பெற்ற பிள்ளையிருந்தும் நடுத்தெருவில் அனாதை பிணமாக கிடந்த தொழிலதிபர்

Posted by Haja Mohideen (Hajas) on 1/14/2011

பெற்ற பிள்ளையிருந்தும் நடுத்தெருவில் அனாதை பிணமாக கிடந்த தொழிலதிபர்

ஜனவரி 14,2011,23:31 IST

சென்னை: நிர்கதியாக விடப்பட்ட முன்னாள் ரியல் எஸ்டேட் அதிபர், சாலையில் அனாதை பிணமானார். பல லட்சம் ரூபாய் கடன் காரணமாக, மகன் மற்றும் உறவினர்கள், அவரின் உடலை வாங்க மறுத்ததால், தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், தொழிலதிபர் உடலை அடக்கம் செய்ய, திருவான்மியூர் போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

 

சென்னை மேற்குமாம்பலம், ஆர்.கே.புரம், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ரகு(53). இவரது மனைவி லட்சுமி. குடும்ப பிரச்னை காரணமாக, லட்சுமி கணவரை பிரிந்து மும்பையில் உள்ள மகளுடன் வசித்து வருகிறார். ரகுவின் தாய் சரஸ்வதி, சகோதரி ராதா, மகன் வினய்(22) ஆகியோர், திருவான்மியூர், மாலாபி அவென்யூவில் வசித்து வருகின்றனர். வினய் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ரகு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் பார்த்துவந்தார். அதில் ஏற்பட்ட பலத்த நஷ்டம் காரணமாக, 27 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டது. வீடுகட்ட பணம் கொடுத்தவர்கள் தொடுத்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., பிரிவில் நிலுவையில் உள்ளது.

 

சொத்து, பணம் ஆகியவற்றை இழந்ததால், குடும்பத்தினரால் தள்ளி வைக்கப்பட்ட ரகு, அனாதையாக திருவான்மியூர் வடக்கு மாட வீதி சாலையில் திரிந்தார். அவருக்கு, கடந்த 10ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், குளக்கரை சாலையில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் 108 க்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள டாக்டர்கள், ரகு அனாதை என்பதால், சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, மீண்டும் குளக்கரை பகுதியில் இறக்கிவிடப்பட்டார்.

 

இந்நிலையில், அவரின் உடல் நிலை மேலும் மோசமானது. ரகுவின் நிலை குறித்து, திருவான்மியூரில் உள்ள உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. ரகுவின் நெருங்கிய நண்பரான பெருங்குடி, ரத்னமணி நகரில் வசிக்கும் ரவி என்பவர், தகவலறிந்து, மீண்டும் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 11ம் தேதி மாலை ரகு இறந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிந்து, ரகுவின் மகன் வினயை தொடர்பு கொண்டு உடலை பெற்றுச் செல்லும் படி கூறினர். ஆனால், வினயோ," என் தந்தைக்கு எந்த சொத்தும் கிடையாது. அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் தான் உள்ளது. அவரது உடலை வாங்கி அடக்கம் செய்தால், கடன் காரர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிவரும். மேலும், என் தந்தை எங்களிடம் இருந்து பிரிந்து வாழ்ந்தார். அதனால், அவரது உடலை நான் வாங்க மாட்டேன்' என மறுத்ததோடு, போலீசாருக்கு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு விலகினார். மனைவி, மகன், மகள், உறவினர்கள் இருந்தும், அனாதை பிணமாகிப்போன ரகுவின் உடலை என்ன செய்வது என தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். அனாதை உடல்களை அடக்கம் செய்யும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=166257

 

True Falce - poombuhar,இந்தியா 2011-01-15 02:20:29 IST Report Abuse


அந்த குடும்பத்தாரின் செயலை நான் ஆதரிக்கிறேன், ஏன் என்றால் சம்பாதிக்கும் காலத்தில் கள்ள உறவாலும், கெட்ட நண்பர்களின் ஆலோசனையாலும் ,தன குடும்பம் ,மனைவி மகன் மகள் ,எல்லோரையும் மனம் புண் படுத்திவிட்டு ,பிறகு அவர்களுக்கு செய்யவேண்டிய முறைகளை செய்யலாம் ,இப்படி ஆட்டம் போட்டவனுகேல்லாம் இது ஒரு பாடம். இதை பார்த்தாவது ரகுபோல பழக்கம் உடையவர்கள் திருந்த ஒரு பாடம். சரியில்லாத தகப்பன்களால் ,பிள்ளைகள் ,மனைவிகள் ,மனம் உளைச்சலுக்கு உட்பட்டு எவ்வளவோ ,சந்தோசங்களை இழந்து ,சமுதாயத்திலும் ,உறவினர்களின் மதியிலும் அசிங்கபட்டும் ,கேவலப்பட்டும் ,இருப்பது ,பதிக்கப்பட்டவர்களுக்குதான் அதன் வலி தெரியும் ,நன்றி உங்களுடைய செயலுக்கு நன்றி வினை ,நான் ஆதரிக்கிறேன் ,சந்தோசமா பொங்கலை கொண்டாடுங்கள் நன்றி

 

M.A Syed Mohamed Rafeek - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் 2011-01-15 01:55:40 IST Report Abuse

மனிதனால் படைக்கபெற்ற பணத்திற்கு இருக்கும் மதிப்பு கடவுளால் படைக்கபெற்ற மனிதனுக்கு இல்லாதது விந்தையிலும் விந்தை ..........! இந்த சூழ்நிலை மறைந்தவரின் மகனுக்கும் வராது என்பது என்ன நிச்சயம் ? விழி இருக்கும்போதே விழித்துகொள் மானிடா......! மானிடப்பிறவின் மதிப்பை அறிந்துகொள் மானிடா......!! உதிர்ந்தவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம் . M A S பண்ணை காரியமங்கலம் திருவாரூர் ஜில்லா






Other News
1. 26-09-2026 நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவிடம் SDPI மகளிர்அணியினர் கோரிக்கை - S Peer Mohamed
2. 28-08-2026 திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி விண்ணப்பம் - S Peer Mohamed
3. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
4. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
5. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
6. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
7. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
8. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
9. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
10. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
11. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
12. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
13. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
14. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
15. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
16. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
17. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
18. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
19. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
20. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
21. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
22. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
23. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
24. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
25. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
26. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
27. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
28. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
29. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
30. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..