் பகுதிக்குள் நேற்றுக் காலையில் அனுப்பி வைத்தது. அங்கே தேடுதல் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டார்கள்.

காட்டுக்குள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ஹிஸ்பொல்லா ஆட்கள் தமக்கிடையே வாக்கி-டாக்கி மூலம் பேசிக்கொண்ட சிக்னல்களை, காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த உளவு பார்க்கும் கருவி ரிசீவ் பண்ணிக் கொண்டது. அந்தக் கருவியை இஸ்ரேலில் இருந்து மானிட்டர் பண்ணிக்கொண்டிருந்த இஸ்ரேலிய உளவுத்துறையினர், தமது உளவு பார்க்கும் கருவியை ஹிஸ்பொல்லா நெருங்கி விட்டது என்பதைப் புரிந்து கொண்டனர்.

ஹிஸ்பொல்லாவிடம் தமது கருவி அகப்படுவதை தவிர்க்க, அதை அழித்துவிடுவதை தவிர வேறு வழியில்லை என்று புரிந்துகொண்ட அவர்கள், இஸ்ரேலிய ராணுவத்துக்கு அறிவிக்க, அவர்கள் தமது ஆளற்ற உளவு விமானம் ஒன்றை லெபனானிலுள்ள காட்டுக்கு மேலே அனுப்பி, குண்டுவீசி கருவியை முற்றாக அழித்து விட்டனர்.

இப்போது அந்தக் காட்டுப் பகுதியை ஹிஸ்பொல்லா அமைப்பினர் முற்றுகையிட்டு சோதனையிட்டு வருகின்றனர். காட்டுக்குள் வேறு ஏதாவது கருவிகளோ, அல்லது கருவியைப் பொருத்துவதற்காக வந்த இஸ்ரேலிய உளவுத்துறையினரோ இன்னமும் மறைந்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக ஹிஸ்பொல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

http://viruvirupu.com/israel-detonates-communications-spy-device/tamil-news/11805/






Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..