முஸ்லிம்களின் சவப்பெட்டிப் போராட்டம்...

Posted by S.i.sulthan (sisulthan) on 2/1/2011
முஸ்லிம்களின் சவப்பெட்டிப் போராட்டம்...
கிடுகிடு சென்னை
 

'நாய்களுக்கு இடம் ஒதுக்​கும் மாநகராட்சி, பாய்​(முஸ்லிம்)களுக்கு இடம் ஒதுக்காதா?’ -

முஸ்லிம்கள் இறந்தால் அடக்கம் செய்வதற்கு இடுகாடு கேட்டு சவப் பெட்டிகளோடு நடத்திய போராட்டத்தில்​தான் இப்படி ஆக்ரோஷக் குரல்கள்!

சென்னை வேளச்சேரி ஏரியாவில்தான் இந்தப் பிரச்னை. சமீபத்தில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்​துள்ள வேளச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். இந்தச் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 11 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கென்று தனியாக ஒரு இடுகாடு இல்லை என்பதுதான் பிரச்னையே!

அனைத்துப் பள்ளிவாசல்களின் ஜமாத்​தினரையும் ஒருங்கிணைத்து இதற்காகவே ஒரு போராட்டக் குழு அமைத்து இருக்கிறார்கள். இந்தப் போராட்டக் குழுவின் பொதுச் செயலாளர் சிராஜுதீனிடம் பேசினோம். ''வேளச்சேரியிலும் அதைச் சுற்றி இருக்கும் தரமணி, அடையாறு பகுதிகளிலும் பெரும் அளவில் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். ஆனால், எங்களுக்கென்று கபர்ஸ்தான் (இடுகாடு) இல்லை. வேளச்சேரி பகுதி உருவான போதே இந்துக்களின் மயான பூமிக்கு அருகிலேயே கபர்ஸ்தானுக்கும் இடம் ஒதுக்கினார்கள். ஆனால், முஸ்லிம்களுக்கு இதுவரை கொடுக்கவில்லை.

இதுபற்றி சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம்... மேயரையும் பார்த்துச் சொன்​னோம். 'வேளச்சேரி மண்டல அலுவலகத்துக்குப் போய் கேளுங்கள்!’ என்று சொன்னார்கள். மண்டல அலுவலகத்தில் கேட்டால், 'இடம் இன்னும் ஒதுக்க​வில்லை’ என்கிறார்கள். வேளச்சேரி பகுதிகளில் இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்றால், இப்போது ராயப்பேட்டை கபர்ஸ்​தானுக்குத்தான் வர வேண்டும். வேளச்சேரி ஏரியா ஒரு வழிப் பாதையாக மாறி இருப்பதால், ரொம்பவும் சுற்றித்​தான் ராயப்பேட்டைக்குப் போக வேண்டி இருக்கிறது. பொதுவாக இறந்தவர்களின் ஜனாஸாவை (இறந்தவர் உடலை) தூக்கிச் சென்று அடக்கம் செய்​வதையே முஸ்லிம்கள் விரும்புவார்கள். அதனால் கபர்ஸ்தான் ஓரளவாவது பக்கத்தில் இருந்தால்தான் வசதி. நாங்கள் கலர் டி.வி. வேண்டும், நிலம் வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை. இறந்தவர்களை புதைப்பதற்கு இடம்தானே கேட்கிறோம். இதைத் தரக்கூட ஆட்சியாளர்களுக்கு மனமில்லையே! அவர்கள் இதயத்தைக் கல்லால் படைத்துவிட்டானா இறைவன்?'' பொங்கினார்.

மனுக்கள் எழுதி மாய்ந்தும்... அதிகாரிகளைப் பார்த்து சோர்ந்தும் போனவர்கள் அடுத்த கட்டமாகத்தான் இந்தப் போராட்ட ஆயுதத்தைக் கையில் எடுத்து இருக்கிறார்கள். 'மாநக​ராட்சி நோக்கி சவப்பெட்டி ஊர்வலம்’ என்று முஸ்லிம்கள் அறிவிக்கவே... தேர்தல் காய்ச்சலில் கிடந்த கரை​வேட்டிகள் அரண்டு போனார்கள். உடனே காக்கி​கள் தலையிட்டு, ''போராட்டம் வேண்டுமானால் நடத்திக் கொள்ளுங்கள். ஆனால், சவப்பெட்டி மட்டும் வேண்​​டாம்!'' என்று போராட்டக்காரர்களிடம் கெஞ்சிக் கேட்டிருக்கிறார்கள். ஆனாலும் விடாப்பிடியாக, கடந்த 28-ம் தேதி வேளச்சேரியில் சவப்பெட்டி ஊர்வல ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக அர்ச்சனை முழக்கங்களை அள்ளிக் கொட்டினார்கள். சவப்பெட்டிப் போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்த போலீஸ், என்ன நினைத்ததோ... உடனே விடுதலை செய்துவிட்டது.

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத் தலைவர் முனீரிடம் பேசினோம். ''இந்த விஷயத்தை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக கனிமொழி எம்.பி-யை  நேரில் சந்தித்து விஷயத்தைச் சொன்னோம். அவரும் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக வாக்கு​றுதி கொடுத்தார். ஒரு மாதம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்​படவில்லை என்பதால்தான், சந்தூக் (சவப்பெட்டி) ஏந்தி ஆர்ப்​பாட்டம் நடத்தினோம். ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்ததுமே சவப்பெட்டி போராட்டம் நடத்தாதீர்​கள்’ என்று அதட்டி, போலீஸ் தடுக்க முயன்றது. ஆனால், எங்கள் கோரிக்கை மீது கனிவு மட்டும் காட்டவில்லை. மயிலாப்பூர் ஏரியாவில் இறந்த நாய்​களைப் புதைப்பதற்​காக கடந்த மாதம் மாநகராட்சி இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறது. அந்த நாய்களைவிட மனிதர்கள் கேவலமாகி விட்டார்களா? ஒரு பகுதி புதிதாக உருவாகும்போது, அங்கே அடிப்படை வசதி​களை அரசு​தான் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்து, கிறிஸ்துவர்களுக்கு எல்லாம் வேளச்சேரி ஏரியா​வில் இடுகாடு ஒதுக்கியவர்கள், முஸ்லிம்களை மட்டும் புறக்கணித்து இருக்கிறார்கள். உடனடியாக இந்தப் பிரச்​னைக்குத் தீர்வு காண வேண்டும். இல்லை​என்றால், இறந்தவர்களின் உடல்களை ரிப்பன் மாளி​கைக்கே தூக்கிவந்து போராட்டம் நடத்துவோம். வேளச்​சேரி ஏரியாவில் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு வீடு இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, புதிதாக வேளச்சேரி தொகுதி உருவாகி இருப்பதால், இங்குதான் ஸ்டாலின் போட்டியிடுவார் என்று பேச்சு இருக்கிறது. அவர் போட்டியிட்டாலும்... அல்லது அவரது அணியில் யார் போட்டி​யிட்டாலும், இந்தப் பகுதியில் இருக்கும் முஸ்லிம்களை ஒன்று திரட்டித் தோற்கடித்துக் காட்டு​வோம்...'' என்றார் ஆவேசமாக.

என்னதான் நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள சென்னை மாநக​ராட்சி மேயர் மா.சுப்ரமணியத்​திடம் பேசினோம். ''குடியிருப்பு பகுதியில் இடுகாடு ஒதுக்க முடி​யாது. அதனால் வேறு இடம் தேடிக்​கொண்டு இருக்கிறோம். இதற்​கிடையே, தற்காலிகமாக ஆலந்தூர் பகுதியில் இடம் ஒதுக்க ஏற்பாடுகள் நடக்கிறது. தேர்தல் நேரம் என்பதால் இப்போது இதைவைத்து அரசியல் செய்கிறார்கள்!'' என்றார்.

- எம்.பரக்கத் அலி

http://new.vikatan.com/article.php?aid=2283&sid=70&mid=2

முஸ்லீம்கள் இறந்தால் புதைப்பதற்க்கு இடமில்லை என்கிறார்கள்? காயிதேமில்லத்துக்கு நான் மணிமண்டபம் கட்டவில்லையா?முஸ்லீம்களுக்கு என் மனதில் எப்போதுமே இடமிருக்கிறது, இனி அவர்கள் சந்தூக் என சொல்வதை பிண நல்லடக்க பேழை என்று பேர் மாற்றம் செய்கிறேன் என கலைஞரிடமிருந்து முரசொலியில் ஒரு கடிதம் வரும். அந்தால விரல சூப்பிகிட்டு ஓட்டு போடவேண்டியதுதானே நாம்? முட்டா து.....ங்குரத நல்லாவே புரிந்து வைத்திருக்கும் கில்லாடி அவர்!!






Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..