செங்கல்தேரி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீக்கப்படுமா?

Posted by Haja Mohideen (Hajas) on 10/25/2010

களக்காடு செங்கல்தேரி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீக்கப்படுமா?

சு. இராமையா


First Published : 25 Oct 2010 01:12:46 PM IST

Last Updated :

 


களக்காடு, அக். 24: களக்காடு மலையில் உள்ள செங்கல்தேரிக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் தரப்பில் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

 களக்காட்டிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது செங்கல்தேரி. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

 களக்காடு புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள செங்கல்தேரி, சுற்றுலாப் பயணிகளின் கோடை வாசஸ்தலமாகத் திகழ்கிறது. இங்குள்ள வனங்களின் வனப்பும், குளிர்ச்சியும் உடலுக்கும், மனதுக்கும் மகிழ்வைத் தருகிறது.

 சுமார் 350 ச.கி.மீ. பரப்பளவில் பரந்து, விரிந்து காணப்படும் களக்காடு புலிகள் காப்பகத்தில் செங்கல்தேரி, நெட்டேரியன்கால் அணை, நாய் உருண்டான்பாறை அருவி, குளிராட்டி அருவி, கருங்கல் கசம் அருவி, தேங்காய்உருளிச் சிற்றருவி, கோழிக்கால்,  தலையணை ஆறு உள்ளிட்ட நீரோடைகள் உள்ளன.   மேலும் புலிகள் காப்பகத்தில் மான், மிளா, யானை, புலி, சிறுத்தை, ராஜநாகம், காட்டெருமை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளும், பல்வேறு பறவைகள் மற்றும் அரிய வகைத் தாவரங்களும் உள்ளன. 

 செங்கல்தேரிக்கு சற்று மேலே கருமாண்டி அம்மன் கோயில் உள்ளது. இதனருகே தான் களக்காடு மலையில் உற்பத்தியாகி ஓடிவரும் பச்சையாற்று தண்ணீர் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து ஒரு சிறிய பகுதி களக்காடு நோக்கியும், மற்றொரு பெரிய பகுதி மணிமுத்தாறு நோக்கியும் பாய்கிறது.

  செங்கல்தேரி சுற்றுலா மையத்தின் பருவகாலம் செப்டம்பர் முதல் மார்ச் வரை. இக்காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து குளியலிட்டு தங்கிச் செல்வர்.

இவர்கள் இங்கு தங்குவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நவீன தங்கும் விடுதிகளும், மரவீடும் உள்ளது. மழைப்பொழிவு இல்லாத வறட்சிக் காலங்களில் மட்டும் குறிப்பாக மே முதல் ஜூலை வரை மட்டுமே சுமார் 3 மாத காலம் இங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுவது வழக்கம். 

 ஆனால், இந்த ஆண்டு வறட்சிக் காலம் முடிவுற்று, மழை பெய்து தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் திறக்கப்பட்ட 2 மாதத்துக்குள் மீண்டும் திடீரென மூடப்பட்டுள்ளது. 

 மூடப்பட்டதற்கு வனத்துறையினர் கூறும் காரணம் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மதுஅருந்தி ரகளையில் ஈடுபடுகின்றனர் என்பதுதான்.

 செங்கல்தேரி செல்ல வேண்டுமென்றால் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனரிடம் முன்கூட்டியே உரிய முறையில் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள் களக்காடு வனச்சரக அலுவலக நுழைவுவாயிலில் கட்டணம் வசூலிக்கப்பட்டு, உரிய சோதனைகளுக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

  சுற்றுலாப் பயணிகளுடன் வனத்துறை பணியாளர் ஒருவர் உடன்சென்று அவர்களை கண்காணிக்கிறார். செங்கல்தேரி சுற்றுலா மையத்துக்கு அனுமதிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்குள் வனச்சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டால் தண்டிக்கப்படுவதுடன் அபராதமும் வசூலிக்கப்படும் என்ற எச்சரிக்கைக்கு பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

 இவ்வாறு அங்கு செல்பவர்களில் ஒரு சிலர் மதுஅருந்தி ரகளையில் ஈடுபட்டால் அவர்கள் மீது வனப்பாதுகாப்புச் சட்டப்படி வழக்குத் தொடர்ந்து உரிய அபராதம் வசூலிக்க வேண்டியது வனத் துறையினரின் கடமை.

  இதை விடுத்து, ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளை செங்கல்தேரிக்கு அனுமதிக்க மறுப்பதும், திடீர் தடை விதிப்பதும் முறையல்ல் என்று சுற்றுலாப் பயணிகள் புகார் கூறுகின்றனர்.

  செங்கல்தேரி செல்ல தடை விதிக்கப்பட்ட இரண்டொரு நாளில் களக்காட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள தலையணை ஆற்றுக்குச் செல்லவும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதன் பின்னர் பொதுமக்கள், அரசியல் கட்சியினரின் தீவிர எதிர்ப்பையடுத்து, தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் செங்கல்தேரி செல்ல விதிக்கப்பட்டது தடை இன்றளவிலும் நீடிக்கிறது.

  சுற்றுலாப் பயணிகளால் வனவிலங்குகளுக்கோ, வனவளத்திற்கோ பாதிப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.  சம்பந்தப்பட்ட வனத்துறை உயர் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்து செங்கல்தேரிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுவர அனுமதிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Thirunelveli&artid=322973&SectionID=139&MainSectionID=139&SEO=&Title=களக்காடு






Other News
1. 12-04-2026 அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகள்: இஸ்லாமாபாத்தில் என்ன நடந்தது?? - S Peer Mohamed
2. 08-04-2026 நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி - S Peer Mohamed
3. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
4. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
5. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
6. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
7. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
8. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
9. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
10. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
11. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
12. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
13. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
14. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
15. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
16. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
17. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
18. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
19. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
20. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
21. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
22. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
23. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
24. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
25. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
26. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
27. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
28. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
29. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
30. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..