Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
இவையும் ஈஸாலுஸ் ஸவாபுகளே!
Posted By:peer On 9/26/2026 5:39:52 AM

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, இறைத்தூதர் அவர்களே! எனது தாய் திடீரென மரணமாகி விட்டார். எந்த ஒரு செய்தியையும் இறுதி மரண சாசனமாகச் சொல்லவில்லை.

அதேசமயம், இன்னும் அவரது ஆயுளை இறைவன் நீட்டித்து வைத்திருந்தால்... அதிக தான தர்மங்கள் செய்திருப்பார் என்று நான் எண்ணுகிறேன்.

இந்த நிலையில், நான் எனது தாய்க்காக அவரது சார்பில் தான தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவருக்குக் கிடைக்குமா? என்று கேட்டார்.

அதற்கு நபியவர்கள், ஆம், கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறினார்கள்.

அன்பர்களே! நண்பர்களே! தோழர்களே! தோழிகளே!
இந்த நபிமொழி நிகழ்வின் பின்னணியில் அத்ஹம் ஷர்காவீ (ரஹ்) சில விளக்கங்களைத் தருகிறார்.

நமது பெற்றோரது மரணத்துக்குப் பிறகு அவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும்படியான பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

* வழிமுறை - 01

சிரமப்படும் உங்களது நெருங்கிய உறவினரது சிரமங் களை அகற்றி அவர்களது மனதைச் சந்தோசப் படுத்து கிறீர்கள்.

* வழிமுறை - 02

யாரோ ஒரு நோயாளிக்கு நீங்கள் மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுத்து மருத்துவ சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்கிறீர்கள்.

* வழிமுறை - 03

நன்றாகப் படிக்கும் அதேசமயம் மேற்படிப்பு படிக்க வசதி இல்லாத உங்கள் மஹல்லாவில் உள்ள ஒரு மாணவ ருக்கோ மாணவிக்கோ கல்வி உதவித்தொகை வழங்கி படிக்க வைக்கிறீர்கள்.

* வழிமுறை - 04

பெருநாளைக்கு புத்தாடை வாங்க போதுமான பணம் காசு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு புத்தாடை வாங் கித் தந்து அவர்களது இதயங்களை மகிழ்விக்கிறீர்கள்.

* வழிமுறை - 05

கடும் வெயிலில் வேலை செய்யும் ஒரு விவசாயிக்கோ தொழிலாளிக்கோ மனம் இறங்கி குளிர் பானம் ஒன்றை வாங்கித் தந்து தாகம் தணிக்கிறீர்கள்.

* வழிமுறை - 06

யாரோ ஒருவருக்கு ஒருவேளையோ அல்லது இரு வேளையோ உணவளிக்கிறீர்கள். அல்லது அதற்கான பணத்தைத் தருகிறீர்கள்.

இவ்வாறெல்லாம் செய்துவிட்டு, இறைவா! இவற்றை எனது பெற்றோருக்காக அவர்களது மறுமைப் பேற்றுக் காக செய்தேன் என்று நீங்கள் மனதில் நிய்யத் வைத்துக் கொண்டால்...

அவை அனைத்தும் உங்களது பெற்றோருக்கான மறுமைக் கணக்கில் நன்மைகளாக பதிவு செய்யப்படும்.

* இறையில்லங்களில் பணிபுரியும் அன்பான ஆலிம் சகோதரர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள்!

இறந்தவர்களுக்கு ஈஸாலுஸ் ஸவாப் (நன்மைகளைச் சேர்ப்பது) என்பது... வெறுமனே குர்ஆன் ஓதி ஃபாத் திஹா பண்ணுவது மட்டுமல்ல. மேற்கண்டவையும் 'ஈஸாலுஸ் ஸவாபுகளே' என்று உணர்த்துவோம், இன்ஷா அல்லாஹ்!

கிதாபுஸ் ஸுஹ்த் என்ற நூலில் இமாம் அஹ்மது (ரஹ்) பதிவு செய்துள்ள ஓர் இனிய செய்தி இது :

'ரபீஃ பின் குஸைம் என்பவர் பாதையில் நடந்து செல்லும்போது, அங்கே கிடக்கும் பாதசாரிகளுக்கு தீங்கு தரும் பொருள்களை அகற்றும் போது...

இது இறந்து விட்டா எனது தாய்க்கானது; இது எனது தந்தைக்கானது என்று கூறக் கூடியவராக இருந்தார்!' சுப்ஹானல்லாஹ்!

ஆக...மனிதர்களுக்கு நன்மை தரும் அனைத்தும் 'ஈஸாலுஸ் ஸவாபுகளே!' என்ற புரிதலை பொது மக்களிடம் விதைப்போம்.

இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் கூட நமது பெற்றோருக்கான ஈஸாலுஸ் ஸவாபுகளாக பதிவு செய்யப் படலாம், இன்ஷா அல்லாஹ்!
---------------------
* கே. ஆர். மஹ்ளரீ






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..