அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கிடுக்கிப்பிடி

Posted by S Peer Mohamed (peer) on 11/15/2011

அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கிடுக்கிப்பிடி

சென்னை : "பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ்., முறையில் வருகைப் பதிவேடு பராமரிக்கும் முறை, அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்' என்ற அறிவிப்பை, கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இதன் மூலம், பள்ளிக்கு ஆசிரியர்கள் வந்ததும், அவர்களது வருகைப் பதிவு குறித்த விவரங்கள், அந்தந்த வட்டார வள மையத்துக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும்.

தமிழக மாவட்ட கலெக்டர்கள் இரண்டாம் நாள் மாநாடு, நேற்று காலை நடந்தது. பிற்பகலில், போலீஸ் எஸ்.பி.,க்கள் கலந்து கொண்ட மாநாடு நடந்தது. கலெக்டர்கள் மாநாட்டில், ஒவ்வொரு கலெக்டர்களிடமும் மாவட்டத்தில் உள்ள தேவை குறித்து கேட்டறிந்து, தனது இறுதி உரையில், அவற்றை அறிவிப்புகளாக முதல்வர் வெளியிட்டார்.

 

கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் நிறைவுரை:நிர்வாகம் செய்யும் நடைமுறைகள், தற்போது சிக்கலாகிவிட்டன. மக்களின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும். எனது அரசின் முக்கிய கவனம் வேளாண்மைத் துறை மீது தான். அனைத்துமே சீசனுக்குரியது. தேவை முடிந்த பின், உரங்களை வினியோகிப்பது, "கிரிமினல் வேஸ்ட்' ஆகும். எனவே, கலெக்டர்கள் அறிவுப்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும்.எனக்கு தனிப்பட்ட முறையில் விருப்பமானது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும், கல்வி கற்க, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க வாய்ப்பளித்து, சமூகத்துக்கு மிகவும் அர்த்தமுள்ள, மதிப்புமிக்க சொத்தாக மாற்ற வேண்டுமென விரும்புகிறேன். எனவே, பள்ளிகளின் சுற்றுச்சூழல், விடுதிகள் மற்றும் அவற்றில் வழங்கப்படும் உணவுகள் குறித்து, கலெக்டர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பல நலத்திட்டங்கள் உள்ளன. துறைகளுக்கு இடையேயான சிக்கல் ஏதும் ஏற்படாத வகையில், கலெக்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகின்றன. ஆனால், நாம் இலக்கை எட்ட முடியவில்லை.பெண்கள் சிறப்பு இலக்காக இருக்க வேண்டும். பெண்களின் ஆரோக்கியம், சுகாதாரம், கல்வி மற்றும் வருமான ஈட்டு திட்டங்களில், கலெக்டர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் பொருளாதார வளத்தைப் பெருக்கத் தான், கால்நடைகள் வழங்கப்படுகின்றன. மிக்சி, கிரைண்டர்களும், அவர்களது தினசரி சிரமத்தைக் குறைக்கவே வழங்கப்படுகின்றன. குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டு வாசலுக்கு தண்ணீர் வராவிட்டாலும், அருகிலாவது கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 

அரசு நிலங்களை பொறுத்தவரை, சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்படுவது, முதலில் அரசு சொத்து தான். கோவில் நிலங்கள், உள்ளாட்சி நிலங்கள், மத்திய அரசின் புறம்போக்கு நிலங்கள் என அனைத்து வித நிலங்களும், கண்காணிப்பு மற்றும் உளவுக்கு உட்பட்டவை.கலெக்டர்கள் குழுவுடன், மாதந்தோறும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் கலந்தாய்வு செய்ய திட்டமிட்டுள்ளேன். அப்போது, மதிய உணவு மையங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், மகளிர் சுகாதார வளாகங்கள், கிராமப்புற சாலைகள், ரேஷன் கடைகள் போன்றவற்றை, கலெக்டர்கள், வீடியோ முறையில் எனக்கு காண்பிக்க வேண்டும்.எஸ்.எம்.எஸ்., அடிப்படையிலான வருகைப் பதிவேடு முறை, அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

 

ஏற்கனவே, எஸ்.எம்.எஸ்., முறையில் வருகைப் பதிவேடு பராமரிக்கும் நடைமுறை, கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இதை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப் போவதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதன்படி, ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டதும், அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அப்பகுதி வட்டார வள மையத்துக்கு, எத்தனை ஆசிரியர்கள் வந்துள்ளனர், யார், யார் வரவில்லை என்பது பற்றிய விவரத்தை, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்ப வேண்டும். அதனடிப்படையில், பள்ளிக்கு வந்த ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவு பராமரிக்கப்படும்.

 

இதன் மூலம் பள்ளிக்கு வராமல் இருப்பது, ஒரு மணி நேரத்துக்கு பின் வருவது, விரைவாக புறப்பட்டுச் செல்வது போன்றவற்றை ஆசிரியர்கள் செய்ய முடியாது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உயரதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாத பள்ளிகளில், சரியாக பள்ளிக்கு வராமல் வேறு வேலையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு, இந்த வருகைப் பதிவு முறை, கிடுக்கிப்பிடியாக அமைந்துள்ளது.

 

Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=349344

 






Other News
1. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
2. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
3. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
4. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
5. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
6. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
7. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
8. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
9. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
10. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
11. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
12. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
13. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
14. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
15. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
16. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
17. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
18. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
19. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
20. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
21. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
22. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
23. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
24. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
25. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
26. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
27. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
28. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
29. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
30. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..